Author: Editor TN Talks
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவும் ஒன்று. ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு, கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் பிரதிநிதிக் குழு தற்போது லாட்வியா தலைநகர் ரிகாவை அடைந்துள்ளது. அங்கு இந்தியத் தூதர் நம்ரதா குமார் இக்குழுவை வரவேற்றார். வரவேற்பைத் தொடர்ந்து, கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, ரிகாவில் உள்ள தேசிய நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை, இடையர்பாளையம்- வடவள்ளி சாலையில் இன்று(31.05.2025) காலை பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அங்கு உள்ள சிக்னல் அருகே அந்த வழியாக சென்ற லாரி உரசியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில், ஹெல்மெட்டுடன் சேர்ந்து அப்பெண்ணின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்து கிடப்பதையும், லாரி ஒன்று சென்று கொண்டு இருப்பதையும் பார்த்தனர். உடனே அந்த லாரியை வழி மறித்து செல்ல விடாமல் சிறை பிடித்தனர். சம்பவம் குறித்து அறிந்து விபத்து நடந்த பகுதிக்கு கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பையில் இருந்த ஆதார்…
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே மீண்டும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும், மகாராஷ்டிராவில் 424 பேருக்கும், டெல்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும், தமிழ்நாட்டில் 148 பேருக்கும், கர்நாடகாவில் 148 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 26 அன்று 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு…
திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பி.காம்., பிரிவில் உள்ள ’இண்டஸ்ட்ரியல் லா’ தேர்வு வினாத்தாள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கசிந்தது. இதனால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து புதிய வினாத்தாள் தயார் செய்யப்பட்டு நேற்று (30.05.2025) நடைபெற்று முடிந்தது. வினாத்தாள் கசிவு குறித்து குழு அமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 110 அடி வரை குறைந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. அதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 16 அடி வரை உயர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து இன்று (31.05.2025) காலை நிலவரப்படி வினாடிக்கு 6,125கன அடியாகவும், நீர் இருப்பு 4664.75 மில்லியன் கன…
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கம்பம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் மேட்டு சுரங்கனார் காப்புக்காடு உள்ளது. இதனருகே உள்ள பட்டா நிலத்தில் கடந்த 26-ம் தேதி மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கடமானை வேட்டையாடி அதனை வெட்டி, சாக்குப் பையில் கட்டி வைத்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற நபர், வனத்துறையினரை கண்டதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்திய போது, வேட்டையாடி தப்பி சென்றவர் கூடலூர் பகுதியைச் சார்ந்த ராகவன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராகவன் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக ராகவன் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று (30.05.2025) கம்பத்தில் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து ராகவனை வனத்துறையினர் கைது செய்தனர்.…
கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி. இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாள் ஆகியோருடன் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் மூன்று பேரும் கோவை-அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் திடீரென சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த மாகாளி உட்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.…
ஒடிசாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், ஒடிசாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சுரங்க தொழிலதிபர் ரதிகாந்தா ராவத் என்பவருக்கு எதிரான புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்க, அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக ரதிகாந்தா ராவத் புகார் அளித்தார். இது குறித்து ரதிகாந்தா ராவத் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, லஞ்சப்பணம் ரூ.2 கோடியில் முதல் தவணையாக ரூ.50 லட்சத்தை வியாழக்கிழமை மாலைக்குள் இடைத்தரகர் ஒருவரிடம் செலுத்த வேண்டும் என்று சிந்தன் ரகுவன்ஷி கூறியதாக ரதிகாந்தா ராவத் தெரிவித்தார். இதன்படி,…
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்புடன் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1 அன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையம் முதல் புது ஜெயில் சாலை வரை “ரோட் ஷோ” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு புதூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். முதலமைச்சர் வருகை தந்த சாலைகள் இருபுறமும் திமுகவின் கொடிகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தன. முதலமைச்சர் கோரிப்பாளையம் வழியாகச் சென்றதால், அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்லும் பந்தல்குடி கால்வாய் அவரது பார்வையில் படாமல் மறைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கால்வாயை…
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 70 வயது நடராஜ் மாஸ்டர் என்பவர், சிறுமி ஒருவரிடம் தன்னுடைய பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் “நைசாகப் பேசி” தன்னுடைய பாற்றின்ப ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. முதலில் நிலைமையை உணராமல் தடுமாறிய சிறுமி, பின்னர் தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் புரிந்துகொண்டு, நடராஜ் மாஸ்டரின் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மசூலிப்பட்டினம் போலீசார் உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு…