Author: Editor TN Talks
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்குக் கல்வி விருது வழங்கும் விழாவை இன்று நடத்தினார். இந்த விழாவில், பரிசு பெற்ற ஒரு மாணவியின் தாய், தனது கணவரின் குடிப்பழக்கத்தால் மகளின் படிப்பு பாதிக்கப்பட்டதையும், தனி ஒரு ஆளாகப் போராடி மகளைச் சாதிக்க வைத்ததையும் கண்ணீருடன் விஜய்யிடம் பகிர்ந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி விருது விழா: மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் இந்த விருதுகளை வழங்கி வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு வைர மோதிரமும், மாணவிக்கு வைர கம்மலும் வழங்கி கவுரவித்து வருகிறார். இந்த ஆண்டுக்கான (2025) கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று பூஞ்சேரியில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர்,…
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நான், மதுரை தெற்குசாவல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்ட தாரி ஆசிரியராக பணி புரிந்தேன். கடந்த 25.6.2024 அன்று பிளஸ் 1 வகுப்பிற்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவர், பாடத்தைக் கவனிக்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தார். இதை கண்டித்ததால், அந்த மாணவர், எதிர்த்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், மாணவரை காலணியால் அடித்தேன். இது குறித்து அந்த மாணவரின் பெற்றோர், என்மீது பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து நான், விருப்பு ஓய்வில் செல்ல விருப்பதாக மனு அளித்தேன். பிறகு அந்த மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு, வேறு ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விருப்ப பணியிட மாறுதலில்…
கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் புதிதாக சிற்றோடைகள், அருவிகள் உருவாகி நொய்யல் ஆற்றுடன் இணைந்து, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால் வழியோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு வறண்டு காணப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று கோடை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனைக் கண்டு குளித்து மகிழ சுற்று வட்டாரப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களை, பொதுப் பணி துறையினரும், காவல் துறையினரும் திருப்பி அனுப்புவதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில்…
ஜூன் 5-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், ”தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இத்தகைய கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கன்னட திரைப்பட சம்மேளனத் தலைவர் தெரிவித்திருந்தார். ”நான் தவறு செய்யவில்லை, செய்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும்” என கூறியிருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர்…
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து வரி உயர்வு செய்து பொதுமக்களை வஞ்சிப்பதாகக் கூறி, திமுக மாநகராட்சியை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சி.எஸ். ராஜமோகன் தலைமையில் இன்று வெளிநடப்பு செய்தனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி மாமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு அதிமுக கண்டனம்: திண்டுக்கல் மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று மாமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எவ்வித நலத்திட்டங்களோ, புதிய பணிகளோ நடைபெறவில்லை என குற்றம்சாட்டினர். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே செய்வதாகவும் அவர்கள் விமர்சித்தனர். சொத்து வரி, வீட்டு வரி, குப்பை வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து உயர்வுக்கு மேல் உயர்வேற்றி வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் குடும்பம்…
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் நேற்று பகிரங்கமாக வெடித்தது. டாக்டர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், அவரை பொதுக்குழுவைக் கூட்டி நீக்குவேன் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் முன்வைத்தார். இந்தப் பேட்டி பா.ம.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உட்கட்சி மோதலின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை இன்று (வெள்ளி) முதல் நாளை மறுதினம் (ஞாயிறு) வரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில், பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் அன்புமணி ராமதாஸ் சந்திப்பதாகத் தெரிகிறது. கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 பேர் வருகை தந்துள்ளனர்.…
சென்னையில் தெருநாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்காகக் கோரப்பட்டுள்ள டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய மற்றும் மாநில விலங்குகள் நல வாரியங்களுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தெருநாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களைக் கண்டறிந்து சிப் பொருத்தும் பணிகளுக்காக ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் வழக்கு: இந்நிலையில், இந்த டெண்டருக்குத் தடை விதிக்கக் கோரியும், நிதி ஒதுக்கீடு செய்யத் தடை விதிக்கக் கோரியும் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “ஏற்கனவே விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக அரசு இந்த டெண்டரைக் கோரியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின்…
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து தான் எழுப்பிய கவலைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் முக்கிய கோரிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில், “சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை நாடுபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் சரியான நேரத்தில், அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது எனது நிலையான கோரிக்கையாகும்” என்று வலியுறுத்தியுள்ளார். கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் ஆலோசனை அவசியம்: இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு நேர்மறையான பரிசீலனை அளித்திருப்பதைப் பாராட்டிய முதலமைச்சர், “ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள், மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசித்த பின்னரே எட்டப்பட வேண்டும்” என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.…
திண்டுக்கல், கனிமவளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கனிமவள தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளத்து மண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது, 2 டிராக்டரில் வந்த ஓட்டுநர்கள் தப்பியோடினர். குளத்திலிருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுக்கு நடை சீட்டு இல்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். குறிப்பாக விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக பர்மிட் போடப்பட்டிருந்த நிலையில், திருட்டுத் தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுத்தனமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மனு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒத்தக்கடை காவல் ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சந்தானமூர்த்தி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் குறிப்பிட்டதாவது: “நான் மதுரை ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைவராக இருந்து வருகிறேன். இந்தப் பள்ளியில் ஒத்தக்கடை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அத்துடன் 6 கிராம ஊராட்சிகளில் இருந்து மாணவிகள் வந்து பயில்கின்றனர். பள்ளி முடிந்து மாணவிகள் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் மாணவிகள் மீது மோதுவது போல வருவதும், மாணவிகளை செல்போன்களில் படம் பிடிப்பதும், கேலி, கிண்டல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று…