Close Menu
    What's Hot

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»கமலுக்கு எதிராக அவதூறு பரப்பாதீர்கள்… தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதங்கம்…
    சினிமா

    கமலுக்கு எதிராக அவதூறு பரப்பாதீர்கள்… தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதங்கம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜூன் 5-ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், ”தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” எனக் கூறியிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இத்தகைய கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கன்னட திரைப்பட சம்மேளனத் தலைவர் தெரிவித்திருந்தார்.

    7 7

    ”நான் தவறு செய்யவில்லை, செய்தால் தானே மன்னிப்பு கேட்க முடியும்” என கூறியிருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. கமல்ஹாசன் பேச்சை குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தத்தில் புரிந்து கொண்டு தவறான புரிதலை பரப்புகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலும், பதட்டமும் ஏற்படுகிறது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர் நடிகர் கமல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரி உயர்வு சர்ச்சை: திமுக-வை கண்டித்து அதிமுக வெளிநடப்பு!
    Next Article சித்திரைசாவடி தடுப்பனையில் வெள்ளப்பெருக்கு… பொதுமக்கள் செல்ல தடை…
    Editor TN Talks

    Related Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    Trending Posts

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026

    திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய்..! வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்..!

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.