Author: Editor TN Talks
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் இப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாநாடுகள் நடத்தி வாக்கு சேகரிப்பதுடன், நிர்வாகிகளுடன் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர் கட்சி தலைமையினர். அந்த வகையில், கிறிஸ்துவ வன்னியர்கள் நடத்தும் மாநில மாநாடு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது. எம்.பி.சி உரிமியை கிறிஸ்துவ வன்னியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில், திண்டுக்கல், மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வன்னியர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப் ராஜ் பேசுகையில், ”கடந்த 2021 தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரச்சாரத்திற்காக வந்திருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி பட்டியல்…
திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்த புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 18.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் புருலியா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை (மே 23, 2025) மேற்கு வங்காள மாநிலம் புருலியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று (மே 25, 2025) அதிகாலை 1:30 மணியளவில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது. திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமிக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த ரயிலில் கஞ்சா, குட்கா மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே காவல்துறையினர் ரயிலில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது, ரயிலின் S3 கோச் மற்றும் முன்பதிவில்லா…
உசிலம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்தது எப்படி? மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி, கருப்பாயி, பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டு, தங்கள் சொந்த ஊரான குஞ்சாம்பட்டிக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு இந்த விபத்தில் ஒரு வயது பச்சிளம் குழந்தையான பிரகலாதன்,…
கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கூட்செட் சாலையில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். அமைச்சர் முத்துசாமி பேட்டி: ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: “வானிலை ஆய்வு மையத்தின் கடுமையான மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் அவர்கள் உடனடியாக முன்னேற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு, தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நிரந்தரத் தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி…
உருளைக்கிழங்குன்னா சின்னக் குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். பொரியலா செஞ்சாலும் சரி, குழம்புல போட்டாலும் சரி, ஒரு புடி புடிச்சிருவாங்க. சிக்கனை வெச்சு விதவிதமா சமைக்கிற மாதிரி, உருளைக்கிழங்கையும் பல ஸ்டைல்ல பண்ணலாம். அப்படி ஒரு புதுமையான உருளைக்கிழங்கு ரெசிபிதான் “ஆலு கே குட்கே”. ஆலு கே குட்கேன்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? இது வேற ஒண்ணுமில்லீங்க, நம்ம ஊர்ல செய்யுற உருளைக்கிழங்கு வறுவல் மாதிரிதான். ஆனா, உத்தரகாண்ட் மக்கள் சேர்க்குற ஸ்பெஷல் மசாலாவோட செஞ்சா, இது வேற லெவல்ல இருக்கும். இந்த வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிய துண்டு (2 இன்ச்) கொத்தமல்லி இலை – சிறிதளவு (தண்டு பகுதியுடன்) கரம் மசாலா -…
காலை உணவுன்னா இட்லி, தோசைன்னு ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிச்சுப் போச்சா? உங்க வீட்டுல உப்புமான்னா எல்லாரும் மூஞ்சிய சுளிக்கிறாங்களா? கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான, சத்தான ரெசிபி. கோதுமை ரவையும், பாசிப்பருப்பையும் வச்சு ஒரு தடவை உப்புமா செஞ்சு பாருங்க. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி செஞ்சா இன்னும் அட்டகாசமா இருக்கும். பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1/2 கப் கோதுமை ரவை – 1 கப் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு (துருவியது) பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) கேரட் -…
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். தெலுங்கானா, பஞ்சாப் முதல்வர்களும் பங்கேற்றனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்க முதல்வர்கள் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்த பின், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல். சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைத்தல். செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை…
பீகாரின், பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை சேர்ந்த தமிழ்நாடு கோ-கேம் அசோசியேஷன் மாணவ, மாணவியர் 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் மோதி, ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து உள்ளனர். இப்போட்டியில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். கடுமையான பயிற்சிக்குப் பிறகு கள மிறங்கிய இவர்கள், ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதில் கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம்மும், சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா, மதுசுந்தராபுரம் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நான்கு மாணவர்களும் வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ளனர். சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்து உள்ள…
கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாமை தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லலிதா ஐஏஎஸ் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு ஆகியோர் ஆய்வு செய்தனர். தலையாட்டுமந்து பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி பவ்யா, தென்மேற்கு பருவமழைக்கு உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்கள் பாதிக்கப்படும் என்றும் மலை பாதிப்புகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மின்கம்பங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் நிலச்சரிவு அபாயகரமான இடங்களில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டார். ரெட் அலர்ட்…
நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 353 பொறியியல் கல்லூரிகள், 827 கலை அறிவியல் கல்லூரிகள், 459 பாலிடெக்னிக் கல்லூரிகள், 412 தொழிற்பயிற்சி மையங்களில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022 – 23 கல்வியாண்டில் 13.5 லட்சம் மாணவர்களும், 2023 – 24 கல்வியாண்டில் 14.68 லட்சம் மாணவர்களும், 2024 – 25 கல்வியாண்டில் 13.17 லட்சம் மாணவர்களும் நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். மணவர்களின் உயர்கல்வி வழிகாட்டி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் 2.52…