Author: Editor TN Talks
மனிதர்கள் உயிர்வாழ உணவு மிகவும் அவசியமானது. பெரும்பாலான உணவுகள் பசியைத் தணிக்கவே உண்டாகினாலும், சில உணவுகள் நம் மனதையும் முழுமையாக திருப்திப்படுத்தும் வகையிலும், ஒரு உணர்வோடு நம்முடன் கலந்து வாழும் வகையிலும் இருக்கும். அப்படியான உணவுகளில் முதலிடம் பிடிப்பது பிரியாணி! பிரியாணி என்பது வெறும் ஒரு உணவுமட்டுமல்ல; அது நம் வாழ்வில் ஒரு ஆழமான உணர்வாகவும், அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவரும் பந்தமாகவும் இருக்கிறது. பொதுவாக பிரியாணி என்றாலே சிக்கன் அல்லது மட்டன் தான் அதிகம் பேசப்படும். ஆனால் சைவ உணவுப் பிரியர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, பன்னீர் பிரியாணி மற்றும் காளான் பிரியாணி போன்ற தேர்வுகள் உண்டு. இப்படி, ஏதாவது ஒரு வடிவத்தில் பிரியாணி மக்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. கத்திரிக்காயும் பிரியாணியும் – ஒரு புதுமையான ஜோடி! சிக்கன் அல்லது காளான் இல்லாதபோது, சில காய்கறிகளும் பிரியாணிக்கு சுவையாக அமையும். அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தில் மிகவும் பிரபலமானது…
தென்னிந்தியாவின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று வாணியம்பாடி பிரியாணி. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் பலரின் விருப்பமான உணவாக மாறியுள்ளது. இந்த பிரியாணியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: மட்டன் பாஸ்மதி அரிசி எண்ணெய் வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி தயிர் முழு கரம் மசாலா கொத்தமல்லி இலை புதினா இலை மிளகாய் தூள் பச்சை மிளகாய் உப்பு செய்முறை: முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய் போன்ற முழு கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும். அடுத்து, இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது, மட்டன் சேர்த்து, மட்டனில் உள்ள தண்ணீர் வெளியேறும் வரை வதக்கவும். மிளகாய் தூள்…
டெல்லியில் சோனியா, ராகுலை சந்தித்த மு.க.ஸ்டாலின்.. நிதி ஆயோக் கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்கிறார்..
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடும் வகையில் அதன் அமைப்பாக ஒன்றிய திட்டக்குழு என்பது செயல்பட்டு வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் திட்டக்குழு என்பது முழுமையாக கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தின் பத்தாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது . இதைத்தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டம் இன்று இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதாவது காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் முதல் கட்டமாக இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி முதல் இரண்டாவது கட்டமாகவும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை, பள்ளிக் கொள்கை, கல்வி, அடுத்த 15 ஆண்டுகளுக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி ஆகியவை…
புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்…
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற துயரமான விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வழக்கின் பேரில், ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்லபாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் நடந்தது. பசும்பொன் கிராமம் அருகே, அவர் ஓட்டிய ஷேர் ஆட்டோ, எதிரே வந்த போலீஸ் வேனை மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின் முடிவில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம், ஆட்டோ ஓட்டுநரான செல்லபாண்டியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதி கூறியதாவது: “குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது மிகக்கூடிய தண்டனையை ஏற்படுத்தக்கூடிய கடுமையான குற்றம். இதனை சாதாரணமாக கருத…
ஜெய்ப்பூரில் இயங்கும் பல இனிப்பு கடைகள், இந்திய இராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புப் பொருட்களின் பெயர்களில் உள்ள ‘பாக்’ (Pak) என்ற சொற்றொடரை நீக்கியுள்ளன. இந்த மாற்றம், பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் அந்த வார்த்தை இருக்கக்கூடாது என்ற உணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று மற்றும் மக்கள் உணர்வுகளை மதிப்பதால், இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், மொட்டிப் பாக் இனிப்பு “மொட்டி ஸ்ரீ” எனவும், மைசூர் பாக் “மைசூர் ஸ்ரீ” எனவும், அதேபோல் ஆம்பாக் “ஆம் ஸ்ரீ” என்றும், கோன்ட்பாக் இனிப்பு “கோன்ட் ஸ்ரீ” என்றும் மாற்றப்பட்டுள்ளன. பொதுவாக ‘பாக்’ என்ற வார்த்தையின் வேரானது சமஸ்கிருதத்தில் உள்ள “பகவா” (Pakva) என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் “சமைக்கப்பட்ட” அல்லது “முழுமையடைந்த” என விளங்குகிறது. மேலும் இந்தி மொழியில் ‘பாக்’ என்பது சர்க்கரைச் சாறு அல்லது இனிப்பு திரவத்தை குறிக்கிறது.…
திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்திற்கு எழும்பிய குடிநீர் அருவி போல கொட்டியது . மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து சாமண்ணா நீரூந்து நிலையம் வழியாக குடிநீர் சாம்பள ராட்சத குழாய்களில் ஊடாக மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி வழியாக திருப்பூர் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில், இன்று மதியம் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே குடிநீர் குழாயில் திடீரென பிளவு ஏற்பட்டது. இதனால் குடிநீர் பெரும் அழுத்தத்தில் பல அடி உயரத்திற்கு மேலே பாய்ந்து அருவிபோல் சாலையில் கொட்டியது. அந்த பகுதிக்குச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தி அருவிபோல் கொட்டும் தண்ணீரை செல்பி எடுத்தும், வீடியோ எடுத்தும் கண்டு ரசித்தனர். இந்த குழாய் உடைப்பால் பெரும் அளவிலான குடிநீர் வீணாக சாலையில் கரைந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்…
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்திருப்பதை தொடர்ந்து, அந்த தீர்ப்புக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதைக் கண்டித்து, திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைப் பிரதிநிதிகள் கூறியதாவது: திருநெல்வேலியைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு இடைநிறுத்த உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தமிழக அரசின் அதிகாரத்தை மறுக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தளர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நடவடிக்கையாகும். இத்தீர்ப்பை திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. மக்கள் விரோதமான இந்த உத்தரவை வழங்கிய நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாதனை குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம்…
2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் கைகோத்து சந்திக்கக் களமிறங்கி இருக்கும் பாஜக, அண்ணாமலை பாணி அரசியல் செய்யவே கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது. பாஜகவின் ஊடகப் பிரிவினருடன் நடந்த ஆலோசனையின் அக்கட்சியின் தற்போதைய மாநில தலைவர் கராராகத் தெரிவித்திருக்கிறார். அதென்ன அண்ணாமலை பாணி அரசியல்? நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் முக்கிய கட்சியாகத் திகழும் பாஜக, தமிழ்நாட்டிற்குள் அசைக்க முடியாத அஸ்திவாரத்தை ஏற்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக மும்முரமாக உழைத்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் அதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வரிசையாக வந்த பாஜக மாநில தலைவர்கள் அனைவருக்கும் அந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. 2021-ம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சராகப் பதவி வழங்கப்பட்டதும், அப்பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்ததுபோல் பிம்பம் உருவானது. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்…
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள 17 சென்ட் நிலம் கடந்த 1983ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதனிடம் இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. 2003 ஆம் ஆண்டு, நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டது. மீதமுள்ள 6.5 சென்ட் நிலம் சாலை விரிவாக்கத்திற்காக தேவைப்படுவதாக தெரிவித்து வீட்டு வசதி வாரியம் அதை தக்க வைத்துக் கொண்டது. இதையும் படிக்க: மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு இருப்பினும், அந்த நிலமும் பாவனைக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்…