Author: Editor TN Talks
காய்கறிகளில் பெரும்பாலான நபர்களால் விரும்பப்படாத காய்கறியாக பாகற்காய் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில், அதிகளவு ஊட்டச்சத்துக்களும், பல ஆரோக்கிய நன்மைகளும் நிரம்பிய காய்கறியே பாகற்காய். இதனை மக்கள் தவிர்க்கும் முக்கியக் காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். இருப்பினும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் அனைவரும் தங்கள் உணவில் பாகற்காயை அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பாகற்காயை சாப்பிட முடியவில்லை, கசப்பால் எடுக்கவே முடியவில்லை என்று சிலர் சொல்வதுண்டு. அவர்களுக்கான மிகச்சிறந்த வழி, பாகற்காயை கசப்பே தெரியாமல் சமைப்பது. பொதுவாக, பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள்; சில சமயங்களில் சாம்பாரிலும் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில், பாகற்காயை சுவையாகவும், கசப்பே இல்லாமல் சமைக்கும் சிறந்த முறை புளிக்குழம்பாக வைப்பதுதான். செட்டிநாடு பகுதிகளில் இந்த பாகற்காய் புளிக்குழம்பு மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய உணவாகும். இப்போது, இந்தச் சுவையான புளிக்குழம்பை எவ்வாறு எளிமையாகச் சமைக்கலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: பாகற்காய் – 2 (நடுத்தர அளவு)…
கோடை விடுமுறை வந்துவிட்டால், குழந்தைகள் முழுநாளும் வீட்டிலேயே இருப்பார்கள். அப்போது “என்ன சாப்பிடலாம்?” என்ற கேள்வி ஒவ்வொரு மணிதோறும் கேட்டுக்கொண்டே இருப்பர்கள். அப்படிப்பட்ட நேரத்தில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஸ்நாக்ஸ் தயாரித்து கொடுத்தால், குழந்தைகளும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். அது மட்டுமல்ல – உங்கள் பிள்ளைகள் இனிப்பு பிரியர்களாக இருந்தால், ஸ்வீட் கேட்கும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்! அதிலும், ரசகுலா பிடிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால், ரவை மற்றும் பாலை மட்டும் கொண்டு அதே ரசகுலா சுவையை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒருமுறை செய்து கொடுத்தாலே, “அம்மா, இன்னும் ரசகுலா பண்ணு!” என்றே கேட்கவைத்துவிடும் இந்த ரவா ரசகுலா ரெசிபியை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: ரவை கலவைக்காக: நெய் – 1 டீஸ்பூன் ரவை – 1/4 கப் (சுமார் 50 கிராம்) காய்ச்சி ஆறிய கெட்டிப் பால் –…
உதகை அருகே உள்ள லவ்டேல் பகுதியில் ஒற்றை காட்டு யானை சமீப தினங்களாக முகாமிட்டுள்ளது. தொட்டபெட்டா வனப்பகுதிகளில் உலாவி வந்த யானை பின்னர் வேல்வியூ பகுதிக்கு வந்து அதன் பின்னர் கேத்தி பகுதிகளுக்கு சென்று தற்பொழுது லவ்டேல் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. யானை ரயில்வே குடியிருப்பு பகுதி அருகில் உலாவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் யானையை வனபகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் உள்ள உணவுகளை தேடி உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உருவத்தில் பெரியதாகவும் பழக்கத்தில் குழந்தை போலவும் உள்ள யானை வனப்பகுதிகளில் கம்பீரமாக வாழக்கூடிய ஒரு விலங்கு. தற்பொழுது குப்பை தொட்டிகளில் உணவை தேடும் காட்சிகள் அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பினும்…
ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “இந்தியா போல வளர்ந்து வருகிற எந்த ஒரு நாடும், இதுபோல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்தது இல்லை. இந்தியா வல்லரசாகி கொண்டு இருக்கிறது, ஒருபுறம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம் அருகில் இருக்கக் கூடிய நாடுகள் தங்கள் நாட்டினுடைய, நிலத்தை தங்கள் நாட்டின் ஆதரவை இந்தியாவை நோக்கி குறி வைத்து இருக்கக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கொடுக்கக் கூடிய அடைக்கலம் மற்றும் ஆதரவால், இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்துக் கொண்டு வருகிறது.” எனக் கூறினார். மேலும், “இதற்கு முன்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அதே பாராளுமன்ற தாக்குதல்களாக இருக்கலாம் , மும்பை வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம், இதுபோல ஆயிரக்…
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் பாண்டியன். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து தீபக் பாண்டியன் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது. இந்நிலையில் இவரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது காதலி மற்றும் அவரது தோழிகளுடன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த அவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தீபக் பாண்டியன் கொலை செய்தவர்களை பழி தீர்ப்போம் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் பதிவுகள் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் காவல் துறையினர் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிரும் நபர்கள், பதிவு செய்யும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை…
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தது. இன்று, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு…
இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொண்டு வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை போலவே 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன் ஜாமீன்க்கோரி தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி கனிமொழி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கெதிராக புகார் அளித்து பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்துக்கோரி அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். விவாகரத்து பெறாத நிலையில் அந்த பெண்னுக்கும், தமக்கும்…
தம்பதிகளுக்கு இடையே வரும் சந்தேகத்தால், பல குடும்பங்கள் விபரீத செயல்களில் ஈடுபட்டு நிலைகுலைந்து போகும் செய்திகளை நாம் தினமும் படித்தும், கேட்டும் வருகிறோம். சமீபகாலமாக, தனது துணையை கண்காணிக்க சமூக வலைதளங்களை தம்பதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நவீன டெக்னிக். அப்படி கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்ணின் பெயரின் ஃபேக் ஐடி உருவாக்கி கணவரை வேவு பார்த்துள்ளார் மனைவி ஒருவர். டெல்லியை சேர்ந்த 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயர் மற்றும் விவரங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் மர்ம நபர் ஐடி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொந்தரவு செய்வதாக அப்பெண் தனது புகாரில் கூறியிருக்கிறார். இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சந்தேகப்பட்ட ஃபேக் ஐடியின் மொபைல் எண்ணை கண்டறிந்தன. அந்த சிம் கார்டு உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பது…
சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த 593 குடும்பங்களுக்கு, தமிழக அரசு இலவசமாக புதிய வீடுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்தூரில் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், ஸ்டாலின் நகர் போன்ற பகுதிகளில் ஆற்றை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அடையாறு ஆற்றை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மறு குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில், ஒரு வீடு ரூ.17 லட்சம் மதிப்பில், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு வழங்கப்படும். மேலும், புதிய…
18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் கிட்டத்தட்ட நிறைவடையவுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே முன்னேறியுள்ள நிலையில், 4-வது இடத்திற்கு எந்த அணி முன்னேறும் என்பதில் டெல்லி மற்றும் மும்பை இடையே போட்டி நிலவுகிறது. இன்று(21.05.2025) இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி ஃபிளே ஆஃப்க்கு முன்னேறும். சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட மற்ற 5 அணிகளும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் நிலையில் நேற்று(20.05.2025) ராஜஸ்தாஸ் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 65-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் சென்னை பேட்டிங் செய்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் அடித்தது. 188…