Author: Editor TN Talks
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூர் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து கணேஷ் வயது 49 என்பவர் இயக்கி உள்ளார். இதில் நடத்துனர் சிவராஜ் உள்பட பேருந்தில் 72 பயணிகளை ஏற்றி வால்பாறை வந்து கொண்டு இருந்தது. அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 – வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல் துறையினர், 108 ஆம்புலன்சில் உதவியுடன் அனைவரும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். இதில் ஓட்டுநர்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாட்டை அழைத்து வந்த மதுரை சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி என்பவரை வலது மார்பில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ச்சியாக மாடுபிடி வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும் உயிரிழந்து வருவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்திய வருவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று (17.05.2025) மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தா பாட்டாளி என்பவர் தனது மாடை அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாடு, உரிமையாளரான பாட்டாளியை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். மோசஸ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் முழுமையாக இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இருப்பினும், வேனுக்குள் இருந்த ஷேனி கிருபாகரன், ஜெஸிட்டா எஸ்தர், ஹெர்சோம் ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்து கிணற்றுக்குள் தவித்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காருக்குள் சிக்கிய மோசஸ், அவரது மனைவி…
நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோ கரன்ஸி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது நிறுவனத்தின் பங்கு இயகுநர் ஒருவரை சைபர் க்ரைம் போலீசார் கோவையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்த பின்னர், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). ராணுவ வீரரான அவர் ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரண்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன் படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு…
இந்தியா சார்பில் ஐநா சபையில் பங்கேற்க அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் நடக்கும் ஐநா கூட்டத்தில், இந்தக் குழுவினர் பங்கேற்று, ஆபரேஷன் சிந்துர் குறித்து விளக்க உள்ளனர். இந்த நிலையில் வெளியாகி இருக்கும் பெயர் பட்டியல், பாஜகவின் அரசியல் உத்தியோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. தலைவர்களின் எகோபித்த மரியாதை: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர், நாட்டின் அரசியல் தலைவர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்சித் தலைவர்கள் பேதமின்றி இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கும், பதிலடி புரிந்து கொள்ளாமல் தாக்கி போர் சூழலை ஏற்படுத்திய பாகிஸ்தானின் அட்டூழியத்திற்கும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆப்ரேஷன் சிந்தூர், பாகிஸ்தானை மிரள வைத்ததோ இல்லையோ, பாஜகவின் செயல்பாட்டால் தலைவர்களை ஒரே அணியில் திரள வைத்தது. ஏன்? எப்படி? ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்து இருப்பதாக இந்தியா புல்லரித்துக்…
கோவைப்புதூர் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. தென் தமிழக அளவில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். அத்தோடு தென் தமிழக தென் தமிழக மாநில தலைவர் ஆடலரசன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், 900 பேர் இணைந்து பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற ஸ்வயம் சேவர்கள் கற்றுக் கொண்ட காராத்தே, சிலம்பம், யோகா, சமத்தான், விளையாட்டு, கோஷ் வாத்திய இசை போன்றவற்றை நிகழ்த்தி காட்டினர். முகாமினை மத்திய…
ஐபிஎல் தொடரைப் போன்றே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ப்ரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் இடம்பெறும் இத்தொடரில் ஐபிஎல்-ஐ போன்றே வீரர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். இதுவரை 11 தொடர்கள் நடந்து முடிந்துள்ளது. பாட்னா அணி அதிகபட்சமாக 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்தாண்டும் பாட்னா இறுதி போட்டியில் ஹரியானா அணியுடன் மோதியது. போட்டி முடிவில் ஹரியானா அணி பாட்னாவை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 12-வது ப்ரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வரும் 31 மற்றும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக 8 வீரர்கள் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தமாகினர். தமிழ் தலைவாஸ் அணி ரூ.2.15கோடிக்கு சச்சின் தன்வரை வாங்கியது. இதுபோல் இம்முறை நிறைய வீரர்கள் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி அணிகள்…
’நாயகன்’ படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ’தக் லைஃப்’. சிம்பு, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ’ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’, ’மெட்ராஸ் டாக்கீஸ்’, ’ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ’தக் லைஃப்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் என கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளது. தற்போது அவரிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பாக இருப்பது ’கூலி’ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர் படத்தின் இரண்டாம்’ பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற திரைப்படம் வெளியானது. நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூரியா உட்பட பலர் நடிப்பில் வெளியா இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் ரூ.100கோடியை தாண்டியது. இப்படத்தின்…