Close Menu
    What's Hot

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்… 5 பேர் உயிரிழப்பு..
    தமிழ்நாடு

    கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்… 5 பேர் உயிரிழப்பு..

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    accident 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். மோசஸ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது.

    accidentசுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் முழுமையாக இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இருப்பினும், வேனுக்குள் இருந்த ஷேனி கிருபாகரன், ஜெஸிட்டா எஸ்தர், ஹெர்சோம் ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்து கிணற்றுக்குள் தவித்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    accident 1

    காருக்குள் சிக்கிய மோசஸ், அவரது மனைவி வசந்தா, உறவினர் ரவி, மீட்கப்பட்ட ஹெர்சோமின் ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், ஹெத்சியா ஆகியோர் வெளியே வர முடியாமல் தவித்து காருக்குள் இருந்தபடியே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க முடியாமல் தீயணைப்பு படையினர் திணறி வந்தனர். சாத்தான்குளம், திசையன்விளை, திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியோடு கிணற்றுக்குள் மூழ்கியை காரையும், காருக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலீஸ் கஸ்டடியில் தமன்னா, காஜல்? சூடுபிடிக்கும் போலி கிரிப்டோ கரன்ஸி மோசடி…
    Next Article ஜல்லிக்கட்டு மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு… அலங்காநல்லூரில் சோகம்…
    Editor TN Talks

    Related Posts

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    May 31, 2026

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    10 மணி நேரமாக பேருந்து இல்லை ; மதுரையில் பயணிகள்  கொந்தளிப்பு – சாலை மறியல்

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.