Author: Editor TN Talks
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்த விழாவில் இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். விழா முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹோண்டுராஸுடன் உருவாகும் புதிய தூதரகத் தொடர்பு இந்திய-மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இருக்கும் எனக் கூறினார். இதே வேளையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். “அந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் உறுதுணையாக நின்ற நாடுகளில் ஹோண்டுராஸ் ஒன்றாக இருந்தது என்பது முக்கியமான விடயமாகும்,” என்றார் அவர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை பற்றி தெளிவான நிலைப்பாடு: பாகிஸ்தானுடனான உறவுகள் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “பாகிஸ்தானுடனான எங்கள் உறவு எப்போதும் இருதரப்பு அடிப்படையிலேயே அமையும். இது இந்தியாவின் நீண்டகால தேசிய ஒருமித்தக் கொள்கை என்பதைக்…
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நாளை (மே 16) 6 இடங்களில் நடைபெற உள்ளது. கனமழை காலங்களில் செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து மிகஅதிக வெள்ளநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த நேரங்களில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நாளை (மே 16) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் மாலை நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 1. மாத்தூர் பாலசுப்பரமணி நகர் 2. சடையான் குப்பம் 3. கானு நகர் 4. காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம் 5. போரூர் 6. கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வில் வருவாய், நீர்வளம், காவல் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளை சேர்ந்தவர்கள்…
மட்டன் குழம்பு மிகவும் பிரபலமான ரெசிபி ஆகும். இந்த ரெசிபியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போன்ற வழக்கமான மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழம்பு மசாலாவாகவும், பொரித்த உணவாகவும், பிரியாணி வடிவிலும் இந்த ரெசிபிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனை எளிமையாக தயாரிக்கும் முறை குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: மட்டன் – ½ கிலோ வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் – ¼ மேசைக்கரண்டி தனியா தூள் – 1 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 மேசைக்கரண்டி தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய் செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கவும். வெங்காயம் வதக்கி, இஞ்சி பூண்டு விழுதுடன் சேர்த்து வதக்கவும். தக்காளி, மசாலா தூள்கள் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.…
நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி, விடுதலை பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ’விடுதலை ஒன்று மற்றும் இரண்டாம்’ பாகங்களில் சூரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ’கருடன், கொட்டுக்காளி’ படங்களும் குறிப்பிட்ட தகுந்த வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில், விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ”மாமன்” என்ற படத்தில் கமிட்டானார் சூரி. ’கருடன்’ திரைப்படத்தை தயாரித்திருந்த லார்க் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்தது. சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியும் தங்கையாக நடிகை ஸ்வாசிகாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு ராஜ்கிரன், விஜி சந்திரசேகர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் நாளை (16.05.2025) வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை…
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து சவரன் ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும், ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 3 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில் சாமி கும்பிடுவதில் பட்டியலின மக்களிடம் பாகுபாடு காட்டுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியலமைப்பின் பாதுகாவலர் நீதிமன்றம் தான் என்று தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் பொருந்தலூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்வதை உறுதிப்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவின் போது தேரை, பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்லவும், எவ்விதமான பாகுபாடும் இன்றி விழா நடத்தக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூகத்தில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றனர். அரசின் கொள்கைகள்…
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்க தலை வணங்குவதாக அவர் தெரிவித்தார். இந்திய ராணுவ வீரர்களின் சேவைக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நாடே பெருமை கொள்வதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியா தனது மக்களை பாதுகாப்பதுடன், எதிரி நாட்டுக்கு பதிலடி தருவதும் நிரூபணம் ஆகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், முரட்டுத்தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? எனக் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதை சர்வதேச அணு ஆயுத…
கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியது ஐபிஎல் 2025. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுகள் மே மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் 22 பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐபிஎல் லீல் சுற்றுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஆகையால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்பும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப தயங்குவதாகவும், அந்ததந்த அணி நிர்வாகத்தினர் மற்றும் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இப்படிப்பட்ட சூழலில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியிலிருந்து பட்லர் விலகுவதாக…
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இடது காலிலும், வலது கையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவுவுக்கு உரிய சிகிச்சை வழங்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும்…