Author: Editor TN Talks

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ச்சியாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை இந்திய ராணுவம் முழுமையாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்ததின்பேரில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

Read More

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தையில் மருத்துவக் குணம் கொண்ட ஒரு மீன் ரூ.26,000-க்கு விற்பனையானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை பகுதி என்பது கடல் சார்ந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஆசாத் நகர் மற்றும் பெரியக்கடை தெரு மீன் சந்தைக்கு, பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்படும். இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியில் உற்பதியாகும் கொடுவா, கெண்டை மீன், வெள்ளாம் பொடி, கத்தாஐ போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனையாகும். மற்றவகை மீன்கள் அருகேயுள்ள நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு விற்பனை கொண்டுவரப்படுகிறது. முத்துப்பேட்டை அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் பகுதியிலிருந்து அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு கிலோ கத்தாழை மீன் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண்…

Read More

ஓர் இரவு கடையின் நேரம் முடிந்துவிட, சில முக்கியஸ்தர்கள் மட்டும் கடையில் மதுவருந்திக்கொண்டு சீட்டாடிக்கொண்டு இருக்க, கடையின் முதலாளி சிவாஜி தூக்கில் தொங்க, இது தற்கொலையாக இருக்கமுடியாது. கொலையாகவும் கூட இருக்கலாம், என்று செம்பன் வினோத் ஜோஸி கூற.. அந்த இரவு…!?அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் விசாரனையே “ப்ரவின்கூடு ஷாப்பு “”படத்தின் கதை. மலையாளிகளுக்கே உரித்தான டார்க் காமெடி சஸ்பென்ஸ் திரில்லர் வகை ஜானர். காமெடிக்கு பஸில் ஜோசப் இருக்க, மற்ற கேரக்டர் எல்லாம் அவருக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரனை காட்சிகளை சொல்லலாம். தற்கொலை அல்ல, கொலை தான் என்று சௌபின் ஷகிரும், செம்பன் வினோத்தும் பேசிக்கொள்ளும் இடம்.., இயாலாமையும் – இறுமாப்பு கொண்ட இரு துருவங்களை நம் கண்முன் கொண்டு வருகிறார்கள் இருவரும். சாந்தினியும் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். எல்லோரிடம் பகை இருக்கிறவன் திடீரென இறந்து போக, அடுத்து என்னென்ன நடக்குமோ??…

Read More

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ’கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியவர், ’அழகிய அசுரா’என்ற படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார். ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் வில்லியாக நடித்து அசர வைத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் தாண்டி பாலிவுட்டில் சன்னி தியோலுடன் ’ஜாத்’, அக்‌ஷய் குமார் அனன்யா பாண்டேவின் ‘கேசரி2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.…

Read More

வன்னிய சங்க தலைவராக இருந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், இயக்குநர் கெளதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்னியர் சங்க தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தங்கள் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பாமக நிறுவனர் இராமதாஸ்க்கு மிக நெருக்கமான இயக்குநர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற பெயரில் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை தங்கள் அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு வரும் மே 23 ம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும், ஜெ. குருவின் குடும்பத்தினர் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க…

Read More

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில்…

Read More

சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக இன்று (மே 14) மாலை திறக்கப்படுகிறது. கேரளாவின் புகழ்ப்பெற்ற வழிபாட்டுத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுண்டு. இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று (மே 14) முதல் 5 நாட்களுக்கு கோயில் நடை திறந்திருக்கும். கோவில் தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறக்கவுள்ளார். அப்போது சிறப்பு தீபாராதனை மற்றும் பதினெட்டாம் படியின் கீழ்ப் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு நாளை…

Read More

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் உரிய தண்டனை வழங்கப்பட்டது போல் விரைவில் கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினேன். இப்போது நான் சொன்னது போலவே தீர்ப்பு வந்திருக்கிறது” என்று கூறினார். மேலும் “இதே போல் கோடநாடு வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை விரைவில் வழங்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி எதற்காகச் சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால் தான் சொல்லித்தான் 100 நாள் வேலைத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று கூறி வருகிறார். இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வதுதான்…

Read More

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இருநாடுகளுக்கும் மாறி மாறி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. அதேப் போல விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலானது கடந்த சனிக்கிழமை (10.05.2015) நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் வரும் 17-ம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மே 24-ம் தேதி ஜெயப்பூரில் நடைபெற இருப்பதாகவும், நிறுத்தப்பட்ட ஓவர்களில் இருந்து போட்டி தொடரும் எனக் கூறப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் படி குவாலிபையர் 1 – மே 29-ம் தேதியும், எலிமினேட்டர்…

Read More

வரும் 16 ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொகுதியின் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read More