Close Menu
    What's Hot

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»Pravinkoodu Shappu review :ஒரு கள்ளுக்கடை, ஒரு கொலை, ஒரு காதல்…
    சினிமா

    Pravinkoodu Shappu review :ஒரு கள்ளுக்கடை, ஒரு கொலை, ஒரு காதல்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pravinkoodu Shappu review The Week
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஓர் இரவு கடையின் நேரம் முடிந்துவிட, சில முக்கியஸ்தர்கள் மட்டும் கடையில் மதுவருந்திக்கொண்டு சீட்டாடிக்கொண்டு இருக்க, கடையின் முதலாளி சிவாஜி தூக்கில் தொங்க, இது தற்கொலையாக இருக்கமுடியாது. கொலையாகவும் கூட இருக்கலாம், என்று செம்பன் வினோத் ஜோஸி கூற..
    அந்த இரவு…!?அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் விசாரனையே “ப்ரவின்கூடு ஷாப்பு “”படத்தின் கதை.

    மலையாளிகளுக்கே உரித்தான டார்க் காமெடி சஸ்பென்ஸ் திரில்லர் வகை ஜானர். காமெடிக்கு பஸில் ஜோசப் இருக்க, மற்ற கேரக்டர் எல்லாம் அவருக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரனை காட்சிகளை சொல்லலாம்.

    தற்கொலை அல்ல, கொலை தான் என்று சௌபின் ஷகிரும், செம்பன் வினோத்தும் பேசிக்கொள்ளும் இடம்.., இயாலாமையும் – இறுமாப்பு கொண்ட இரு துருவங்களை நம் கண்முன் கொண்டு வருகிறார்கள் இருவரும். சாந்தினியும் அவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

    எல்லோரிடம் பகை இருக்கிறவன் திடீரென இறந்து போக, அடுத்து என்னென்ன நடக்குமோ?? அதுவே நடக்கிறது. முன்னமே காரணத்தை யூகிக்க முடிந்தாலும், முன்னும் பின்னும் போய்வருகிறது காலம்.. திரைக்கதையில் எந்தவித குழப்பமும் இல்லை. ஒரு கட்டத்தில் பஸில் ஜோசப் கூட இந்த தற்கொலைக்கு காரணமோ என்று நம்மையும் நம்பவைக்கிறார்கள்.

    இந்த மாதிரி கதைக்களம் நிறைய வந்திருந்தாலும் டார்க் காமெடி வகையில் இது கொஞ்சம் புதுசு என்ற வகையில் பார்க்கலாம். போலீஸ் ஸ்டேஷன் விசாரணையில் பஸில் ஜோசபின் உடல் மொழியும், கொலைகாரன் என்னையும் கொல்ல வந்திருக்கான் என்று போனில் ஒரு பெண் பதட்டத்துடன் அழைக்க பட்டாபட்டியுடன், அவர் மோட்டர் பைக்கில் போவதும், அதற்கு பின் நடப்பவையெல்லாம் காமெடியின் உச்சம். அதுவும் அவர் சாந்தினியிடம் வழிவது எல்லாம் தாறுமாறு.

    இரவு, கள்ளுக்கடை என்று அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஷாஜி கைலாத்தும் கலை இயக்குநரும். முன்பின் பயணிக்கும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார் ஷபியூக் .இந்த மாதிரி திரைகளத்திற்கு இசையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் விஷ்ணு விஜய். ( என்ன எல்லா டெக்‌னிஷியன் பேர் எல்லாம் ஷா-லயே தொடங்குது)

    மற்றபடி ஓடிடி தளத்திற்கு என்ன தேவையோ அதை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷுராஜ் ஷுனிவாசன். சோனியில் இருக்கிறது.

    சிரிப்புக்கு கேரண்டி.

    Pravinkoodu Shappu Pravinkoodu Shappu review
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபான் இந்தியா அந்தஸ்தை பெற்ற நடிகை.. குவியும் பாராட்டுகள்..
    Next Article ஒரு மீன் ரூ.26,000-ப்பே… அப்படி என்ன சிறப்பு?
    Editor TN Talks

    Related Posts

    கவின் கொலை வழக்கு – கவலைப்பட்ட இயக்குநர் கஸ்தூரி ராஜா

    May 31, 2026

    ’ஜனநாயகன்’ குறித்து பேச எனக்கு தைரியம் இல்லை..! ஹெச்.வினோத் ஓபன் டாக்..!

    May 31, 2026

    தீபாவளிக்கு ‘சூர்யா 47’ ரிலீஸ்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.