Author: Editor TN Talks
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர்எழுதினர். கடந்த 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 95.03 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்தநிலையில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற நாளை (மே 13ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (மே 13) முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் ஒரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை துவங்கும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை யைமம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதன் எதிரொலியாக, அண்மைக்காலமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறையத் தொடங்கி உள்ளது. இந்தநிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மட்டும் இரண்டு முறை சரிவு காணப்பட்டது. காலையில் ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8,880 ஆக இருந்தது. மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, ரூ.1,040 குறைந்து, சவரன் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனையானது. இதனால், இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து விற்பனையானது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகள் மேற்கொண்டது. அவற்றை தடுத்து நிறுத்தி, இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதன் பின்னர், அமெரிக்கா தலையீடு செய்ததால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: ராகுல் அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமனதாக வேண்டுகோள் விடுக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர்…
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. ட்ரோல் செய்கிறவர்களும், செய்யப்படுவர்களும் என்கிற தலைப்பில். வழக்கமான மெட்டிரியலில் இருந்தது நீயா நானா. சமூக வலைதளங்களில் பத்தாண்டுகளுக்கு மேல் குப்பைக்கொட்டிக்கொண்டு இருக்கும் காரணத்தால் இதை சொல்லாம் என்று தோன்றுகிறது. சமூக வலைதளங்களில் ஏதோ ஒன்றை எழுதி ஏதோ ஒரு காரணத்தினால் அறிவு ஜீவியாக தன்னை உணர்ந்தவர்கள். சில வருடங்கள் கழித்து நிச்சயம் ஒரு பதிவை இட்டு இருப்பார்கள்.அது என்னவென்றால் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது, அதையே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருப்பது ஆபத்து. நமது நேரத்தை மட்டுமல்லாது நமது அறிவையும் தின்று தீர்க்கிறது என்று. இதை அவர்கள் சமூக வலைதளங்களில் தான் எழுதுகிறார்கள். என்பதும், அதை நாம் சமூக வலைதளங்களில் இருந்து தாம் படித்தாக வேண்டும் என்பதை அவர்கள் உணரமால் இல்லை . இருந்தும் இந்த கருத்து ஏன் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படுகிறது.? என்றால் அந்த தளம் இன்றி…
உண்மையில் வடிவேலு- சுந்தர் -C காம்போவிற்காக தியேட்டருக்குள் நுழைந்தது. மற்றபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எப்படி தான் இருக்கிறது இந்த கேங்கர்ஸ்.?! கதையென்றும் ஒன்றுமில்லை Money heist —யையும் , Mission Impossible -யையும் சுந்தர் – C அம்பாசமுத்திரத்தில் எடுத்தால் எப்படி இருக்கும். அதையே தான் எடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு.- பின்னனி இசை – பாடல் – எடிட்டிங் எல்லாமே சுந்தர்- C என்ன எதிர்பார்த்தாரோ அதையே கொடுத்து இருக்கிறார்கள். குறையொன்றுமில்லை. வடிவேலுவை எல்லோரும் நாகேஷுக்கு நிகராக வைத்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல என்பது என் கருத்து. வடிவேலு முழுக்க முழுக்க சந்திரபாபு உடல் மொழியை வெளிபடுத்துபவர். பாடல், நடனம் , நடிப்பு என்று முழுக்க முழுக்க சந்திரபாபுவையே அவர் Follow செய்கிறார். அது அவருக்கும் தெரிந்தும் தெரியாமலும் நடக்கிறது. அது ஒன்றும் குறையில்லை. ஏன் சொல்கிறேன் என்றால் மாமன்னன் போன்ற படங்களில் வடிவேலுவை நடிக்க…
தருண் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்துள்ள மலையாள படம் ‘துடரும்’. ஏப்ரல் 25-ம் தேதி வெளியான இந்த கிரைம் டிராமா திரைப்படத்தில் பர்ஹான் ஃபாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பாப்பு, தாமஸ் மாத்யூ, கிருஷ்ண பிரபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை ரூ.190 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தப் படம் அசத்தியுள்ளது. கேரளா மாநிலத்திலும் அதிகம் வசூலித்துள்ளது. இதனால், இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களில் கேரளாவில் மட்டும் அதிகம் வசூலித்த படமாக ‘துடரும்’ இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதிக வசூல் செய்த மலையாளப் படமான ‘2018’ படத்தின் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. இதையும் படிக்க: அடுத்த ஹிட்டுக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்… புதுப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு… மோகன்லாலின் ‘எல் 2: எம்புரான்’ (ரூ.265.5 கோடி), மஞ்சும்மள் பாய்ஸ் (ரூ.240 கோடி) ஆகிய படங்களின் வசூலை அடுத்து மூன்றாவது இடத்தில் துடரும் உள்ளது.…
ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர். ஜம்முவின் ஆர்.எஸ் புரா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை சப் – இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாக். படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் அவர் வீர மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையும் படிக்க: மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை.. எங்கெல்லாம் தெரியுமா? இது குறித்து ஜம்மு எல்லை பாதுகாப்பு படை எக்ஸ்…
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதல் காரணமாக 32 விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட சிவில் விமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை அளித்த அறிவிப்பின் படி, இந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம், “இந்த விமான நிலையங்கள் உடனடியாக சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்திட்டங்களை சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைப் பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது. இதையும் படிக்க: முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!! மீண்டும் செயல்பட உள்ள விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா,…
தமிழக அரசியல் எத்தனையோ ஆளுமைகளை பார்த்துள்ளது. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திரைத்துறையில் இருந்து பரந்துபட்ட மக்கள் செல்வாக்குடன் அரசியலில் நுழைந்து அரியபல சாதனைகளை படைத்தவர்கள். கலைஞரின் வாரிசான தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏறத்தாழ 50 ஆண்டுகள் நேரடி அரசியலில் புழங்கி மக்களிடம் நன்கு பரிச்சயம் ஆனவர். ஆனால் சாமான்ய தொண்டனாக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பு வரை வகித்த பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும். இது அவருக்கான மிகைபுகழ்ச்சி அல்ல. 8 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டின் வெகுஜன மக்களிடையே எடப்பாடி பழனிசாமி யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இன்று யாருக்கும் தெரியாமல் இருக்க முடியாது. இந்த அசுர சாதனை வேறு யார் செய்திருக்க முடியும்? மே 12 இன்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள். அவரது அரசியல் பயணத்தை சற்று திரும்பி பார்க்கும் போது, ஒரே துறையில் நீண்டகாலம் பயணித்தால் அதில் உச்சங்களை தொட முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.…