Close Menu
    What's Hot

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை.. எங்கெல்லாம் தெரியுமா?
    இந்தியா

    மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை.. எங்கெல்லாம் தெரியுமா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flight
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதல் காரணமாக 32 விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட சிவில் விமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) திங்கள்கிழமை அளித்த அறிவிப்பின் படி, இந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் சிவில் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம், “இந்த விமான நிலையங்கள் உடனடியாக சிவில் விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்திட்டங்களை சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைப் பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்க: முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் நரேந்திர மோடி!!

    மீண்டும் செயல்பட உள்ள விமான நிலையங்கள்: ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குல்லு மணாலி (பூந்தர்), லே, லுதியானா, முந்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்கள்.

    கடந்த வாரம், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்த 32 விமான நிலையங்களில் சிவில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது. இது மே 9, 2025 முதல் மே 14, 2025 வரை (இந்திய நேரப்படி மே 15, 2025 அன்று காலை 05:29 வரை) அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிக்க: சேட்டிலைட் மூலம் பாக். பயங்கரவாதிகள் கண்காணிப்பு? செலவு இவ்வளவு கோடியா?

    வழக்கம்போல் இயங்கும் டெல்லி சர்வதேச விமான நிலையம்: இதனிடையே, டெல்லி சர்வதேச விமான நிலையம் வழக்கம்போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) திங்கள்கிழமை (மே 12, 2025) வெளியிட்ட அறிவிப்பில், “விமான நிலைய செயல்பாடுகள் தற்போது சீராக இருக்கின்றன. இருப்பினும், மாறிவரும் வான்வெளி நிலைமைகள் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, சில விமான அட்டவணைகள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடி செயலாக்க நேரங்கள் பாதிக்கப்படலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாவதால், பயணிகள் கூடுதல் நேரத்தை அனுமதிக்க வேண்டும் என்றும், சீரான வசதிக்காக விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் DIAL அறிவுறுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை (IGIA) DIAL இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    india attack pakistan India operation sindoor india pakistan conflict india pakistan news India Pakistan War Indian Army operation sindoor indian army operation sindoor latest news in tamil operation sindoor pakistan operation sindoor press release operation sindoor time pakistan attack news in tamil ஆபரேஷன் சிந்தூர் ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் இந்திய ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவம் இந்தியா இந்தியா தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் செய்திகள் இந்தியா பாகிஸ்தான் போர் பாகிஸ்தான் பாகிஸ்தான் தாக்குதல் செய்திகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎடப்பாடி பழனிசாமி – தொண்டன் முதல் தலைவன் வரை…..
    Next Article எல்லையில் உயிரிழந்த தமிழக பாதுகாப்பு படை அதிகாரி.. 7 வீரர்கள் காயம்!
    Editor TN Talks

    Related Posts

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026

    நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், எம்பிபிஎஸ் இடங்கள் எத்தனை?!

    July 15, 2026

    இந்தியா- பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்! எந்தெந்த துறைகளில் என்னென்ன பலன்?

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கும் விவகாரம்..!! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    எ.வ.வேலு வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி ஏன்..?? பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.