Author: Editor TN Talks
இடுக்கி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் மூடல்: தமிழக-கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் இன்று அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த முன்னறிவிப்பிற்கு ஏற்ப தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி, தேக்கடி, வாகமண், மூணாறு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு: கோடை விடுமுறையின் இறுதிக் காலம் என்பதால், இடுக்கி சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனினும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும், சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து…
சினிமவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொதுவெளியில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் அவர்களது வரிகள் அந்த அளவு ஆழமாக மக்களால் ரசிக்கப்பட வேண்டும். வைரமுத்து, வாலி, கார்க்கி, தாமரை, நா.முத்துக்குமார் போன்றவர்களுக்கு ஈடாக தமிழ் சினிமாவில் ஒரு கவிஞர் இருக்கிறார் என்றால் அது சினேகன். ’பாண்டவர் பூமி’ படத்தில் இடம் பெற்ற ”அவரவர் வாழ்க்கையில், தோழா, தோழா” போன்ற பாடல்கள் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார் சினேகன். தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது பாடல்களும் பிரலமடைந்தது. பிறகு நடிகராகவும் களத்தில் இறங்கினார் சினேகன். உலக நாயகன் கமலஹாசன் மீது தீரா பற்று கொண்டிருக்கும் இவர், கமல் கட்சி தொடங்கிய போது, அதில் தன்னையும் இணைத்து கொண்டு தேர்தலிலும் போட்டியிட்டார் சினேகன். தற்போது கமல் திமுகவில் ஐக்கியமாகி விட தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார் சினேகன். திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், தற்போது ஒரு…
கோவையில் அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட ரகளையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்: கோவை விளாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் 2225 எண் கொண்ட அரசு மதுபானக் கடையில், இன்று அதிகாலை முதல் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் மதுபான பாருக்கு மது அருந்த வந்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு: இந்த மோதலில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர்கள் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலை, மதுபான கடைக்கு வெளியே கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர். காவல்துறை விசாரணை: தற்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை…
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கி கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (மே 26) ஏழு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் மழையின் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால்,…
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அழகி தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது முறையாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 108 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து நாட்டு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி விலகியுள்ளார். உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக தெலங்கானாவுக்கு கடந்த 7-ம் தேதி வருகை தந்த அவர், குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்புவதாக கூறி கடந்த 16-ம் தேதி இங்கிலாந்து சென்றார். இந்த நிலையில் அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “போட்டியில், இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம். இது மிகவும் தவறானது. வித்தை காட்டும் குரங்குகளைப்போல அங்கு நாங்கள் அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய்…
தேனி அருகே உள்ள தனியார் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுரேஷின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அன்னஞ்சி விலக்கு பகுதியில் உள்ள தனியார் பருப்பு ஆலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை, மில் வளாகத்தின் மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உறவினர்கள் சந்தேகம் மற்றும் போராட்டம் சுரேஷின் மனைவி நதியா மற்றும் உறவினர்கள், சுரேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.…
நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் தனித்துவமான உணவு வகைகள் உள்ளன. செட்டிநாடு உணவுகளுக்கென்று ஒரு சிறப்பான இடமுண்டு. அவற்றில் செட்டிநாடு கார சட்னி மிகவும் பிரபலம். அதை எப்படி சுலபமாக செய்யலாம் என்பதைப் பார்ப்போம். தேவையான பொருட்கள்: தக்காளி – 2 வரமிளகாய் – 10 பெரிய வெங்காயம் – 1 (சிறியது) புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு) பூண்டு – 12 பல் உப்பு – தேவையான அளவு தாளிக்க: எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி/சுத்தம் செய்யவும். மிக்ஸியில் வரமிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த சட்னியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் செட்டிநாடு கார சட்னி…
18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(25.05.2025) நடைபெற்ற போட்டியில் குஜராத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230 ரன்களை குவித்தது. 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்று தொடரை நிறைவு செய்தது. இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தோனி இந்த தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய அவர், ”இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இன்று தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை”.…
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு ட்ரோன் மூலம் வரும் ஆபத்துகளை தடுத்து அழிப்பதற்கான பாதுகாப்பு கவசம் நிறுவப்படவுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் கொடுத்தனர். அதனை எதிர்த்து, ட்ரோன் உதவியுடன் இந்திய நிலைகள் மீது பொதுமக்கள் மீதும் வழிபாட்டு இடங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சீக்கியர்களின் தலைமை கோயிலாக கருதப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் இரு நாடுகளும் எதிரெதிர் தாக்குதல்களை நடத்திய நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. அமிர்தரஸ் தாக்குதல் முயற்சியை போல், தாக்குதல் முயற்சிகளை…
அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 18-வது ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் பிராவிஸ் 23 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 5…