Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஓய்வா? எனக்கா? இன்னும் நேரம் இருக்கு.. மனம் திறந்த தோனி…
    விளையாட்டு

    ஓய்வா? எனக்கா? இன்னும் நேரம் இருக்கு.. மனம் திறந்த தோனி…

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    68
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(25.05.2025) நடைபெற்ற போட்டியில் குஜராத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230 ரன்களை குவித்தது. 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    70

    இந்த தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 4-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்று தொடரை நிறைவு செய்தது. இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தோனி இந்த தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய அவர், ”இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. இன்று தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு குறித்து முடிவு எடுக்க எந்த அவசரமும் இல்லை”.

    69

    ”உடல் பிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் ஆட்டத்திறனை வைத்து ஓய்வு முடிவு எடுக்க விரும்பினால், சிலர் 22 வயதில் கூட ஓய்வு பெற வேண்டி இருக்கும். தற்போதைக்கு ராஞ்சிக்கு செல்கிறேன். பைக் ரைடு செய்ய உள்ளேன். திரும்பி வருவேன் என்றும் சொல்ல மாட்டேன். திரும்பி வர மாட்டேன் என்றும் இப்போது சொல்ல மாட்டேன். நன்கு யோசித்து முடிவு எடுப்பேன்”.

    68

    ”போட்டிகளில் இன்னும் நாங்கள் ரன் குவிக்க வேண்டும். அதில் சில ஓட்டைகள் உள்ளன. அதனை நிரப்ப வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த சீசனில் சில விஷயங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கேப்டனாக செயல்பட பொருத்தமானவர். அவர் என்னை விட 25 வயது இளையவர். அதைப் பார்க்கும் போதுதான் நான் வயதானதை உணர்கிறேன், எனக் கூறினார்”.

    71

    ”இதன்மூலம், தற்போதைக்கு அவர் ஓய்வை முடிவை எடுக்கவில்லை என்றே தெரிகிறது. தனக்குப் பிறகு இளம் வீரர்கள் தலைமையேற்று சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்று தான் கேப்டன் பொறுப்பை கெயிக்வாட்டிடம் கொடுத்தார் தோனி. ஆனால், நடப்பு சீசனில் சென்னை அணிக்கு எதிர்பார்த்ததை போல அமையவில்லை. இதற்கு அணி முழுமையாக கட்டமைக்கப்படாததே காரணம் என்று கூறப்பட்டது. எனவே, தோனி அடுத்த சீசனில் விளையாடுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்”.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாஜ்மகாலுக்கு ட்ரோன் எதிர்ப்பு கவசம்… தாக்குதல் மிரட்டல் உள்ளதாக தகவல்…
    Next Article சுவையான செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    பிரெஞ்சு ஓபன் : 5மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற போட்டி..! இறுதியில் வென்ற ஜூவான் மேனுவல்..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.