Author: Editor TN Talks

காலை உணவுன்னா இட்லி, தோசைன்னு ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடிச்சுப் போச்சா? உங்க வீட்டுல உப்புமான்னா எல்லாரும் மூஞ்சிய சுளிக்கிறாங்களா? கவலைப்படாதீங்க! இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான, சத்தான ரெசிபி. கோதுமை ரவையும், பாசிப்பருப்பையும் வச்சு ஒரு தடவை உப்புமா செஞ்சு பாருங்க. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி செஞ்சா இன்னும் அட்டகாசமா இருக்கும். பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1/2 கப் கோதுமை ரவை – 1 கப் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு (துருவியது) பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) கேரட் -…

Read More

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டார். தெலுங்கானா, பஞ்சாப் முதல்வர்களும் பங்கேற்றனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பீகார், மேற்கு வங்க முதல்வர்கள் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்த பின், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல். சென்னை பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைத்தல். செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை…

Read More

பீகாரின், பாட்னாவில் நடைபெற்ற மாநில அளவிலான கோ விளையாட்டுப் போட்டியில், கோவை சேர்ந்த தமிழ்நாடு கோ-கேம் அசோசியேஷன் மாணவ, மாணவியர் 16 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் மோதி, ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து உள்ளனர். இப்போட்டியில் மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் என மொத்தம் ஐந்து பேர் தமிழகம் சார்பில் பங்கேற்றனர். கடுமையான பயிற்சிக்குப் பிறகு கள மிறங்கிய இவர்கள், ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதில் கோவை போத்தனூர் ரயில்வே பள்ளி மாணவி சம்ரிதா தங்கப் பதக்கம்மும், சுந்தராபுரம் பகுதியில் உள்ள செங்கோட்டையன் பள்ளி மாணவி லக்ஷனா, மதுசுந்தராபுரம் பகுதியில் உள்ள விக்னேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மாணவி அபி மற்றும் மாணவர் சஞ்சய் ஆகிய நான்கு மாணவர்களும் வெள்ளிப் பதக்கமும் வென்று உள்ளனர். சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் 23-வது இடத்தைப் பிடித்து உள்ள…

Read More

கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைன்மரகாடுகள் நாளை ஒரு நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாமை தென்மேற்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள லலிதா ஐஏஎஸ் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு ஆகியோர் ஆய்வு செய்தனர். தலையாட்டுமந்து பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி பவ்யா, தென்மேற்கு பருவமழைக்கு உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்கள் பாதிக்கப்படும் என்றும் மலை பாதிப்புகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் மின்கம்பங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் நிலச்சரிவு அபாயகரமான இடங்களில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறு கேட்டுக்கொண்டார். ரெட் அலர்ட்…

Read More

நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 353 பொறியியல் கல்லூரிகள், 827 கலை அறிவியல் கல்லூரிகள், 459 பாலிடெக்னிக் கல்லூரிகள், 412 தொழிற்பயிற்சி மையங்களில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022 – 23 கல்வியாண்டில் 13.5 லட்சம் மாணவர்களும், 2023 – 24 கல்வியாண்டில் 14.68 லட்சம் மாணவர்களும், 2024 – 25 கல்வியாண்டில் 13.17 லட்சம் மாணவர்களும் நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். மணவர்களின் உயர்கல்வி வழிகாட்டி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் 2.52…

Read More

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியில்தான் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாகவே, மே 24ஆம் தேதி பருவமழை துவங்கியுள்ளது. இது 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக முன்கூட்டியே பருவமழை துவங்கிய நிகழ்வாகும். கடந்த 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி பருவமழை துவங்கியது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மே 20ஆம் தேதி கோவா அருகே உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி, ரத்னகிரி மற்றும் டபோலி இடையே கரையை கடக்கவுள்ளது. இது மணிக்கு 6 கிமீ…

Read More

ஆளும் கட்சியில் உள்ள பாஜக தலைவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை கூறும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சமீபகாலத்தில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் என்றால், அவர்கள் என்றோ பேசியதன் அடிப்படையில் அவர்களை செயல்பட விடாமல் தடுக்க அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு அன்றைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி எம்பி., ரகுல்காந்தி, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ராகுலின் அந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் பல கண்டனங்கள் எழுந்தனர். பாஜகவின் பிரதாப் கட்டியார், ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து இளம் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பான ஆட்டத்தின் மூலம் நிரூபித்து வருகின்றனர். அதற்கேற்ப இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று (24.05.2025) அறிவித்தது. அதன்படி, இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேப் போல துணை கேப்டனாக ரிஷப் பண்ட்…

Read More

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமம், பூதமரத்துப்பட்டி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருமணம் என்னும் பூரண நாடகம் கோயில் முன்பாக அமைந்துள்ள சிங்கார கலையரங்கில் நடைபெறும். ஆனால் தற்போது திமுக கிளைச் செயலாளர் குணசேகரனின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் சேர்த்து தனியாக டிரஸ்ட் ஒன்றை இரண்டு வருடத்திற்கு முன்பு உருவாக்கி தற்போது கோயில் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் கோயில் நாடகம் மேடை அமைக்கும் இடத்தை தங்களது இடம் என கூறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்து அறநிலையத்துறையிடம் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது திருவிழாவிற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் 5 பேர் இணைந்து பிரச்சனை செய்து வருவதாகக்…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு வெளியான ’ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்தாண்டு வெளியான ’வேட்டையன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவைகளை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ”கூலி” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ப்ரோமோ, போஸ்டர்கள், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற வீடியோ என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாக, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. https://twitter.com/sunpictures/status/1925927256582480281?ref_src=twsrc%5Etfw இந்த நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ”என்னைக்கு குறையாத மவுசு” என்ற வாசகத்துடன் POWERHOUSEVIBE என்ற ஹேஷ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வீடியோவை நேற்று இரவு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது. இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில்…

Read More