Author: Editor TN Talks
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூகநல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும் தன்னையும், குடும்பத்தையும் பாதித்து உள்ளதாகவும் அவர்…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு உதவுவதே தனது நோக்கமாக வைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வந்த போதும், எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தி.மு.க வின் வளர்ச்சி பணிக்கே தன்னையும் குடும்பத்தையும் அர்ப்பணிக்க முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். தி.மு.க வின் வளர்ச்சியும், மு.க. ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தும் சமூக நல அரசியலும் தான் தேர்வு செய்யக் காரணமாக அமைந்ததாகவும் கூறி உள்ளார். தி.மு.க வில் தனது அம்மா கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததையும், தன்னுடைய அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்ததையும்,சமூக ஊடகங்களில் சிலர் மேற்கொண்ட தரக்குறைவான விமர்சனங்களும்…
இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 2025-ன் 18வது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதே மாதத்தில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது. இதையடுத்து இந்திய ஜூனியர் அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான சிறப்பாக விளையாடி வரும் சூர்யவன்ஷி-யும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய…
அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியத்திற்கு அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் தூதரகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாலஸ்தீன ஆதரவு நபர் நிகழ்த்தியதாக கூறப்படும் கருத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், யூத எதிர்ப்பு பயங்கரவாதம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனை அளிப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் இன்று (மே 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின்பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்ததிட்டத்தின்படி, 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வந்தன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதன்படி நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்- மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன. புதிதாக திறக்கப்பட்ட ரயில்நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம்,…
சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாண்டு முனியப்பன் கோவிலில் வைகாசி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதனையொடடி இன்றைய தினம் கோவில் அருகில் உள்ள திடலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக 70க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக பல்லாயிர கணக்கான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். ஒவ்வொரு காளையாக அழைத்து வரப்பட்டு கோவிலில் பூஜை செய்த பின்னர் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்படிருந்தனர். எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கதிரவன் என்பவரை காளை ஒன்று தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு இருந்த மருத்துவ குழுவினர் காயமடைந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அப்பகுதி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்ற மதுரை மேற்கு தொகுதி விஜய்க்கு கை கொடுக்குமா? அரசியலில் மதுரை சென்டிமென்ட் சட்டமன்ற தேர்தல்களில் மதுரை மிக முக்கியமான இடமாகப் பார்க்கப்படுகிறது. மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக இடங்களில் வென்ற கட்சி மட்டுமே இதுவரை ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் 1980-ம் ஆண்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் நின்று வெற்றி பெற்றார். அந்த ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்து, அவர் முதலமைச்சரும் ஆனார். அதேபோல் 2011, 2016 மற்றும் 2021 என அடுத்தடுத்து 3 முறை அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று நீண்ட காலமாக அதிமுகவின் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏவாக இருக்கிறார். மறுமுனையில், திமுகவின் முக்கிய தலைவர்களான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி,…
கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, சித்ரா பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் விமான மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதில் அவ்வப் போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதுடன் அதிகாரிகள் சோதனைகளில் பிடிபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி…