Author: Editor TN Talks
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சியில் ரூ.300.51 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதேப் போல ரூ.188 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.188 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும், இதனால் சாலைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, விபத்துகள் எற்படும் அபாயம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பைப்லைன் இணைப்பதற்காக சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டி குழாய்கள் இணைக்கப்படுகிறது. பள்ளத்தை தோண்டி குழாய்களை புதைத்து பணி முடிந்த பிறகு கூட, தோண்டிய பள்ளத்தை மூடாமல் மண்ணை வாரி இறைத்துவிட்டு சென்றுள்ளனர்…
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய உழவர்களை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது”. ”மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில், நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள் இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது”. ”குறுவை பாசனத்திற்காக…
பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டன், பல்வேறு பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, க்ரை ஃபிரீடம், மால்கம் எக்ஸ், ஃபிளைட், த டிராஜடி ஆஃப் மெக்பத், அமெரிக்கன் கேங்ஸ்டர், கிளாடியேட்டர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். குளோரி மற்றும் ட்ரெயினிங் டே திரைப்படங்களில் வெளிப்படுத்திய மிக சிறந்த நடிப்பிற்காக அவர் இரண்டு முறைகள் ஆஸ்கர் விருது பெற்றுள்ள பெருமையுடையவர். இந்நிலையில், டென்ஸல் வாஷிங்டன் நடித்துள்ள சமீபத்திய திரைப்படமான ‘ஹையஸ்ட் டு லோயஸ்ட்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஸ்பைக் லீ இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விழாவில், டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. இந்த மரியாதையை அவரது நெருங்கிய நண்பரும் பிரபல இயக்குநருமான ஸ்பைக் லீ வழங்கிய போது, நிகழ்வில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டிப் பெரும் வரவேற்பை அளித்தனர். விழா தொடக்கத்தில்,…
2026 சட்டமன்ற தேர்தல் வேலைகளை திமுக ஏற்கனவே தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக குழு நியமித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்டங்களை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் சம்பந்தமாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளராக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நிர்வாகிகளுடன் ஆ.ராசா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தெற்கு, தென்மேற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, மற்றும் காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து நாளை (22.05.2025) முதல் ஜூன் 10-ம் தேதி வரை கலந்துரையாட உள்ளனர்.…
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், பி.எம். ஸ்ரீ, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. கல்வி திட்டத்துக்கான நிலுவை நிதி வழங்கப்படவில்லை. சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும், அத்தோடு தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்தினால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும், நாளையும் (21,22) ஆகிய தேதிகளில் இரட்டை இலை தொடர்பான வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இது…
திண்டுக்கல் மாவட்டத்தில் 98பட்டி தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது காளியம்மன், பகவதியம்மன் கோயில். ஆண்டுதோறும் இக்கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுகான 381-வது வைகாசி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று (21.05.2025) காலை தொடங்கியது. இதில் காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், காளியம்மன், பகவதி அம்மன் மற்றும் கருப்பணசாமி ஆகிய சாமிகளின் வேடமணிந்து சுமார் 200-க்கும் மேற்பட்டொர் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தலைவர் ஊர் நாட்டாமை அழகர்சாமி தலைமையில், துணை தலைவர் அரசு ஒப்பந்ததாரர் மேட்டுப்பட்டி முருகன், செயலாளர் கைலாசம், பொருளாளர் முருகன், இணை பொருளாளர் வினோத் குமார், ஊர் சேர்வை முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். மேலும்…
ரஜினிகாந்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் ‘ஜெயிலர் 2’ தற்போது பரபரப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் தலையாய நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். சினிமா வட்டார தகவல்களின் படி, பாலகிருஷ்ணா இப்படத்தில் சிறப்புத் தோற்றமாக வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்ற உள்ளார். அதிலும் ஒரு மாஸ் ஃபைட் சீன் மற்றும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஷூட்டிங் செட் பின்னணியில் நடைபெறும் சிக்கலான காட்சி அடங்கும். இந்த 10 நிமிட காட்சிக்காகவே அவருக்கு ரூ.22 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் இடையிலான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகி வரும் நிலையில், பாலகிருஷ்ணாவின் வருகை இந்த படத்துக்குச் சிறப்பே சேர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அனுமதியின்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை அரசு மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம், இதுவரை அவகாசத்தை பயன்படுத்த முடியாத மனையர்கள் இன்னும் ஒரு வாய்ப்பு பெறுகின்றனர். அதன்படி, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கடந்த ஆண்டு பிப்ரவரி 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நகர் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. எனவே, 2016-ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி. தேதி அல்லது அதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்த மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட…
45 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம். திரளான பக்தர்கள் மெய் சிலிர்த்து நாதஸ்வர இசையுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானது நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இத்திருகோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் வெகு விமர்சையான விழாவாகவும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் 17 நாட்கள் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் இந்த உற்சவத்தின் போது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளும் மண்டபம் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு குளிர்ச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.கோடை…