Author: Editor TN Talks

ஒரே ஒரு படம், ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட ரசிர்களையும் தனது கிறங்க வைக்கும் அழகால் கட்டிப்போட்டவர் கயாடு லோஹர். ட்ராகன் படம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதாநாயகன் ப்ரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு கொடுத்த வரவேற்பைக் காட்டிலும் கதாநாயகி கயாடு லோஹருக்கு அபரிமிதமான வரவேற்பை பெற்றுத் தந்தது. வழித்துணையே என்ற ஒரு பாடலும் அதில் அவரது அழகும், திருமண நிச்சயதார்த்த விழாவில் அவர் போட்ட ஆட்டமும் கயாடு லோஹர் மீது இளைஞர்களை பித்தாக்கியது. அஸ்ஸாமில் பிறந்து புனேவில் வசித்து வருபவர் கயாடு லோஹர். 2021-ம் ஆண்டு கன்னடத்தில் முகில்பேட்டை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2022-ல் மலையாளத்தில் நடித்துப் பார்த்தார், அப்போதும் வரவேற்பு இல்லை. அதன்பிறகு தெலுங்கிலும், மராத்தியிலும் கூட நடித்தார். எதனாலோ அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் தமிழ் படவுலகம் கயாடு லோஹரை தாங்கி பிடித்துக் கொண்டது. ஒரே ஒரு படம் தான் ட்ராகன்.. அதன்பிறகு கயாடு லோஹர்…

Read More

38 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைப் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பாக கமலே இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளார். கூடவே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜிங்குஜிங்குச்சா என்று தொடங்கும் அந்த பாடலை கமலே எழுதி இருந்தார். அந்த பாடலுக்கு சிம்புவும், சான்யாவும் போட்ட ஆட்டம் நெட்டிசன்களால் வைரலானது. இதனைத் தொடர்ந்து பாடல் வெளியீட்டு விழா எப்போது என்ற எதிர்பார்ப்பு தொக்கிக் கொண்டது. மே மாதம் 16-ந் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே…

Read More

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். இதேபோன்று உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 7-ந் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் துல்லிய தாக்குதல் மேற்கொண்டனர். நள்ளிரவில் 25 நிமிடங்கள் நீடித்த இந்த வேட்டையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், அவர்களது உறவினர்களும் கொல்லப்பட்டனர். வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு…

Read More

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நூறு கோடி மான நஷ்ட ஈடு வழக்கில், கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர் நிறுவனத்துக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கில் தங்கள் தரப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி தோனி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை…

Read More

சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கிற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு மரணப் படுக்கையில் இருந்தது. சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கேடுகெட்ட அடிமை ஆட்சியைப் நடத்திய பழனிசாமி, திராவிட மாடல் அரசை பார்த்துக் குற்றம் சொல்வதற்கு தகுதி இல்லை. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சீரழிந்து போயிருந்த சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தி நிலையான ஆட்சியை வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படுகின்றன. குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படுகிறார்கள். கடந்த 4 ஆண்டுக் காலத் திமுக ஆட்சியில் தொடர்ந்து தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் குறைந்து…

Read More

சமூக ஊடகங்களில் கொக்கரிப்போர் கவனத்திற்கு.. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்து வருகிறது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இவை சரியா தவறா என்ற வாதங்களும் நாட்டுக்குள் பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், போர் முகத்தை விடவும் சமூக ஊடகங்கங்களில் போர் குறித்த ஆவேசம் கலவரமாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்படும் பதற்றமே நமக்கிருக்கும் முக்கிய கடமையை அறிவுறுத்துகிறது. அது என்ன? மீண்டும் ஒருமுறை ‘பின்னணி’யைப் பார்ப்போம்… காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். கணவனை இழந்த பெண், அவரது சடலத்திற்கு அருகே மனமுடைந்து அமர்ந்திருந்த அந்நிகழ்வின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தீ போல் பரவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்தான் இது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்தது. அந்தப் புகைப்படமும் அதன்…

Read More