Close Menu
    What's Hot

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு…
    இந்தியா

    பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்… கனமழையில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அக்னி வெயில் இன்னும் முடியவில்லை. வரும் 28-ம் தேதி வரை அக்னி வெயிலின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

    அந்த வகையில் பெங்களூருவில் நேற்று முன் தினம் (18.05.2025) இரவில் பெய்யத் தொடங்கிய மழையானது விடாமல் கொட்டித் தீர்த்தது. மறுநாள் காலை வரை கொட்டிய மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.

    8 1

    குறிப்பாக ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மழைநீர், வெள்ளம் மின்விநியோகம் பாதிப்பு என மக்கள் கடும் அவதி அடைந்தனர். மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் 35 வயது பெண்மணி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

    7 1 scaled

    தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் மற்றும் வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் சிறிய வகை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள்… திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!
    Next Article ED சோதனை வளையத்தில்… நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்…
    Editor TN Talks

    Related Posts

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!

    உள்ளாட்சி தேர்தல்… திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா?

    பெற்றோர்களே உஷார்!. தண்ணீர் வாளியில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி!. குமரியில் சோகம்!

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழா-   தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

    ஜூன் 1 முதல் தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் நேரங்கள் மாற்றம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.