Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!
    Featured

    அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும் ஓர் அழகான குடும்பத்தை சிதைத்து விட்டதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகர்கோவில் சிறையில் போலீசாரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட விசாரணைக் கைதி சபரி வர்மனின் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ளக் கூட முடியாத வயதில் இருக்கும், சபரி வர்மனின் சிறுவயது மகனையும், வாழ வேண்டிய வயதில் மகனை இழந்து தவிக்கும் அவரது வயதான பெற்றோர்களையும், கனவுகள் கலைந்து இன்று தனிமரமாக நிற்கும் அவரது மனைவியையும் பார்க்கையில் நெஞ்சம் கனத்துப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும் ஓர் அழகான குடும்பத்தை எப்படியெல்லாம் சிதைத்து விடும் என்பதற்கு, அவலச் சான்றாக நிற்கும் இக்குடும்பத்தை, அரசு எப்பொழுதும் கைவிட்டு விடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ள நயினார் நாகேந்திரன்,  இனியொரு முறை இதுபோன்ற லாக்-அப் மரணம் நிகழவும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

    குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பும், கடமையும் நீதிமன்றங்களுக்கே உண்டு என்பதை தமிழகக் காவல்துறைக்கு முதல்வர் விஜய்  அழுத்தமாக உணர்த்த வேண்டும்! தமிழகக் காவல்நிலையங்களில் தொடரும் தனிமனித உரிமை மீறல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

    BJP Tamil Nadu government officials Nainar Nagendran Political Statement Tamil Nadu News Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    Next Article போக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.