Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    Featured

    காவிரி நீர்: முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    Editor web2By Editor web2July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை நீரை முழுமையாகப் பெற மாநில அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 2.91 டிஎம்சி மட்டுமே கர்நாடகா திறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரில், இதுவரை வழங்கப்பட வேண்டிய அளவு முழுமையாக திறக்கப்படவில்லை என்றும், ஜூன் மாத நிலுவை நீரையும் கர்நாடக அரசு இன்னும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலை விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நீர் பகிர்வு வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.

    வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்தின் முழு பங்கு நீரையும் பெற்றுத் தர, தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    CauveryDispute CauveryWater EPS tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீடிக்கும் பதற்றம்.. நாடாளுமன்ற முற்றுகை எதிரொலி..!! டெல்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்..!!
    Next Article அழகான குடும்பத்தை சிதைத்த அரசு அதிகாரிகளின் ஆணவமும், அராஜகமும்….  நயினார் நாகேந்திரன் வேதனை!
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.