Close Menu
    What's Hot

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் 24-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை!

    Editor web2By Editor web2July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 25 மற்றும் 26-ம் தேதிகளிலும் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இன்று முதல் 24-ம் தேதி வரை உள் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ChennaiRains RainAlert TamilNaduWeather WeatherUpdate
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோக்சோ வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
    Next Article மதுரை; அரசு வேலை வாங்கித் தர்றதா லஞ்சம் கேப்பாங்க… ஏமாந்துறாதீங்க…. அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.