Author: Editor TN Talks
சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக இன்று (மே 14) மாலை திறக்கப்படுகிறது. கேரளாவின் புகழ்ப்பெற்ற வழிபாட்டுத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலில் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுண்டு. இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று (மே 14) முதல் 5 நாட்களுக்கு கோயில் நடை திறந்திருக்கும். கோவில் தந்திரிகள் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையைத் திறக்கவுள்ளார். அப்போது சிறப்பு தீபாராதனை மற்றும் பதினெட்டாம் படியின் கீழ்ப் பகுதியில் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐயப்பனுக்கு நாளை…
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் உரிய தண்டனை வழங்கப்பட்டது போல் விரைவில் கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ”2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசினேன். இப்போது நான் சொன்னது போலவே தீர்ப்பு வந்திருக்கிறது” என்று கூறினார். மேலும் “இதே போல் கோடநாடு வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை விரைவில் வழங்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி எதற்காகச் சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால் தான் சொல்லித்தான் 100 நாள் வேலைத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்று கூறி வருகிறார். இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் செய்வதுதான்…
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இருநாடுகளுக்கும் மாறி மாறி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. அதேப் போல விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலானது கடந்த சனிக்கிழமை (10.05.2015) நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் வரும் 17-ம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மே 24-ம் தேதி ஜெயப்பூரில் நடைபெற இருப்பதாகவும், நிறுத்தப்பட்ட ஓவர்களில் இருந்து போட்டி தொடரும் எனக் கூறப்படுகிறது. பிளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் படி குவாலிபையர் 1 – மே 29-ம் தேதியும், எலிமினேட்டர்…
வரும் 16 ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொகுதியின் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊட்டியில் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 127 வது மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மலர்கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிப்பதாலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நாளை தொடங்கி, 25 ஆம் தேதி வரையிலும் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக ஊட்டி பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் நாளை மலர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட இருக்கிறார்.
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜி.பே மூலம் பணம் பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நேரம் சிறை அதிகாரிகள் இவர்களுக்கு தேவையான போதைப் பொருட்கள் உட்பட சில பொருட்களை கைதிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சப்ளை செய்வதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். சிறையில் உள்ள கைதிகள் மூலம் மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போல, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து அந்த திண்பண்டங்கள் மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியை சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இவ்வாறு விற்பனை…
’லவ் டுடே, டிராகன்’ பட ஹிட்டைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படங்கள் 2கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரதீப் வளர்ந்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காதல் இன்சூரன்ஸ் கம்பெனி” மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ”டியூட்” போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், டியூட் தலைப்பு தன்னுடையது என நடிகரும், இயக்குநருமான தேஜ் கூறியிருப்பது…
பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு நீதிமன்றம் கொடுத்த பிறந்தநாள் பரிசு இது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களில் சிலர் அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகளின் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்பதால், காவல்துறையினர் வழக்கில் முழு ஈடுபாடு காட்டவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட 48 பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர். விசாரணை தீவிரமடைந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்…
கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமான கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்த, அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், உலக நாடுகளிடம் கடன் கேட்டது. தொடர்ந்து அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் நாளை, மே 15 முதல் வழக்கம்போல் மீண்டும் பெறப்படும் என ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த மே 1 முதல் ஜூன் 15 வரை, கோடை விடுமுறை காரணமாக, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் சிபாரிசு கடிதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த காலக்கட்டம் முடிவடையும் நிலையில், முந்தைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. தினமும் சுமார் 5,000 பேர் வரை முக்கியர் சிபாரிசு வழியாக தரிசனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர் திருப்பதி ஏழுமலையானின் சகோதரியாக கருதப்படும் திருப்பதி கங்கையம்மன் அம்மன் கோவிலில், ஆண்டு தவிர்க்க முடியாத திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையும் படிக்க: பாகிஸ்தான் ராணுவ தளங்களில் இந்திய விமானப்படையின் தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல்! அதிகாலை…