Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த புதிய சிக்கல்… ’டியூட்’ படத் தலைப்பு காப்பியா?
    சினிமா

    பிரதீப் ரங்கநாதனுக்கு வந்த புதிய சிக்கல்… ’டியூட்’ படத் தலைப்பு காப்பியா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ’லவ் டுடே, டிராகன்’ பட ஹிட்டைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படங்கள் 2கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரதீப் வளர்ந்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காதல் இன்சூரன்ஸ் கம்பெனி” மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ”டியூட்” போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

     

    மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், டியூட் தலைப்பு தன்னுடையது என நடிகரும், இயக்குநருமான தேஜ் கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    ”ஒரு வருடத்திற்கு முன்பே ’டியூட்’ படத்தை அறிவித்து விட்டோம். மைத்திரி மூவி மேக்கர்ஸ் அவர்களின் படத்திற்கு எங்கள் பெயரை வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மைத்ரி போன்ற ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஹயத்தை ஏற்கனவே அவர்களிடம் தெரியப்படுத்தி விட்டேன். அவர்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்ப்பார்ப்பதாக” தேஜ் தெரிவித்துள்ளார்.

     

    தேஜ் ’டியூட்’ என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    Cinema Dragaon Dude Movie Pradeep ranganathan Tamil movies டிராகன் பிரதீப் ரங்கநாதன் புதிய படம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொள்ளாச்சி பாலியல் வழக்கு… இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய கருணாஸ்…
    Next Article மாமியார் ஜி.பே மூலம் பணம்… கைதிகளிடம் கைவரிசை… சிக்கிய வார்டன்…
    Editor TN Talks

    Related Posts

    ஜீவாவின் ’தகப்பன்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ரசிகர்களிடம் அமோக வரவேற்பு..!

    August 3, 2026

    ‘ஸ்பைடர் மேன்’… முதல் வாரத்திலேயே ரூ.7,700 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து உலக சாதனை!

    August 3, 2026

    மாஸ் காம்போ உறுதி.. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘கார்த்தி 31’!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.