Author: Editor web3
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மண்டலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி போட்டியிடுகிறார். பத்மநாபபுரம் தொகுதியில் ரமேஷ் மற்றும் குளச்சல் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மேற்கு மாவட்ட நிர்வாகி நீக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், தஞ்சாவூர் தொகுதிக்கு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருப்பத்தூர் போன்ற தொகுதிகளிலும் கட்சி தனது வேட்பாளர்களை உறுதி செய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பாஜக வேட்பாளர்…
இந்தியாவின் நாளைய நம்பிக்கைகளான சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தை புற்றுநோய் எனும் கொடிய அரக்கன் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள அண்மைக்கால புள்ளிவிவரங்கள், இந்தியக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2023-ம் ஆண்டின் ஆய்வு முடிவுகளில் 5 முதல் 19 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரின் மரணத்திற்கு மிக முக்கியமான 10 காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது, மருத்துவ நிபுணர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. புற்றுநோயின் பல்வேறு வகைகளில், ரத்தப் புற்றுநோய், மூளைப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மற்றும் நிணநீர் மண்டலப் பாதிப்புகள் ஆகியவையே இந்தியக் குழந்தைகளை அதிகளவில் அச்சுறுத்துவதாக இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கும் செல்ல வேண்டிய பிள்ளைகள், இன்று கொடிய வேதிச் சிகிச்சைகளுக்காக (Chemotherapy) மருத்துவமனை அறைகளில் முடங்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோயைப் பற்றிய போதிய புரிதல் சமூகத்தில்…
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு நடவடிக்கையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்தநிலையில், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முரளிதரன் தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது ராசிக்கு மிகவும் உகந்த நாள் என்பதால், கட்சியின் அனுமதிக்காகக் காத்திருக்காமல் அவர் மனுத்தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. கட்சியின் ஒழுங்குமுறைக்கு முரணான இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முரளிதரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் சபாநாயகர் தனபால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் பி. தனபாலுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தேர்தலில் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. இதனால் தனபாலுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோனது. இதனால் இபிஎஸ் மீது தனபால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், 1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார். அம்மாவின் அன்பு! என்றும்…
ஈரான் தனது தொடர் போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் வளைகுடா நாடுகளையும் பாதித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு மாதம் கடந்த பின்னரும், போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருப்பினும் இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பிரம்மாண்ட பாலங்களை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரானின் கர்ஜில் (Karaj) அமைந்துள்ள ஆசியாவின் மிக உயரமான பாலங்களில் ஒன்றான B1 பாலத்தை ஏவுகணை மூலம் தகர்த்ததற்குப் பதிலடியாக இந்த ‘ஹிட் லிஸ்ட்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் படுகாயம்டைந்தனர். ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி முகமையின் தகவலின்படி, வளைகுடா நாடுகளிலும் ஜோர்டானிலும் உள்ள பல பிரபலமான பாலங்கள், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) சாத்தியமான தாக்குதல் இலக்குகளாக அமையக்கூடும். ஈரானின்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 4) சென்னை வருகை தருகிறார். சென்னையில் தங்கியிருக்கும் பிரதமர், பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மேலிடத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ள நிலையில் இந்த கட்டாய அழைப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் கேரள சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி பாலக்கோடு பகுதிக்கு வருகை தந்தபோது, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது, கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தற்போது கோவையில்…
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மருந்துச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசுடன் ‘மிகவும் விருப்பமான நாடு’ (Most Favored Nation – MFN) என்ற அடிப்படையில் மருந்து விலை குறைப்பு ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களுக்கும், அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளைத் தொடங்கி உற்பத்தியை மேற்கொள்ளும் (Onshoring) நிறுவனங்களுக்கும் இந்த வரியிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கப்படும். விலையில் சமரசம் செய்யாமல் அமெரிக்காவில் உற்பத்தி மையங்களை மட்டும் உருவாக்கும் நிறுவனங்களுக்கு 20% வரி விதிக்கப்படும். 4 ஆண்டுகளில் ரேட் குறித்த டீல் போடவில்லை என்றால் வரிகள் 100% ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களின்…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியின் போது, 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அவரது இந்த அதிரடி ஆட்டம் அந்த அணி 226 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்தநிலையில், இந்தப் போட்டியின் போது அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வருண் சக்கரவர்த்தி பிடித்த கேட்ச் தரையோடு தரையாக இருந்ததால் அது சரியான கேட்ச் தானா? என்ற கேள்வி இருந்தது. எனினும், மூன்றாவது அம்பயர் சரியான ஆதாரம் இல்லாத நிலையில் அது கேட்ச் தான் என அறிவித்தார். இதை அடுத்து அபிஷேக் சர்மா பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அப்போது அவர் அதிருப்தியுடன் வெளியேறினார். அப்போது அபிஷேக் சர்மா பயன்படுத்திய வார்த்தைகள்…
சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 3) அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளை அதிகரித்துள்ளது. இருப்பினும், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்தநிலையில், இன்றும் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.…
ஈரான் மீது கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் (Deal) செய்துகொள்ளாமலேயே அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும், ஈரானின் அணு ஆயுதக் கனவு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஈரான் இனி அணு ஆயுதங்களை வேகமாக உருவாக்க முடியாத அளவுக்கு அந்நாட்டை “கற்காலத்திற்கு” (Stone Age) தள்ளிவிட்ட பிறகே அமெரிக்கா அங்கிருந்து கிளம்பும் என்று டிரம்ப் மிகக் காட்டமாகத் தெரிவித்தார். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு 100% அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர், இன்று இரவு 9 மணிக்கு (அமெரிக்க நேரம்) போர் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த…