Close Menu
    What's Hot

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது!. இன்றைய ரேட் இதோ!
    தமிழ்நாடு

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது!. இன்றைய ரேட் இதோ!

    Editor web3By Editor web3April 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold april 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 3)  அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.13,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருவதால் நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகளை அதிகரித்துள்ளது.

    இருப்பினும், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்தநிலையில், இன்றும் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்வு செய்து வருகின்றனர். உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டில் தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    பொருளாதார நிபுணர்களின் கணிப்புப்படி, சர்வதேச சந்தையில் நிலவும் இந்த சூழல் தொடர்ந்தால், வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கின்றனர். திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பு மற்றும் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், இந்த விலை உயர்வால் தற்போது திகைப்பில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதந்தை-மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..! சிபிஐ தரப்பு வாதம்..!
    Next Article சர்ச்சை கேட்ச்!. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினாரா அபிஷேக் சர்மா?. ஷாக் கொடுத்த பிசிசிஐ!
    Editor web3
    • Website

    Related Posts

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    June 10, 2026

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அலிசா அப்துல்லா கொடுத்த பரபரப்பு புகார்..!! யூடியூபர் முக்தார் அதிரடி கைது..!!

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    கறுப்பர் இனவெறியா?. சோமாலிய நடுவரை நாட்டை விட்டு விரட்டிய அமெரிக்கா!. வெடித்த சர்ச்சை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.