Author: Editor web3

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை இன்று சென்னையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக அதிரடியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா ‘பிரிட்ஜ்’ (குளிர்சாதனப் பெட்டி), ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், மற்றும் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த குடும்பங்களுக்கு ஒருமுறை நிதியாக 10,000 ரூபாய், மாணவர்களின் கல்வி கடன் ரத்து, மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டை 10.5 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் இன்று வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, தனது…

Read More

சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ,அப்போது மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம்” என முழக்கமிட்டனர். மேலும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது, இதன் விளைவாகச் சாதாரண மக்கள் இன்று பட்டினியால் வாடுகின்றனர்” என்று கார்கே சாடினார். ராகுல் காந்தி ஏற்கனவே குறிப்பிட்டது போல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாடுகளுக்கு இணங்கச் செயல்படுவதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) கேள்விக்குறியாகியுள்ளதாக…

Read More

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையை ஆதித்ய பிர்லா குழுமம் கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் ‘Royal Challengers’ என்ற பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில், ‘Royal Challengers’ என்பது முந்தைய உரிமையாளர் விஜய் மல்லையாவின் மதுபான பிராண்டின் பெயராகும். தற்போது புதிய உரிமையாளராகப் பொறுப்பேற்றுள்ள ஆதித்ய பிர்லா நிறுவனம், தனது சொந்த பிராண்ட் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அணியின் பெயரை மாற்ற ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் கீழ் உள்ள ‘UltraTech’ அல்லது ‘Grasim’ போன்ற பிராண்டுகளின் பெயர்கள் அணியுடன் இணைக்கப்படலாம் அல்லது முற்றிலும் புதியதொரு பெயர் சூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ‘RCB’ என்பது வெறும் ஒரு பெயரல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “பெயரை மாற்றினால் அணியின் அடையாளம் மறைந்துவிடும்” என்றும், “பெங்களூரு அணியின் பாரம்பரியத்தை மாற்ற வேண்டாம்” என்றும் ரசிகர்கள்…

Read More

சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-ஈரான் மோதலைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் அணு ஆயுதக் கொள்கை குறித்து மிக முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல், வடகொரியா தனது பாதுகாப்பிற்காக அணு ஆயுதங்களை வைத்திருப்பது எவ்வளவு சரியானது என்பதற்கான சான்றாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கிலிருந்து ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கு வலிமையான அணு ஆயுத பலம் மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகளை கிம் ஜாங் உன் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது அமெரிக்கா முன்வைத்த “இனிமையான பேச்சுகளையும்” அந்த நாடு கொடுத்த கடுமையான அழுத்தங்களையும் தான் நிராகரித்தது எவ்வளவு தீர்க்கதரிசனமான முடிவு என்பது இப்போது நிரூபணமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்: மையிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை (வடக்கு), கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை (தெற்கு), சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்(தனி), ராதாபுரம், நாகர் கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை(தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான பாமக-விற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளுடன், சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளும் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளன. பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்:…

Read More

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இன்று தன் அடையாளத்தை இழந்துவிட்டது; இதனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெக வாசலில் காத்துக்கிடக்கிறார்கள், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் முறைப்படி தவெக-வில் இணைய உள்ளனர்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் டி.செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி ஒழுங்குமுறைக்கு முரணாக இருந்ததாகக் கூறி, அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கரூரில் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் எம்பி இன்பதுரை ஆகியோர், கரூரில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எம்.ஆர்,விஜயபாஸ்கர்,  முதலில் 12 செட் போட்டார்கள், அதன்பிறகு 40 செட் போட்டார்கள், தற்போது 120 செட் போட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைத்து தரப்பினருக்கும் புகார் கொடுத்துள்ளோம். பேனர் வைத்து மீட்டிங் நடத்தினர். நாங்கள் புகார் கொடுத்த பிறகு பேனரை நீக்கி உள்ளனர். செந்தில் பாலாஜிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.இடைத்தேர்தலில் எவ்வாறு செந்தில் பாலாஜி செயல்பட்டாரோ அதுபோன்று இப்போது செயல்படுகிறார். மக்களுக்கு பணம் கொடுத்து, சாப்பாடு போட்டு, சரக்கு கொடுத்து ஓட்டு வாங்குவதை விட…

Read More

234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பத்தாண்டுகால படுமோசமான அதிமுக ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப்…

Read More

ஸ்ரீபெரம்பூர் தொகுதியை விசிக கேட்டதால், செல்வப்பெருந்தகை சென்னையில் உள்ள ஒரு தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், நான் தொகுதி மாறுவதாக எங்கெங்கும் சொல்லவில்லை..நான் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று பதிலளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகள் எவை குறித்து, தி.மு.க பேச்சுவார்த்தை குழு டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொருப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதியின் பட்டியலைப் திமுக குழுவுடன் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக குழுவுடன், காங்கிரஸ் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் கேட்ட…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாஜக 27, பாமக 18, அமமுக 11, ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (IJK) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தங்களுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் எந்தச் சின்னத்தில் களமிறங்குவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விரிவாக ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட அனுபவம் இருந்தாலும், இந்த முறை கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்ட பாரிவேந்தர் ஆர்வம் காட்டி…

Read More