Author: Editor web3
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாஜக 27, பாமக 18, அமமுக 11, ஆகிய கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (IJK) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தங்களுக்கு 2 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது மற்றும் எந்தச் சின்னத்தில் களமிறங்குவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் விரிவாக ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த காலங்களில் சில தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட அனுபவம் இருந்தாலும், இந்த முறை கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்ட பாரிவேந்தர் ஆர்வம் காட்டி…
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையில் திமுக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் இடங்களை கேட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. புதிய கட்சிகளின் வருகை காரணமாக தொகுதிகளை குறைத்து கொள்ளுமாறு திமுக கோரிக்கை வைத்து வந்த நிலையில், சில கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதனால் தொடர்ந்து திமுகவின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தவாகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து உதயசூரியன் சின்னத்தில் நின்று வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தேர்தலில் தவாகவுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டுமென சில கோரிக்கைகளை முன்வைத்தார் வேல்முருகன். ஆனால் திமுக தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். இதனை தொடர்ந்து…
கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் நடிகை மோனாலிசா. அந்தப் புகழின் மூலம் அவருக்குத் திரையுலகில் வாய்ப்புகள் தேடி வந்தன. அந்த வகையில், தற்போது ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ (The Diary of Manipur) என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால், தனது முதல் பட அனுபவமே தனக்கு மிகப்பெரிய கசப்பைத் தந்துள்ளதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக அவர் பகீர் புகாரை முன்வைத்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னைத் தவறான எண்ணத்துடன் அணுகியதாகவும், பலமுறை தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும் மோனாலிசா குற்றம் சாட்டியுள்ளார். “கும்பமேளாவில் எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், ஒரு அறிமுக நடிகை என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி…
“கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை திரைக்கதையை தற்போது கையிலெடுத்துள்ளது. பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான…
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க திருப்பமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம் வாங்கியுள்ளது. இதனையடுத்து, ஆர்சிபி அணியின் புதிய தலைவராக (Chairman) குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் அதே ஐபிஎல் களத்தில் ஒரு வீரராக நுழையப் போராடியவர், இன்று ஒரு மிகப்பெரிய அணியின் உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் மாறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஆர்யமான் பிர்லாவின் கிரிக்கெட் பயணம் ஒரு சாதாரண வீரரைப் போலவே போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. மத்திய பிரதேச (MP) மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய இவர், ஒரு சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், நட்சத்திர…
சென்னையில் இன்று (25) ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,08,800 க்கு விற்பனையாகிறது. இதேபோல், கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் காலையில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து…
2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். கொங்கு மண்டலம், தென் மண்டலம் மற்றும் வட தமிழகம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி இந்த 23 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் 23 முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்பார்த்தபடியே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இதேபோல் தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்- நத்தம் விஸ்வநாதன், ராயபுரம் – ஜெயக்குமார், குமாரபாளையம்- தங்கமணி, மயிலம்- சிவி சண்முகம், மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ, பாலக்கோடு- கே.பி. அன்பழகன், நன்னிலம்- ஆர். காமராஜ், அரியலூர்- தாமரை ராஜேந்திரன், வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன், விராலிமலை- சி.விஜயபாஸ்கர், கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ, திருமங்கலம் – ஆர்.பி.…
ஈரானுடன் நிலவி வந்த போர்ச் சூழலில் அமெரிக்கா முழுமையான ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். “இந்த போரில் நாம் வென்றுவிட்டோம். ராணுவ ரீதியாக ஈரான் தற்போது செயலிழந்துவிட்டது,” என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் அமெரிக்கப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்பரப்பில் எந்தவிதத் தடையுமின்றி பறந்ததாகவும், அதைத் தடுக்கும் வலிமையற்று ஈரான் ராணுவம் வேடிக்கை பார்த்ததாகவும் அவர் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த ராணுவத் தோல்வியால், ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். “அவர்கள் இப்போது எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும்,” என்று அவர் கூறினார். ஆனால், டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் அரசு உடனடியாக…
திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது. பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பைக் கோராமல், ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதைக் கோருகிறது. மத்திய பாஜக அரசு முன்னோக்கிச் செல்வதற்கு முன், சற்று நிறுத்தி, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ல் 29 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிக, இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையான 10 இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2006-ல் தனித்துப் போட்டியிட்டு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அக்கட்சி, பின்னர் பல்வேறு கூட்டணிகளில் இணைந்து போட்டியிட்டாலும் வாக்கு சதவீதத்தில் பெரும் சரிவையே சந்தித்தது. தேமுதிக கடந்து வந்த பாதை: 2006 – 232(தனித்து போட்டி), 2011- 41(அதிமுக+), 2016 – 105(மக்கள் நலக் கூட்டணி), 2021 – 60(அமமுக+), 2026 – 10(திமுக+). குறிப்பாக 2021 தேர்தலில் வெறும் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது திமுக கூட்டணியில் 10 இடங்களைப் பெற்றுள்ளதை அக்கட்சியின் இருப்புக்கான ஒரு போராட்டமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். திமுக கூட்டணியில் இதுவரை 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 28 இடங்களும், தேமுதிகவுக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் விசிக (8), சிபிஐ…