Author: Editor web3

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் சீசன் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கல் சோமானி (Kal Somani) தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு சுமார் ரூ.15,290 கோடிக்கு (1.63 பில்லியன் டாலர்) வாங்கியுள்ளது. இந்த அதிரடி ஒப்பந்தத்தின் மூலம், உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் கிளப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த முதலீட்டாளர் குழுவில் வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ரோப் வால்டன் மற்றும் என்.எஃப்.எல் (NFL) அணியின் உரிமையாளர்களான ஹாம்ப் குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2026 ஐபிஎல் தொடர் முழுவதும் பழைய நிர்வாகத்தின் கீழேயே அணி செயல்படும். இருப்பினும், இந்த சீசன் முடிவடைந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முழுமையான உரிமம் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் கல் சோமானி தலைமையிலான புதிய குழுவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். ஏற்கனவே இந்த அணியில் சிறுபான்மை பங்குகளை…

Read More

சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாகச் சரிந்து, சவரனுக்கு ரூ2,720 வரை குறைந்திருந்தது. இது நகை வாங்குவோரிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது ஆனால் இன்று மாலை  மீண்டும் விலை எகிறியது. சவரனுக்கு ரூ2,000 வரை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,750-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேற்காசிய நாடுகளில் போர் நிறுத்த அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை மாற்றத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையில் விலை உயர்ந்த நிலையில், இன்று காலை மீண்டும் குறைந்ததால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் சில மணி நேரங்களிலேயே விலை…

Read More

ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டண நடைமுறைகளில் இந்திய ரயில்வே பெரும் மாற்றங்களை  கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதன்படி, பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்ய விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு (3 நாட்களுக்கு) முன்பாகவே ரத்து செய்தால் மட்டுமே, தற்போதைய நடைமுறைப்படி முழுத் தொகையையும்  திரும்பப் பெற முடியும். கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதைத் தவிர்க்கவும், தேவையற்ற முன்பதிவுகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் சேர்த்து பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். மேலும், 8 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் செலுத்திய தொகையில் 50%…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, விசிக தனது விருப்பப் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த தேர்தல்களில் இத்தொகுதியில் விசிக கணிசமான வாக்கு வங்கியை வைத்திருப்பதாலும், தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாலும் இம்முறை இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் வசம் உள்ளது. அவர் இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அத்தொகுதியை விசிக-வுக்கு விட்டுக் கொடுப்பதில் காங்கிரஸூக்குச் சிக்கல் ஏற்படும். ஆனால், செல்வப்பெருந்தகை தற்போது மாநிலத் தலைவராக இருப்பதால், அவர் தமிழ்நாடு முழுவதும் கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால், தனது சொந்தத்…

Read More

மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் எரிவாயுவை ஏற்றி வரும் ‘பைன் கேஸ்’ (Pyxis Gas) மற்றும் ‘ஜக் வசந்த்’ (Jag Vasant) ஆகிய இரண்டு பிரம்மாண்டக் கப்பல்கள், மிகவும் அபாயகரமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளன. சுமார் 92,000 டன் எல்.பி.ஜி-ஐ சுமந்து வரும் இந்தக் கப்பல்கள், அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது உள்நாட்டில் நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கப் பெரிதும் உதவும். ஏற்கனவே ‘ஷிவாலிக்’ (Shivalik), ‘நந்தா தேவி’ (Nanda Devi) மற்றும் ‘ஜக் லட்கி’ (Jag Ladki) ஆகிய கப்பல்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ள நிலையில், தற்போது வரும் புதிய வரத்துகளால் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் காரணமாக…

Read More

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் நீண்ட நாட்களாக இழுபறி நீடித்ததால், கூட்டணி முடிவாகும் முன்பே இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில் போட்டிப்போட்டுக் கொண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போது ஒரு வழியாகத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, எந்தெந்த இடங்கள் யாருக்கு என்பது முடிவாகியுள்ளது. இதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத மற்ற வேட்பாளர்களை உடனடியாகத் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெறுமாறு இரு கட்சிகளின் தலைமையும அறிவுறுத்தியுள்ளன. இருப்பினும், தலைமை இட்ட கட்டளையை ஏற்க மறுக்கும் பல வேட்பாளர்கள், தங்கள் செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு ரகசிய இடங்களுக்குத் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாளுக்குள் (வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்) மனுவைத் திரும்பப் பெறாவிட்டால், அது கூட்டணிக் கட்சிகளுக்குள் ‘நட்பு ரீதியான போட்டி’ என்ற…

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தமாக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையொப்பமாகும் எனத் தெரிகின்றது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் ஏப்ரல் 1ம் தேதிவரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் 27ம் தேதி வரை சென்னை(மயிலாப்பூர்), காஞ்சிபுரம் (ஆலந்தூர்),…

Read More

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம் குறித்து ஆலோசிக்க, மத்திய அரசு நாளை (மார்ச் 25 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள மோதலால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் விளக்கமளிக்க உள்ளதாகத்…

Read More

திமுக கூட்டணியில், வி.சி.க-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், வி.சி.க. தமிழ்நாட்டில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள். வி.சி.க-வின் உயர்நிலைக் கூட்டத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறவும், ராஜ்யசபா இடத்தைப் பெறவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அது குறித்து முதல்வரிடம் பேசினோம். 23 கட்சிகள் இருக்கும் கருத்தியல் சார்ந்து இயங்குகிற கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகத் துடிப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி. இந்திய அளவில் மதவெறி, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் கூட்டணி என கூறினார். வி.சி.க. நலன் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல அவை அங்கம் வகிக்கும் கூட்டணியும் முக்கியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். இடதுசாரி ஜனநாயக அரசியல் தமிழகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். தற்காலிகமாக இந்தத் தேர்தலில் எங்களுக்கு…

Read More

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு அதிகரித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில் திமுக-வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,   தி.மு.க. புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா சிவா இன்று அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, இரா.சிவா தனது சொந்தத் தொகுதியான வில்லியனூரில் மீண்டும் களம் இறங்குகிறார். அதேபோல், காரைக்கால் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் போட்டியிடுகிறார். மங்கலம் – எஸ்,எஸ், ரங்கன் திருபுவனை – பி. அங்காளன், பாகூர் – ஆர். செந்தில்குமார் முதலியார்பேட்டை – சம்பத் உப்பளம் –  அனிபால் கென்னடி, உருளையன்பேட்டை – எஸ். கோபால் நெல்லித்தோப்பு – வி. கார்த்திகேயன் ராஜ் பவன் – விக்னேஷ் கண்ணன் காலாப்பட்டு – ஏ. செந்தில் ரமேஷ், கதிர்காமம் – வடிவேலு…

Read More