Author: Editor web3
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றுக்கு தயாரானது போல் மத்திய கிழக்கில் நிலவும் போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஏற்கனவே தங்களுக்குக் கடிதம் எழுதினேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவலநிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் தந்தை – மகன் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், கொடூரமாக அடித்து துன்புறுத்தியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று…
பிப்ரவரி 2026-க்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) மற்றும் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி (Arundhati Reddy) ஆகியோர் ‘ மாதத்தின் சிறந்த வீரர்’ (Player of the Month) விருதை வென்றுள்ளனர். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான், பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையில் (இலங்கையில் நடைபெற்றது) நிகழ்த்திய அசாத்தியமான சாதனைக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். 2014 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி ஒரு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்களான 319 என்ற சாதனையை, ஃபர்ஹான் இந்த ஒரே தொடரில் 383 ரன்கள் குவித்து முறியடித்துள்ளார். ஒரே டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2 சதங்கள் (நமீபியா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக) விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார். 7 போட்டிகளில் 76.60 என்ற சராசரியுடனும், 160.25 என்ற ஸ்டிரைக்…
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவின் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் அதிமுக தலைமையகத்தில் என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி , பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஸ்டாலினின் வாடிக்கையாக இருக்கிறது. கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்கிறோம். நாங்கள் டெல்லி செல்வதை விமர்சிக்கிறார்கள். அப்படி என்றால் கனிமொழி எதற்கு டெல்லி சென்றார்? அதிமுக அலுவலகத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக…
தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் இன்று அடியெடுத்து வைத்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்கள் அங்கு குவிந்தனர். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று அமமுக என்ற தனி இயக்கத்தைத் தொடங்கிய டி.டி.வி.தினகரனும், பாஜகவில் இணைந்து அக்கட்சியின் முக்கியத் தலைவராக உருவெடுத்த நயினார் நாகேந்திரனும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கட்சியின் தலைவர்களாகத் தங்களது தாய் கழக அலுவலகத்திற்குள் நுழைந்தது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் கடைசியாகக் கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜெயலலிதா மறைவுக்குப் பிந்தைய அரசியல் குழப்பங்களின் போது இந்த அலுவலகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் அமமுக அங்கம் வகிப்பதால், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இவர்கள்…
திமுக அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் தேர்தல் பிரசாரங்களில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அறிவாலய காம்பவுன்ட்டை தாண்டி வந்த அந்த தகவலின் படி, கடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்தும் விதமாக திமுக எம்.பி. ராஜா பேசியதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜாவை, “பிரச்சாரத்துக்கே செல்ல வேண்டாம்” என்று மு.க.ஸ்டாலின் கூறும் அளவுக்கு சர்ச்சையானது. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியது தேசிய அளவிலான சர்ச்சையாக வெடித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. மறுபுறம் அமைச்சராக இருந்த பொன்முடி மகளிர் விடியல் பேருந்து திட்டத்தில் பெண்களிடம் ‘ஓசி பஸ்’ என்றும், மற்றொரு நிகழ்வில் இந்து மதத்தின் சைவ, வைணவ சமயங்கள் பற்றி ஆபாசமாக பேசியும் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் உண்டு பண்ணினார். இதனால்…
மக்களவையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். அப்போது, அனைத்து தரப்பும் இந்த இக்கட்டான சூழலில் அமைதியை கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு மேலாக தொடரும் இந்த போரல் இதனால் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வகைகளில் இந்த சூழல் நம் நாட்டை பாதிக்கிறது. ஒரு கோடி இந்தியர்கள் மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கின்றனர். ஹார்முஸ் நீரிணையை மூடியது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனாலும் இந்த நீர்ப்பாதை வழியாக இந்திய கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் இது மிகவும் கடினமான காலம். இந்தியாவுக்கு தேவையான எரிவாயு…
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து, சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறியிருந்த தங்கம் விலை, இன்று எதிர்பாராத விதமாக ‘ராக்கெட்’ வேகத்தில் சரிவைக் கண்டுள்ளது. நகைப்பிரியர்களுக்குப் பெரும் இனிப்பான செய்தியாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை மிரளவைக்கும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து இன்ப அதிர்ச்சியளித்தது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் நிலைமை தலைகீழாக மாறி, மேலும் ரூ.2,240 சரிந்தது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.7,600 வரை குறைந்து, சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி சரிவைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,670 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,01,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஒரு லட்சத்து பத்து…
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான பேச்சுவார்த்தையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த…
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழல், இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக்சபாவில் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்தியாவையும் எட்டியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார். பிரதமர் மோடி தனது உரையில், மேற்காசியாவில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர்ச் சூழல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கடந்த 2 முதல் 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார். “இந்த…