Author: Editor web3

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான பேச்சுவார்த்தையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த…

Read More

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழல், இந்தியாவின் எரிசக்தித் தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக்சபாவில் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்தியாவையும் எட்டியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார். பிரதமர் மோடி தனது உரையில், மேற்காசியாவில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல், உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர்ச் சூழல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கடந்த 2 முதல் 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார். “இந்த…

Read More

புதுச்சேரி அரசியலில் மற்றொரு அதிரடி திருப்பமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 3 தொகுதிகளில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்பது கற்பனையானது. ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை அறிவிப்பு வெளியாகும் என்றார், ஏற்கனவே புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இன்று வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், இரு கட்சிகளுமே ஒரு முடிவுக்கு வராமல் 30 தொகுதிகளிலும்…

Read More

நெல்லையில் பட்டியலின விவசாயி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, விளிம்பு நில மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, இதை பற்றி ஏன் திமுகவிடம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழக மக்களுக்கு வணக்கம். கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், பொம்மை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை! எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன். திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை…

Read More

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான G. நேரு (எ) குப்புசாமி தலைமையிலான “நேயம் மக்கள் கழகம்”, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கரம் கோர்த்துள்ளது. இந்தத் திடீர் கூட்டணி அறிவிப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தவெக-வுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த நேயம் மக்கள் கழகத்திற்கு, தவெக ஏற்கனவே அறிவித்திருந்த 30 தொகுதிகளில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நேயம் மக்கள் கழகம் போட்டியிடும் என தவெக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய்யின் முழு ஒப்புதலோடு இந்தத் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுதான் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. தற்போது…

Read More

கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ‘உதயசூரியன்’ சின்னத்தைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா? பொசுங்கிவிடுவார்கள்’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சூரியனால் தான் இந்த பூமியில் மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழ முடிகிறது. அந்த இயற்கை சக்தியை உணர்ந்துதான், பேரறிஞர் அண்ணா அவர்கள் திமுகவின் சின்னமாக உதயசூரியனை வைத்தார். அந்தச் சின்னத்திற்கு அத்தனை வலிமை இருக்கிறது” என திமுகவையும் அதன் சின்னத்தையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார்.

Read More

தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இன்று ஒரே நாளில் மூன்று முக்கியச் சிக்கல்கள் முளைத்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான விசிக, தேமுதிக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் திருப்தி அளிக்காததால், இன்று அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், திமுக தரப்பு 8 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள விசிக தலைமை, இன்று தனது கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் ஆஃபரை ஏற்பதா அல்லது அடுத்தகட்டமாகக் கூடுதல் இடங்களுக்காக அழுத்தம் கொடுப்பதா என்பது குறித்துத் திருமாவளவன் ஆலோசித்து வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். 2 தனித்…

Read More

அதிமுக – பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சமீபத்திய பேட்டி தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரமா என விமர்சகர்கள் கேட்கின்றனர். மேலும், “தமிழக மக்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராக உள்ளது. தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்று தெரிவித்தார். வழக்கமாக ‘அதிமுக ஆட்சி’ என்று குறிப்பிடாமல், ‘என்.டி.ஏ ஆட்சி’ (கூட்டணி ஆட்சி)…

Read More

புதுச்சேரி அரசியல் களத்தில் இன்று (மார்ச் 23) மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சங்கர், தனது முகநூல் பக்கத்தில் “புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டி” என்று பதிவிட்டுள்ளது கூட்டணி வட்டாரங்களில் இடியை இறக்கியுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால், இந்தத் திடீர் அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் தரப்பில் 16 முதல் 18 தொகுதிகள் வரை கோரப்பட்ட நிலையில், திமுக சமமாக 15 இடங்களை ஒதுக்க வலியுறுத்தி வந்தது. நேற்று வரை இரு கட்சிகளும் 15-15 என்ற விகிதத்தில் உடன்பாடு எட்டியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர் பட்டியலில்…

Read More

தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம், தனது வேட்பாளர் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 115 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அலுவலகம் மீண்டும் ஒருமுறை நேரில் அழைத்துள்ளது. இந்தத் திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேட்பாளர்களின் தகுதிகள் மற்றும் ஆவணங்களை இறுதிச் சரிபார்ப்பு (Re-check) செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்படும் மிகச்சிறிய பிழைகளை கூட காரணமாக வைத்து, ஆளும் தரப்போ அல்லது தேர்தல் ஆணையமோ மனுக்களை நிராகரித்துவிடக் கூடாது என்பதில் விஜய் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். இதற்காக, வேட்புமனுத் தாக்கலுக்குத் தேவையான சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி குறித்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் இதர சட்டப்பூர்வ ஆவணங்களைச் சரிபார்க்கத் தலைமை அலுவலகத்தில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத்…

Read More