Close Menu
    What's Hot

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 VC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுக்கும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 20 அரசு பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகம் துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதாக கூறி செங்கல்பட்டை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் பாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ஐந்து பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பதவிகள் இந்த ஆண்டின் இறுதியுடன் காலியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    முந்தைய ஆட்சி காலத்தில் அரசியல் சாசன அதிகார அமைப்பிற்கும், அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

    துணை வேந்தர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்திலும் இதே போன்ற ஒரு நிலை நிலவிய போது உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையில் குழு அமைத்ததை போல தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்புவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் பல்கலைகழக மானிய குழு பிரதிநிதியை சேர்த்து உயர் அதிகாரம் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, மனுவிற்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    High Court Higher Education university administration Vice Chancellor appointment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!
    Next Article இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    July 8, 2026

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    July 8, 2026

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!

    ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    தர்மபுரி : தவறான செய்திகளை பரப்பாதீர்கள்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வேண்டுகோள்..!

    சுகாதாரத் துறையில் டிஜிட்டல் புரட்சி.. நலம் AI APP-ஐ தொடங்கி வைத்த அமைச்சர் அருண்ராஜ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.