Close Menu
    What's Hot

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தியில் புதிய உச்சம் – ஒரே நாளில் 60.4 மில்லியன் யூனிட் பதிவு
    Featured

    தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தியில் புதிய உச்சம் – ஒரே நாளில் 60.4 மில்லியன் யூனிட் பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 solar power
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கோடை வெப்பம் மற்றும் வெயில் காரணமாக தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திங்கள்கிழமை  அன்று  ஒரே நாளில் 60.4 மில்லியன் யூனிட் (MU) சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சம் பதிவாகியுள்ளது.

    இதற்கு முன்பு, 2026 ஏப்ரல் 18 அன்று 58.6 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு மற்றும் மின் பகிர்மான கழகங்களின் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

    திங்கள்கிழமை மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 429.057 மில்லியன் யூனிட் ஆக இருந்தது. பகல் நேர உச்ச மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய மின் உற்பத்தி முக்கிய பங்காற்றியதுடன், அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருக்கும் தேவையும் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்கள் தமிழகத்தில் போதிய சூரிய ஒளி கிடைப்பதால், சூரிய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    மேலும், 2025 மார்ச் 31 நிலவரப்படி 10,153 மெகாவாட் இருந்த தமிழகத்தின் நிறுவப்பட்ட சூரிய மின் திறன், 2026 மே 31 நிலவரப்படி 13,909 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஓராண்டில் 3,756 மெகாவாட் கூடுதல் திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டில் மேலும் 5,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த இலக்கு எட்டப்படும் எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    renewable energy solar energy solar power generation Tamil Nadu solar power
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Next Article ஒரே ஆண்டில் இருமுறை உயர்த்தப்பட்ட பால் விலை..! நாடு முழுவதும் பால் உற்பத்தி பாதிப்பு…!
    Editor TN Talks

    Related Posts

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 8, 2026

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    July 8, 2026

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.