Author: Editor web3
கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று மாலை நேரத்தில் அதிரடியாகக் குறைந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், மாலை வர்த்தகத்தில் விலை தலைகீழாகச் சரிந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.2,560 என்ற மிகப்பெரிய அளவில் சரிந்து ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது போன்றவை தங்கம் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. உலகளாவிய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதால், அதன் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இதற்காக தவெக சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில் இருந்து இந்தப் பயணம் தொடங்க உள்ளது. அன்று ஒரே நாளில் கொடுங்கையூர், மூலக்கடை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மக்களைச் சந்தித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். விஜய்யுடன் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்தப் பரப்புரையில் பங்கேற்க உள்ளனர். சென்னையின் மற்ற நான்கு தொகுதிகளிலும் வாகனப் பேரணி மற்றும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பரப்புரைக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில்…
இந்தியாவின் வீரமிக்க ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரதீர விருது (Gallantry Medals) பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணச் சலுகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சலுகையானது, குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்; இது நாட்டின் சீருடை அணிந்த வீரர்களுக்கான ஒரு முக்கிய நலத்திட்ட முயற்சியாக அமைகிறது. இச்சலுகையைப் பெற யார் தகுதியுடையவர்கள்? மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின்படி, ஆயுதப் படைகளைச் சேர்ந்த, வீரதீர விருதுகளைப் பெற்றுள்ள அனைத்துப் பணியாளர்களும் இதில் அடங்குவர். துணைவர்கள்: மறைந்த விருது பெற்றவர்களின் மனைவி அல்லது கணவர் (Spouse), ஆகியோர் மறுமணம் செய்து கொள்ளும் வரை இந்த இலவச ரயில் பயணச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.” பெற்றோர்: “விருது பெற்ற வீரர் திருமணமாகாதவராக இருந்து, அவருக்கு…
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இன்று (வியாழக்கிழமை, மார்ச் 26) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களில், இந்தியா உள்ளிட்ட ‘நட்பு நாடுகளின்’ (Friendly Nations) கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், மோதலால் பாதிக்கப்பட்ட இந்த முக்கிய கடல்வழிப் பாதை வழியாகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ஈரானியத் துணைத் தூதரகம் தனது பதிவில், அதில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறியுள்ளதாவது, சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்ல நாங்கள்…
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதற்கு காரணமான ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து The Jerusalem Post இதழுக்குத் தகவல் அளித்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், தாங்சிரி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடுவதற்கு முழுப் பொறுப்பாக இருந்தவர் அலிரேசா டாங்சிரி என The Times of Israel ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்வது குறிப்பிடத்தக்கது. ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரம், பாரசீக வளைகுடாவையும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழிகளையும் இணைக்கும் மிக முக்கியமான ஹார்முஸ் நீர்சந்தியின் ஓரத்தில் அமைந்துள்ளது. ராணுவ ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இந்த இடம் உலகின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “மதிமுக சார்பில் நாங்கள் விருப்பப்பட்டியல் கொடுத்திருந்தோம். அதில் உள்ள நான்கு தொகுதிகளைத் தற்போது எங்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். நாங்கள் கேட்ட அதே தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது எங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது” என்று தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் தங்களுக்கு இருந்தும், கூட்டணி தர்மத்திற்காக 4 இடங்களை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; ஆனால் நாங்கள் இப்போது சிரித்துக் கொண்டே அழுகின்ற நிலையில் இருக்கிறோம்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஒதுக்கப்பட்டுள்ள அந்த நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஏற்கனவே 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக தரப்பில் அளிக்கப்பட்ட 25 விருப்பத் தொகுதிகளின் பட்டியலில் இருந்து, 7 தொகுதிகளுக்கு திமுக தலைமை பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. ஆனால், மீதமுள்ள 3 தொகுதிகளை இறுதி செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதியான விருத்தாசலத்தை தேமுதிக ஒற்றைக்காலில் நின்று கேட்கிறது. ஆனால், அதே தொகுதியைத் தனது விருப்பப்பட்டியலில் வைத்துள்ள காங்கிரஸும் விடாப்பிடியாக இருப்பதால், திமுக தலைமை தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. விருத்தாசலம் தொகுதியில் நிலவும் மற்றொரு சிக்கல் என்னவென்றால், அங்கு பாமக சார்பில் பலமான வேட்பாளர் களம் இறக்கப்பட உள்ளதால், அத்தொகுதியில் திமுகவே நேரடியாகக் களம் இறங்கினால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அறிவாலயத் தரப்பு கருதுகிறது. இதேபோல், ரிஷிவந்தியம் தொகுதியிலும் சிக்கல் நீடிக்கிறது. அங்குத்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தான் போட்டியிடவுள்ள 27 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மத்திய அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தனது சொந்த மண்ணில் மீண்டும் களம் காண்பது அந்தத் தொகுதி பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1. தளி – அமர்பிரசாத் ரெட்டி 2. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார் (பாஜக NGO பிரிவு மாநில செயலாளர்) 3. அவிநாசி – எல். முருகன் 4. திருப்பூர் தெற்கு – ஏ.பி. முருகானந்தம் 5. சாத்தூர் – நயினார் நாகேந்திரன் 6. திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் 7. நாகர்கோவில் – பொன் ராதாகிருஷ்ணன் 8. பத்மநாதபுரம் – எட்வின் ஜோஸ் (கன்னியாகுமரி…
விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் விழுப்புரம் தெற்கு நகரக் கழகச் செயலாளர் ஆர்.பசுபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பசுபதி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். “சி.வி.சண்முகம் தனது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வழங்குகிறார்; மற்ற சமூகத்தினரைப் புறக்கணிக்கிறார்” என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த ஜாதி ரீதியான புகார் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே பசுபதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தல் நெருங்கும் வேளையில் விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், அதிமுக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் 2026 சீசனில் அணியின் தொடக்க வீரர்களாக யார் களம் இறங்குவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சீசனில் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு இடமளிப்பதற்காக, ருதுராஜ் தனது வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து இறங்கி, மூன்றாவது வரிசையில் விளையாடினார். ஆனால், இந்த முறை அவர் மீண்டும் தனது பழைய இடத்திற்கே திரும்புகிறார். இந்த ஆண்டு, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்குப் பதிலாக சிஎஸ்கே-வுக்கு மாற்றப்பட்ட புதிய வீரரான சஞ்சு சாம்சனுடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவதை கெய்க்வாட் உறுதி செய்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில், ஆயுஷ் மத்ரே மூன்றாவது இடத்தில் களமிறக்கப்படலாம், கடந்த முறை சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வரிசையில் களம் இறக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல், அதிரடி வீரர் உர்வில் படேலும் மிடில் ஆர்டரில் இறக்கப்படலாம். முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின்,…