Author: Editor web3
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், பாஜக மாநிலத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ-வுமான நயினார் நாகேந்திரன், தான் இந்த முறை விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கடந்த 2021 தேர்தலில் திருநெல்வேலியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், இந்த முறை தொகுதியை மாற்றியதற்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகளும், சென்டிமென்ட் காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதியில் கடந்த பல தேர்தல்களாக ஒரே கட்சி அல்லது வேட்பாளர் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை என்ற ‘சுழற்சி முறை’ சென்டிமென்ட் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாமல், அதிமுகவே…
ஐபிஎல் தொடரில் 10 அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டு, 2026 சீசன் நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்திய டி20 அணியில் நிரந்தர இடம்பிடிக்கப் போராடும் வீரர்கள் பலர், ஐபிஎல் அணிகளில் கேப்டன்களாக இருப்பதுதான் இந்த விவாதத்திற்கு முக்கிய காரணம். குறிப்பாக, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபி-யின் ரஜத் படிதார், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற முன்னணி வீரர்கள் சமீபத்திய இந்திய டி20 உலகக்கோப்பை (2026) மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து இடம்பெறாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. பிசிசிஐ-யைப் பொறுத்தவரை, ஐபிஎல் கேப்டன்சி என்பது ஒரு வீரரின் தலைமைப் பண்பு மற்றும் உள்ளூர் அனுபவத்தைக் குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய டி20 அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும்போது தற்போதைய ஃபார்ம், ஸ்டிரைக் ரேட் மற்றும் அணியின் காம்பினேஷன் ஆகியவற்றைத் தேர்வுக்குழு முன்னிறுத்துகிறது. உதாரணத்திற்கு, சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், கும்பகோணம் தொகுதியில் அசோக்குமார் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தனித்துவமான ‘சைக்கிள்’ சின்னத்திற்குப் பதிலாக, பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சின்னம் தொடர்பான சட்ட சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணியில் தமாகா வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வான்கடே மைதானத்தின் பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளார். இந்திய அணி அண்மையில் T20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடருக்காக மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் தொடரின் போது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், உலகக்கோப்பைக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இரவு பகல் பாராமல் உழைத்த வான்கடே மைதான பராமரிப்பு ஊழியர்களின் ஒத்துழைப்பை அவர் மறக்கவில்லை. தனது பயிற்சிக் காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொரு ஊழியரின் அர்ப்பணிப்பையும் பாராட்டும் விதமாக, ஹர்திக் பாண்ட்யா அனைவருக்கும் தலா ரூ.10 லட்சம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஒரு சிலருக்கு மட்டும் வழங்காமல், மைதானத்தைப் பராமரிக்கும் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் கௌரவித்த அவரது இந்த மனிதநேயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது…
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 19வது சீசனின் இரண்டாம் கட்டத்திற்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. தற்போது, மீதமுள்ள லீக் போட்டிகளுக்கான தேதிகள் மற்றும் இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் எப்போது, எங்கு களமிறங்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 28 அன்று தொடங்கும். மே 24 வரை நடைபெறவுள்ள மொத்தம் 70 லீக் போட்டிகளுக்கான அட்டவணையை வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும், பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநில தேர்தல் காரணமாக இந்த முறை, ஐபிஎல் அட்டவணை ஒரே நேரத்தில் வெளியிடப்படாமல், இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது. முதல் கட்டத்தில் 20 போட்டிகள் கொண்ட அட்டவணை இடம்பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள 50…
சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை நேற்று முன் தினம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ. 1,08,800-க்கும் விற்பனையானது நேற்று காலையும் உயர்ந்த தங்கம் விலை, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில், ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ.13,350க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று, தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்…
சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13-லிருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பத்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் மீதான கலால் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையை ஓரளவிற்கு ஈடுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த வரிக்குறைப்பு பொதுமக்களுக்கு உடனடி விலைக் குறைப்பைத் தராது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக வரி குறைந்தால் விற்பனை விலை குறைய வேண்டும், ஆனால் தற்போதைய சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தைச் சரிகட்டவே அரசின் இந்த வரிச்…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ள நிலையில், அதன் தாக்கங்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து பிரதமர் மோடி நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் சர்வதேச எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகளைத் தவிர்க்க இந்தக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கவும், கள்ளச்சந்தை மற்றும் பதுக்கல்களைத் தவிர்க்கவும் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இருப்பினும், தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) காரணமாக இந்தக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க மாட்டார்கள் என்றும், அந்த மாநிலங்களின் சார்பில் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “டீம் இந்தியா”…
2026 தேர்தலுக்கான வாக்குறுதிகளை ராமதாஸ் வெளிட்டுள்ளார். அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் விவசாயத்திற்காக பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்தது. இதனால் ராமதாஸ் தரப்பு, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது தனித்து களம் காணுமா என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சசிகலாவால் புதிதாக தொடங்கப்பட்ட அஇபுதமமுக-உடன் ராமதாஸ் கூட்டணி அமைத்தார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அந்த அறிக்கையில் மருத்துவம், வேளாண்மை, நீதித்துறை, காவல்துறை, நீர்வளம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 75 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர்…
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 26) கடைசி நாளாக இருந்தது. மாலை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் திமுக இடையே நிலவி வந்த தொகுதிப் பூசல் முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனது மனுவைத் திரும்பப் பெறவில்லை. உழவர்கரை மட்டுமன்றி, தட்டாஞ்சாவடி, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு மற்றும் ராஜ் பவன் ஆகிய தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறாததால், மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விசிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த பிடிவாதம் கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச்…