Author: Editor web3

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு ஒதுக்கீடு வேட்பாளர் அறிவிப்பு,  பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தவெக கட்சி தரப்பில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் உள்ள எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நாளை (மார்ச் 28) பிரச்சாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் விஜயின் பெரம்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் அலுவலர்  அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக தேர்வு செய்த இடம் நெருக்கடியான இடம் என்பதால் பிரசாரம் நடத்த  அனுமதி மறுத்துள்ளது என்று கூறியுள்ள காவல்துறை அதிகாரிகள் பிரச்சாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர் இதனை தொடர்ந்து கட்சியினருடன் ஆலோசனை செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் சென்று முறையிட உள்ளதாக தவெகவின் பெரம்பூர் செயலாளர் சிவா தெரிவித்துள்ளார்.

Read More

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வதந்திகள் பரவி வருகின்றன. நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எரிவாயுவின் விலை, விநியோகம் மற்றும் பற்றாக்குறை குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 27), இன்று எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. நாட்டில் எண்ணெய் பற்றாக்குறை இல்லை என்றும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான விநியோகம் தயாராக உள்ளது என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. இந்திய அரசின் பெட்ரோலியம், வெளியுறவு மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நாட்டில் 70 சதவீத வணிக எல்பிஜி விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 30,000 டன் எரிவாயு வணிக நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன. கூடுதலாக, 30,000 ஐந்து கிலோகிராம் சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. “எங்களிடம் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளன; எல்பிஜி மற்றும் பிஎன்ஜி-யும் கிடைக்கின்றன;…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்பாளர் தேர்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, புதிய முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்து அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்கியுள்ளார். இதுவரை வெளியான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில், மாநிலம் முழுவதும் 17 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல், நிலக்கோட்டையில் தேன்மொழி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்திர பிரபா மற்றும் லால்குடியில் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ததன் மூலம், பெண் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது. அதிமுக பெண் வேட்பாளர்கள்: மதுராந்தகம் தனி – மரகதம் குமரவேல் குடியாத்தம் தனி – பரிதா புருஷோத்தமன் பாப்பிரெட்டிபட்டி – மரகதம் வெற்றிவேல் வந்தவாசி – பி ராணி ஆரணி – ஜெயசுதா விழுப்புரம் – விஜயா ஏற்காடு…

Read More

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த நிதானத்தையும், அரசியல் வியூகத்தையும் கடைப்பிடித்து வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக மொத்தம் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத் தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நிலவும் மௌனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமாரின் கோட்டையான ராயபுரம் தொகுதியைத் தவிர, மற்ற 12 தொகுதிகளுக்கும் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர் போன்ற முக்கியத் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு இன்னும் நிலுவையில் இருப்பது தொண்டர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சென்னையில் யாரை வேட்பாளர்களாகக் களமிறக்குகின்றன என்பதைப்…

Read More

தேர்தல் திருவிழாவிற்கு தமிழகம் தயாராகி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகளும் தொகுதிப் பங்கீடுகளும் இறுதியாக உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தனித் தொகுதிகள் முதல் தென் மாவட்டங்களான கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வரை காங்கிரஸின் கோட்டை எனக் கருதப்படும் இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், சென்னை பெருநகரில் வேளச்சேரி தொகுதியுடன் கூடுதலாக எழும்பூர், தி.நகர் ஆகிய தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, உதகமண்டலம், ஈரோடு கிழக்கு மற்றும் காரைக்குடி போன்ற முக்கிய நகரப் பகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்கக் களம் இறங்குகிறது. உறுதியான தொகுதிகள்: பொன்னேரி (தனி)…

Read More

அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் பாலியல் சம்பவம் நடந்துள்ளது பற்றி ஒரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ‘தனது பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக’ புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 26ஆம் தேதியான நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், “பேராசிரியர் ஞானவேல் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகவும்” குறிப்பிட்டுள்ள மாணவி, “இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று அவர் மிரட்டுவதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், “தனக்கு மட்டுமின்றி தனது தோழிகளுக்கும் இதேபோன்ற குறுஞ்செய்திகளை அந்த பேராசிரியர் அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்ததாகவும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக…

Read More

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், கட்சியை விட்டு வெளியேறிய முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களைக் குறிவைத்துத் தகுந்த வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோட்டையாகக் கருதப்படும் போடிநாயக்கனூர் தொகுதியில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி போட்டியிடுகிறார். அதேபோல், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் வெற்றி பெற்ற ஒரத்தநாடு தொகுதியில் எம். சேகர் என்பவரும், மனோஜ் பாண்டியனின் சொந்த ஊரான ஆலங்குளம் தொகுதியில் பிரபாகரன் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விஜய்யின் தவெகவில் இணைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டைனின் சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையம் தொகுதியில், இந்த முறை அவருக்குப் பதிலாக  அதிமுக சார்பில் வி.பி. பிரபு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், அண்மையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதியிலும், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் சோழவந்தான் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐஜேகே-வுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சியினர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். அதன்படி, சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசன் என்பவரும், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் என்பவரும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது முடிவை பாரிவேந்தர் உறுதிப்படுத்தியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பாரிவேந்தருக்கு செல்வாக்கு உள்ள மாவட்டமாகும். இங்கு எம்பியாக இருந்த போது அந்த மாவட்டத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு தனது எஸ்ஆர்எம் கல்லூரியில் கல்வியை கொடுத்துள்ளார். எனவே அங்கு அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி சார்பில் குன்னம் தொகுதியில் யார்…

Read More

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தொகுதிகளைப் பிரிப்பதில் அதிமுக தலைமைக்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றார். தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகத்தை அதிமுக புறக்கணித்துவிட்டது. திடீரென பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டதால், நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பது மட்டுமே உண்மையான அரசியல் வெற்றி என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சி இம்முறை பலப்பரிட்சை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்குமிக்க…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அதிமுக தனது தேர்தல் களப்பணியை மிகத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் செல்வாக்குமிக்க நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியத் தொகுதிகளுக்குப் பலமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டிபட்டி தொகுதிக்கு மேற்கு ஒன்றியச் செயலாளர் லோகிராஜன், போடிநாயக்கனூர் தொகுதிக்குக் கழகக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் வி.டி. நாராயணசாமி, மற்றும் கம்பம் தொகுதிக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பெரியகுளம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார். இவர் அமமுக கழக அமைப்புச் செயலாளர் ஆவார். இந்த அறிவிப்புகள்…

Read More