Author: Editor web3

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வருகிறார். முன்னதாக மேடையில் பேசிய விஜய் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் இளைஞர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பி.ஹெச்.டி படிப்பு வரை ரூ.20 லட்சம் வரைம் பிணையம் இல்லாத கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். அதேபோல், டிகிரி படித்து 29 வயது நிரம்பிய வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும். TRATA வாயிலாக அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கும் ஒரு…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்தார். அதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதே நிகழ்வில் புதுச்சேரி மாநில வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார். அதன்படி, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் களம் இறங்குகிறார். தலைநகர் சென்னையில் ஒரு தொகுதியையும், மத்திய தமிழகத்தின் இதயப் பகுதியான திருச்சியில் ஒரு தொகுதியையும் அவர் தேர்ந்தெடுத்திருப்பது, மாநிலம் முழுவதும் தனது செல்வாக்கை நிலைநாட்டும் ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த், சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறார். வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா ஆயிரம் விளக்கு – ஜேசிடி பிரபாகர் மயிலாப்பூர் – வெங்கட்ராமன் சேப்பாக்கம் – செல்வம் சைதாப்பேட்டை – அருள் பிரகாசம் ஆர்.கே.நகர் – மரிய வில்சன்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஈரான் மீதான போர் நடவடிக்கை மற்றும் அதிகரித்து வரும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட போராட்டங்கள் வெடித்துள்ளன. டிரம்ப்பின் ‘சர்வாதிகாரப் போக்கு’ மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை விமர்சித்து ‘No Kings’ என்ற அமைப்பு இந்த நாடு தழுவிய போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது. குறிப்பாக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. மற்றும் மின்னசோட்டா உள்ளிட்ட 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 80 லட்சம் மக்கள் திரண்டு, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஈரான் மீதான போர் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் டிரம்ப்பின் கடுமையான அணுகுமுறை ஆகியவையே இந்தப் போராட்டத்தின் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. “அமெரிக்காவுக்கு அரசர்கள் தேவையில்லை, ஜனநாயகம் மட்டுமே வேண்டும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தி போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆஸ்கார் விருது பெற்ற நடிகர்…

Read More

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமு‌க மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடப் பேரியக்கங்களும் தங்கள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். இது கடந்த தேர்தல்களை விட இரு கட்சிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சிகளின் பலத்தையும் கணக்கில் கொண்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளையும் சேர்த்து, மொத்தம் 133 தொகுதிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நேரடி மோதல் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இரு கட்சிகளின் வாக்கு வங்கியைச் சரியாகக் கணிக்கும் களமாகவும் இது அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள…

Read More

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் இருந்தாலும், இடைப்பட்ட நாட்களில் மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31), வங்கிகள் ஆண்டு கணக்கு முடிப்பு (ஏப்ரல் 1), புனித வெள்ளி (ஏப்ரல் 3) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) என நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய உண்மையில் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே ஆதரவாளர்கள் தடுத்து…

Read More

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க முக்கிய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் பா. வளர்மதி, அண்ணா நகரில் எஸ். கோகுல இந்திரா போன்ற முன்னாள் அமைச்சர்களும், தியாகராய நகரில் பி. சத்தியநாராயணன், வேளச்சேரியில் எம்.கே. அசோக் மற்றும் சோழிங்கநல்லூரில் கே.பி. கந்தன் போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் ஆர்.எஸ். ராஜேஷும், வில்லிவாக்கத்தில் எஸ்.ஆர். விஜயகுமாரும் போட்டியிடுவது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையின் முக்கிய தொகுதிகளான துறைமுகத்தில் ராயபுரம் ஆர். மனோ, விருகம்பாக்கத்தில் வி.என். ரவி மற்றும் கொளத்தூர் தொகுதியில் பி. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். அத்துடன் தனித்தொகுதிகளான திட்டக்குடியில் என். முருகுமாறன், திரு.வி.க நகரில் ஏ. பொற்கொடி மற்றும் எழும்பூரில் அபிஷேக் ரங்கசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.…

Read More

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு வரலாற்றுச் சாதனையுடன் தனது சீசனைத் தொடங்கியுள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், 202 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய RCB அணிக்கு, விராட் கோலி நங்கூரம் போல் நின்று வெற்றியைத் தேடித்தந்தார். அவர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 69* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த அபாரமான இன்னிங்ஸின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது (Chasing) 4,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மகத்தான உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ‘சேஸ் மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் அவர், இந்தப் போட்டியின் மூலம் அந்தப் பட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை வலு சேர்த்துள்ளார். இந்த மைல்கல்லை…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும் என விஜய் குற்றம்சாட்டியுள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.  நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??…

Read More

நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட பாத்திரங்களைக் கழுவும் திரவங்கள் (Dishwash Liquids) குறித்து, மும்பையைச் சேர்ந்த பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், சுகாதாரக் கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா அதிரடியான விழிப்புணர்வுத் தகவலை வெளியிட்டுள்ளார். பாத்திரங்களைக் கழுவும் திரவம் (Dishwashing liquid) என்பது நாம் பெரிய அளவில் கேள்வி கேட்காத பொருட்களில் ஒன்று. அது சிங்க் அருகே அமர்ந்து, ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட்டு, தன் வேலையைச் செய்கிறது. தட்டுகள் சுத்தமாகின்றன, கைகள் சுத்தமாகின்றன, வேலை முடிகிறது. ஆனால், நாம் எதில் சாப்பிடுகிறோமோ, அந்தப் பொருட்களுடன் இது நேரடியாகத் தொடர்பில் இருக்கிறது என்பதுதான் உண்மை. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஒரு விஷயம் பெரும்பாலும் நம்மால் அலட்சியப்படுத்தப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மனன் வோரா, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்களைக் கழுவும் சோப்பு திரவங்களில் உள்ள நச்சுத் தன்மை குறித்த உண்மையை இன்ஸ்டாகிராமில் ஒரு…

Read More

திருமணமான ஒரு நபர், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் ‘லிவ்-இன்’ உறவில் இருப்பது குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரை சேர்ந்த அனாமிகா மற்றும் நேத்ரபால் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. சமூக ஒழுக்கம் மற்றும் தனிநபர் சட்டத்தை விட குடிமக்களின் உரிமைகளே மேலானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்ணின் தாயார் அளித்த கடத்தல் புகாரை ரத்து செய்த நீதிமன்றம், இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்கள் இணைந்து வாழ்வதை தடுக்க முடியாது என கூறியது. மேலும், கௌரவ கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்ள தடை விதித்ததுடன், தம்பதியினருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. “சமூகத்தின் கருத்துகளுக்காகவோ அல்லது அறநெறிக்காகவோ நீதிமன்றம் சட்டத்தின் கடமையிலிருந்து விலக முடியாது” என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

Read More