Author: Editor web3
இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் தங்களின் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60 சதவீத இருக்கைகளை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி (Free of Charge) பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று DGCA உத்தரவிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைப்படி, வரும் ஏப்ரல் 20, 2026 முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு விமானத்திலும் உள்ள இருக்கைகளில் பெரும்பான்மையானவை, முன்பதிவு செய்யும்போதே எவ்விதக் கட்டணமும் இன்றித் தேர்வு செய்யக்கூடிய வகையில் கிடைக்கப்பெற வேண்டும். தற்போது வரை பெரும்பாலான விமான நிறுவனங்கள் சுமார் 20 சதவீத இருக்கைகளை மட்டுமே இலவசமாக வழங்குகின்றன. மீதமுள்ள இருக்கைகளைத் தேர்வு செய்ய ரூ200 முதல் ரூ.2,100 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. விமான நிறுவனங்கள் தெளிவான மற்றும் வெளிப்படையான இருக்கை ஒதுக்கீட்டு முறையைப் பராமரிக்க வேண்டும் என்றும் ஒழுங்குமுறை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்த இடங்களில் நேரடியாக மோதுகின்றன என்ற விறுவிறுப்பான கள நிலவரம் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் எப்போதும் போல பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் மிகப்பெரிய நேரடிப் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், ஏறத்தாழ பாதிக்கும் மேலான 121 இடங்களில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மல்லுக்கட்டுகின்றனர். இது கடந்த தேர்தல்களை விட இரு கட்சிகளுக்கும் இடையேயான நேரடி பலப்பரீட்சையை உறுதி செய்துள்ளது. தலைமை கட்சிகளுக்கு இடையேயான போட்டி ஒருபுறம் இருக்க, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான மோதல்களும் இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 18 இடங்களில் திமுக மற்றும் பாஜக நேரடியாகப் போட்டியிடுகின்றன; இது ஆளுங்கட்சிக்கும் மத்திய ஆளும் கட்சிக்கும் இடையேயான சித்தாந்தப் போராகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், 18…
சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கடந்த 23 ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவல்துறையினர் தாக்கியதே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பிற்கு காரணம் என்பதை உறுதி செய்த நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் மார்ச் 30 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் தண்டனை விவரங்கள் குறித்து அறிவிப்பதற்காக இன்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன் விசாரணை தொடங்கியது. அப்போது குற்றவாளிகளின் உடல் மற்றும் மனநிலை அறிக்கை, நன்னடத்தை சான்றிதழ் ஆகியவை சமர்க்கப்பட்டது. அறிக்கைகளை வாசித்த நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்கள்…
தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் அறிக்கைகள் என்பவை வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்ல, அவை மக்களின் அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. முதலமைச்சராக பக்தவத்சலம் இருந்தபோது அரிசி பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய விளைச்சல் வீழ்ந்து, வறுமை எல்லோர் வீட்டு வாசலையும் தட்டி நின்றது. 1967-ல் அறிஞர் அண்ணா அறிவித்த “ரூபாய்க்கு மூன்று படி அரிசி” என்ற வாக்குறுதிதான் இந்த நலத்திட்ட அரசியலுக்கு வித்திட்டது. அதாவது “ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம். ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார். அந்த அறிவிப்புக் குக்கிராம மக்களின் செவிகளில்கூட எல்லாம் வெள்ளம் போய் பாய்ந்தது. மக்கள் மகிழ்ச்சி பெற்று வாக்களித்தனர். அண்ணாதுரை முதலமைச்சரானார். ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின் கோயம்புத்தூருக்குத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. காலப்போக்கில், பசிப்பிணியைப் போக்கும் உணவில் தொடங்கிய இந்த பயணம், தற்போது நவீன வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், 15 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி அன்புமணி அறிவித்தார். அதில் கீழ்வேளூர் – ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் – என்.சேகர் (மாநில துணைத் தலைவர் – முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி – அ.கணேஷ்…
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (மார்ச் 30) அதிரடியாகக் குறைந்து சற்று நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்ததன் எதிரொலியாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ,60 குறைந்து, ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. கடந்த 29ம் தேதி சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது இதேபோல், வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்றும் வெள்ளிவிலையில் மாற்றமில்லை. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை…
பேரவை தேர்தல்!. இன்று முதல் தொடக்கம்!. கொளத்தூரில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை முதல் தொடங்குகிறது. இந்தத் தேர்தல் திருவிழாவின் முதல் நாளிலேயே, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிடுவதற்கான மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் சமர்ப்பிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவர், தற்போது நான்காவது முறையாக அதே தொகுதியில் களம் காண்கிறார். தமிழகத்தில் திமுக தலைமையிலான…
சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பெரும்பாலான கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதற்கிடையில் கிரிஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தது. முன்னதாக புதிய தமிழகம் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் புதிய தமிழகம் கோரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை அதிமுக கொடுக்க முன் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி சார்பில் 43 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அதே போல திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வரும் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கருத்துகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உயிரைப் பணயம் வைத்து அரசியல் ஆதாயம் தேடவே காங்கிரஸ் விரும்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர்; இவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று கூறினார். இக்கட்டான இந்தச் சூழலில் பொறுப்புடன் செயல்படாமல், காங்கிரஸ் கட்சி வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை பணயம் வைப்பதாக அவர் சாடினார். இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தில் காங்கிரஸ் எப்படி அரசியல் செய்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்; காங்கிரஸ் வெளியிடும் அறிக்கைகள் ஆபத்தானவை,” என்று பிரதமர் கூறினார். “வளைகுடா நாடுகளில் வசிக்கும்…
மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் இப்போது இந்தியர்களின் படுக்கையறை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காண்டம்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், சந்தையில் சில முன்னணி பிராண்டுகள் தட்டுப்பாடாக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் காண்டம் தயாரிப்பிற்குத் தேவையான கச்சாப் பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. போர் காரணமாக இந்த விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை ரப்பர் பாலை (Latex) திரவ நிலையில் வைத்திருக்க அம்மோனியா அவசியம். இந்தியா தனது அம்மோனியா தேவையில் 86 சதவீதத்தை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதால், கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. காண்டம்களில் லூப்ரிகண்டாகப் பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலையும் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. கந்தகம் (Sulphur) மற்றும் துத்தநாக…