Author: Editor web3
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் டன் பெட்ரோலியத்தை வழங்கி நிவாரணம் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்தியா இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்தியா, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் உட்பட, மொத்தம் 38,000 மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருட்களை அவசரகால உதவியாக இலங்கைக்கு வழங்கியது. இந்த உதவிக்காக இலங்கை இந்தியாவிற்கு வெளிப்படையாகத் தனது நன்றியைத் தெரிவித்தது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணைக்குழுவின்படி, ஈரான் போர் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்திருந்தபோதும், இலங்கை கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தபோதும் இந்த விநியோகம் வந்துள்ளது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்து, உண்மையான உறவுகள் நெருக்கடியான…
2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி. ஆனால் இம்முறை அதிமுக கூட்டணியில் உடன்பாடு எட்டப்படாததால், தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்தார் கிருஷ்ணசாமி. இதுதொடர்பாக பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகத்தை அதிமுக புறக்கணித்துவிட்டது. திடீரென பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டதால், நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பது மட்டுமே உண்மையான அரசியல் வெற்றி என்று கூறியிருந்தார். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். ”தமிழகத்தில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் நாங்கள் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அந்தப் பெரிய கட்சி எங்களைச் சற்றும் மதிக்கவில்லை. தொடர்ந்து எங்களைப் புறக்கணிப்பதும், உதாசீனப்படுத்துவதுமே அவர்களின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சியின் தலைவர் விஜய் தனது நீண்டகால கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். மேடையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், சபரிநாதன் உணர்ச்சிவசப்பட்டு விஜய்யை கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். தன்னிடம் பணிபுரிந்தவரின் மகனை ஒரு வேட்பாளராக உயர்த்தி அழகு பார்த்த விஜய், சபரிநாதனை அரவணைத்து ஆறுதல் கூறியது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மறுபுறம், தவெகவின் வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தமுள்ள தொகுதிகளில் 23 பெண் வேட்பாளர்களுக்கு விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். வெறும் பேச்சுடன் நிற்காமல், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் சட்டமன்றத் தேர்தலில் இத்தனை இடங்களை ஒதுக்கியிருப்பது கட்சியின் முற்போக்கான அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண பின்னணி கொண்டவர்களுக்கு…
ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை பெட்ரோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், இதுகுறித்த ஒரு முன்மொழிவைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் போதுமான விநியோகத்தைப் பராமரிக்கவும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது. இந்த முடிவுவால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது, ரஷ்ய பெட்ரோலுக்குத் தடை விதித்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலை வாங்குவதில்லை. நம் நாட்டில் கச்சா எண்ணெயை வாங்கி, அதை பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றும் ஒரு பரந்த சுத்திகரிப்பு ஆலை வலையமைப்பு உள்ளது. இந்தியா தினமும் சுமார் 5.6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கிறது. எனவே, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெட்ரோலுக்கு விதிக்கப்படும் தடையால் இந்தியாவில் எந்த நேரடித் தாக்கமும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அறிவிக்கப்பட்ட 164 தொகுதிகளின் வேட்பாளர்களும் அண்ணா அறிவாலயத்தில் வரிசையாகச் சந்தித்து வருகின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் புதிதாகக் களம் காணும் 60-க்கும் மேற்பட்ட இளைய வேட்பாளர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். திமுகவின் கூட்டணி கட்சிகளான, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்தச் சந்திப்பு, கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கையோடு, வேட்பாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் வீடு…
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை மார்ச் 31 முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்ட பரப்புரையை திருவாரூரில் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்குகிறார். https://x.com/arivalayam/status/2038150147578970321? திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொகுதிகள், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதன்படி, மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை முதற்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை அவர் மேற்கொள்கிறார். முதல் நாளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் இருந்து பரப்புரையை தொடங்குகிறார். இதற்கான சுற்றுப்பயணத்தின் அட்டவணையை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி…
சென்னையின் பெரம்பூர் தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ-வான ஆர்.டி.சேகர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். 9 முறை திமுக வெற்றி பெற்ற இத்தொகுதியில் அவருக்குப் பலமான வாக்கு வங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித்தமிழன் களம் இறங்குகிறார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராஜசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய முகங்களை விஜய் எதிர்கொள்வதால், அங்கு கடும் போட்டி நிலவுகிறது. விஜய்யின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தவரை, இளைய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பெரம்பூர் போன்ற நகர்ப்புறத் தொகுதிகளில் மாற்றத்தை விரும்பும்…
தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முக்கியத் தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உருவெடுத்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் சென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கேயம் தொகுதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்தார். அதே பாணியைப் பின்பற்றும் விஜய், ஏதேனும் ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றின் மூலம் பேரவைக்குள் நுழைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி என்பது கடந்த காலங்களில் திமுக மற்றும் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக…
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) இடையே அதிகாரப்பூர்வமாக தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டணியின் கீழ், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்தொகுதியில் தவெக கூட்டணியின் சார்பில் மஜக-வின் பொதுச்செயலாளர் ஹாரூன் ரஷீத் வேட்பாளராகக் களம் இறங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக-வின் அங்கீகரிக்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தில் ஹாரூன் ரஷீத் போட்டியிடுகிறார். தொகுதியில் செல்வாக்கு மிக்க வேட்பாளராகக் கருதப்படும் அவர், தவெக மற்றும் மஜக ஆகிய இரு கட்சிகளின் தொண்டர்களின் ஆதரவுடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இந்த ‘மக்கள் கூட்டணி’ களம் காண்பதாக கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் மஜக வேட்பாளரின் அறிவிப்பு, அந்தப் பகுதியின் தேர்தல் களத்தில் பெரும்…
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தவெக வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வருகிறார். அதன் படி பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய், ”நம் மக்களுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இல்லை என கூறுவார்கள். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். பெரிய பின்புலம் கிடையாது. ஒரு எம்.எல்.ஏ எப்படி இருக்க வேண்டும் என நான் கூறுகிறேன். எம்.எல்.ஏ என்பவர் அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளையடிப்பவராக இருக்க கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக கல்குவாரியில் ஈடுபடுபவர்களாக இருக்க கூடாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் திமுகவில் இருந்து வந்த ஒரு எம்.எல்.ஏ மேல் கொள்ளை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு, திருட்டு வழக்குகள்…