Close Menu
    What's Hot

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெ. பாணியில் 2 தொகுதியில் களமிறங்கும் விஜய்!. திமுக கோட்டையை தகர்த்து பேரவைக்குள் நுழைவாரா?.
    தமிழ்நாடு

    ஜெ. பாணியில் 2 தொகுதியில் களமிறங்கும் விஜய்!. திமுக கோட்டையை தகர்த்து பேரவைக்குள் நுழைவாரா?.

    Editor web3By Editor web3March 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay salem
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முக்கியத் தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின்   தலைவர் விஜய் உருவெடுத்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் சென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

    பின்னர் காங்கேயம் தொகுதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்தார். அதே பாணியைப் பின்பற்றும் விஜய், ஏதேனும் ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றின் மூலம் பேரவைக்குள் நுழைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி என்பது கடந்த காலங்களில் திமுக மற்றும் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 9 முறையும், சிபிஎம் 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர், அதிமுகவின் என்.ஆர்.தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

    2026-லும் இதே தொகுதியில் ஆர்.டி.சேகர் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்குவதால், அங்கு விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே ஒரு பலப்பரீட்சையே நடக்கவுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும் களம் காண்பதால், பெரம்பூரில் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுகிறது.

    மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு, 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவானது. குறுகிய கால வரலாற்றைக் கொண்ட இத்தொகுதி இதுவரை மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுகவின் ஆர்.மனோகரன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் முறையே வெற்றி பெற்றனர்.

    ஆனால் 2021 தேர்தலில் திமுகவின் இனிகோ இருதயராஜ், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொகுதியை திமுக பக்கம் திருப்பினார். இத்தொகுதியில் 4-வது சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ‘விசில்’ சின்னத்தில் களம் காணும் விஜய், திமுகவின் பலமான வாக்கு வங்கியைத் தகர்த்து வெற்றி பெறுவாரா என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக – மஜக கூட்டணி!. மயிலாடுதுறை தொகுதியில் ஹாரூன் ரஷீத் போட்டி!.
    Next Article பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு!. விஜய்யை எதிர்க்கும் மற்ற வேட்பாளர்கள் யார்?.
    Editor web3
    • Website

    Related Posts

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    June 22, 2026

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    June 22, 2026

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    பிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை

    MLA பல்லவிக்கு சபாநாயகர் சவுக்கடி!. மேயர் பிரியா மீதான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைந்தது!. திமுக ஐடி விங்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.