Author: Editor web3
சூப்பர்ஃபுட்கள் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த மற்றும் அரிதான உணவு வகைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், எளிமையான அத்திப்பழமும் நமது ஆரோக்கியத்திற்கு அதே அளவு நன்மை பயக்கக்கூடியது. அத்திப்பழங்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், மக்கள் அதன் ஊட்டச்சத்து மதிப்பை பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மூத்த இரைப்பை மற்றும் கல்லீரல் நிபுணரான டாக்டர் வத்ஸ்யாவின் கூற்றுப்படி, அத்திப்பழங்கள் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அவற்றில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் உள்ளன, இது மற்ற பழங்களிலிருந்து அவற்றை வேறுபடுத்துகிறது. இதனால்தான் அவை மலச்சிக்கலைப் போக்கவும், மலத்தை மென்மையாக்கவும், செரிமான செயல்முறையை எளிதாக்கவும் உதவுகின்றன. ஆனால் அத்திப்பழங்களின் நன்மைகள் செரிமானத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை உடலுக்கு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. உதாரணமாக, அவற்றில் நல்ல அளவு கால்சியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்பு அடர்த்தி குறைபாடு உள்ளவர்களுக்கு, அத்திப்பழங்கள் ஒரு இயற்கையான மாற்றாக இருக்க…
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் டிடிவி தினகரன் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலாவை பொதுச் செயலாளராகவும், டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பின் ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த எடப்பாடி பழனிச்சாமி வீடு டிடிவி தினகரன் அந்த பதிவியிலிருந்து தூக்கினார். மேலும் டிடிவி தினகரனும், சசிகலாவும் மீண்டும் ஆதிமுகவுக்குள் வராமலும் அவர் பார்த்துக் கொண்டார்.. எனவே, பழனிச்சாமியை துரோகி எனவும், அவரை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் டிடிவி தினகரன் பேசிவந்தார். அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது. அந்த கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவும் இணையவே டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக சேர்ந்தனர். ‘ எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டை.. நாங்கள் இன்று திட்டிக்குவோம்.. நாளைக்கு சேர்ந்துக்குவோம்’ என்று…
நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில், தற்போது மிக முக்கியமான அறிவியல் பூர்வமான ஆதாரம் கிடைத்துள்ளது. ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கங்களில், தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்றும், அவர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனத்தையும் இதில் இணைத்திருந்தார். இதனை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்களை மத்தியஸ்தராக நியமித்தது. இந்த விசாரணையின் போது, குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்தார். இதற்கு ரங்கராஜ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது.…
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பா முழுவதும் சாக்லேட்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கிட்காட் (KitKat) சாக்லேட் பார்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள சாக்லேட்கள் இதில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சாதாரணமாகப் பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்களைக் குறிவைக்கும் கொள்ளையர்கள், இவ்வளவு பெரிய அளவில் சாக்லேட்களைத் திருடியிருப்பது அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த லாரியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கிட்கேட் பார்கள் மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டன. அது போலந்துக்குச் சென்று கொண்டிருந்தபோது மார்ச் 26 அன்று திருடப்பட்டது. அந்த வாகனமும், அதனுடன் இருந்த முழு சரக்கும் இன்னும் காணவில்லை. இந்த சாக்லேட்டுகள், ஃபார்முலா ஒன் பந்தயத்தால் ஈர்க்கப்பட்டு, பந்தயக் கார்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட, அதே சமயம் பாரம்பரிய வேஃபர் பாணியைத் தக்கவைத்துக் கொண்ட, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வகை சாக்லேட்டுகளின் பகுதியாகும். கிட்காட்…
கடந்த 2020ம் ஆண்டில் தந்தை – மகன் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், கொடூரமாக அடித்து துன்புறுத்தியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தனது தீர்ப்பில் மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழக்கவில்லை. காவல்துறையினர் அவர்கள் மீது நடத்திய கடுமையான…
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவின் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் காண்கிறது. மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுகிறார். தனது மனைவி கயல்விழியை மாற்று வேட்பாளராகவும் அவர் முன்மொழிந்துள்ளார். இருவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று, வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். ஸ்டாலினும், விஜய்யும் கட்சி நிர்வாகிகளோடு வேட்புமனு…
தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?. 5 வருடம் என்ன செய்தார்கள்?. விஜய் பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமர்பித்தார். இதனை தொடர்ந்து பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளேன். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன். நமது வீட்டு வாசலில் இருந்து அம்மாவிடம் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக எண்ணி பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். தீயசக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என பெரம்பூர் பிரசாரத்தில் பேசிய விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை என்ற அவர், முதியவர்களுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். மேலும், 5 வருடங்களாக திமுக ஆட்சி நடத்தினார்களா அல்லது வேற எதாவது நடத்தினார்களா எனவும் சாடியுள்ளார். டீ கடையில நிம்மதியா…
சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் விஜய் இன்று (மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்க வேட்புமனு தாக்கல் செய்ய வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார் தவெக தலைவர் விஜய். அங்கு தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர். ஒரு பக்கம் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதே நேரத்தில் வியாசர்பாடியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கிருந்து பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்க்கு, அவரது ஆதரவாளர்கள் வழிநெடுக வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர். வியாசர்பாடி பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக நான்காவது முறையாகக் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறேன். கடந்த காலங்களில் இத்தொகுதி மக்கள் எனக்கு அளித்த ஆதரவும், அன்பும் ஈடுஇணையற்றது. இம்முறையும் கொளத்தூர் தொகுதி மக்கள் என்னை அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்,” என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே அவர் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொகுப்புகள் அடங்கிய நம்ம கொளத்தூர் நம்ம முதல்வர் சாதனை புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இன்று உற்சாகமாகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவருகின்றனர். அந்தவகையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ராசியான தொகுதியான கொளத்தூரில் நான்காவது முறையாகப் போட்டியிட இன்று மனுத் தாக்கல் செய்தார். சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு மனுத் தாக்கல் செய்யச் சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏற்கனவே இத்தொகுதியில் மூன்று முறை வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பது அக்கட்சியினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், தமிழக அரசியலில் புதிய வரவாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து முறைப்படி தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து கட்சித் தொண்டர்கள் புடைசூழ பிரம்மாண்ட…