Author: Editor web3
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையைத் தொடர்ந்து ககன் தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதல்வரின் கவனத்து கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான…
பீகாரை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, அந்தந்த மாநிலங்களில் விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் கோடிக்கணக்கில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டன. இதேபோல் தமிழகத்திலும், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த எஸ் ஐ ஆர் பணிகளுக்கு ஆரம்பம் முதலே தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், தேர்தல் ஆணையம் அப்பணியை மேற்கொண்டது. இந்தநிலையில், ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய…
குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி பங்குபெறும். அந்தவகையில் 2026ம் ஆண்டிற்கான குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் வகையில் தமிழக அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, 2024ல் குடைஓலை முறை குறித்து அலங்கார ஊர்தி குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது. ஆனால், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு அரசின் பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் பிரத்யேக செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக அதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தலை சந்திப்பதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியமானது தேர்தல் அறிக்கை. இதில்தான் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யும் பணிகள், திட்டங்கள், தீர்வுகள் குறித்த வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கும். இதனை முன்வைத்துதான் பிரச்சாரங்களும் நடைபெறும். அந்த வகையில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டது. அதில், டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தி தொடர்பு தலைவர்), கோவி செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்) , பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்), டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்), எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்), பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர், மருத்துவர் எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச்…
பணி நிரந்தரம் மற்றும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது, காவல் துறை வாகனச் சக்கரத்தில் தலையை வைத்தும், சாலையில் படுத்து உருண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், துப்புரவுப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ரிப்பன் மாளிகை முன்பு 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில், இன்று காலை நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் நோக்கி வந்தனர். அறிவாலயத்தின் முன்புறம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில்,…
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கட்கிழமை (நேற்று) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றார். காசா போர் நிறுத்தத் திட்டத்தின் சிக்கலான இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது, டொனால்ட் டிரம்ப், போர்க்கால சூழலில் நாட்டை வழிநடத்தி சிறப்பான செயல்பாட்டைக் காட்டிய பிரதமர் என பெஞ்சமின் நெதன்யாகுவை வெளிப்படையாகக் கௌரவித்தார். பெஞ்சமின் நெதன்யாகுவைப் புகழ்ந்து பேசிய டிரம்ப், “அவர் மிகவும் ஆபத்தான மற்றும் வேதனையான ஒரு காலகட்டத்தில் இஸ்ரேலை வழிநடத்தினார். அந்தக் காலகட்டத்தில் தவறான பிரதமர் பதவியில் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்று கூறினார். நெதன்யாகு, டிரம்ப்பின் அருகில் நின்று புன்னகைத்துத் தலையசைத்துக் கொண்டிருந்தார். காசா போர் நிறுத்தத் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் கூறினார். இதை அமைதி செயல்முறைக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும்…
வரும் பிப்ரவரி 26ம் தேதி நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தனாவும் எப்போதும் தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தாலும், அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட விழாவில் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராத சூழலில் அவர்களின் திருமணம் வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜஸ்தானின் உதய்பூரில்…
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அரிய மற்றும் தனித்துவமான பொருள் ஏலத்திற்கு வரவிருக்கிறது. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சர் டான் பிராட்மேனின் ‘பேக்கி கிரீன்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொப்பி, அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலம் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஏல நிறுவனமான லாய்ட்ஸ் ஆக்ஷன்ஸ் மூலம் நடத்தப்படவுள்ளது. ஏலத்தொகை வெறும் 1 டாலரில் தொடங்குகிறது. இந்த ஏலம் ஜனவரி 26ம் தேதி முடிவடையும். டான் பிராட்மேன் இந்த டெஸ்ட் தொப்பியை சக டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கு பரிசளித்தார். அதன் பின்னர், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தில் இருந்த இந்தத் தொப்பி, முதல் முறையாக பொது ஏலத்திற்கு வருகிறது. அதனால்தான் இது கிரிக்கெட் வரலாற்றில் மிக மதிப்புமிக்கதும், உணர்ச்சிப்பூர்வமானதுமான பாரம்பரிய நினைவுப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லாய்ட்ஸ் ஆக்ஷன்ஸ் நிறுவனத்தின் லீ ஹேம்ஸ் கூறுகையில், “இது சர் டான் பிராட்மேன் அவர்களால் நேரடியாக வழங்கப்பட்ட, உண்மையானதும் விலைமதிப்பற்றதுமான…
என்னை பொறுத்தவரை அதிமுகவும், பாஜகவும் அடிமை கட்சிகள்தான் ஆனால் யாருக்கு அடிமை?. மக்களுக்கு அடிமை என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, எப்போது பார்த்தாலும் அதிமுக அடிமை கட்சி என்றும் பாஜகவைப் பொறுத்தவரை சங்கி கட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இருவருமே டெல்லிக்கு அடிமையாக இருப்பதற்காக கூட்டணியை உருவாக்கி இருக்காங்க என்று சொல்கிறார். இதனை தற்குறி உதயநிதி பேசியிருந்தால் மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் இப்படி பேசியிருப்பதால், அவருக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது. திமுக ஆட்சியில் இருந்ததை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதிமுகவும் அதன் தலைவர்களும். ஆமாம்.. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சி தான்.. ஆனால் யாருக்கு அடிமை என்றால் மக்களுக்கு அடிமை. மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்கின்ற அடிமை கட்சி. பாஜகவும் அடிமை கட்சி…
பயிற்சியாளர் கம்பீர் நீக்கம் குறித்த வதந்திகளுக்கு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடர்பான அனைத்து ஊகங்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முற்றிலுமாக நிராகரித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான முடிவுகளைத் தொடர்ந்து கவுதம் கம்பீருக்கு மாற்றாக மற்றொருவரை வாரியம் தேடுவதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பதவிக்கு VVS லட்சுமண் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இப்போது, உயர்மட்ட BCCI அதிகாரிகள் இந்த அறிக்கைகளை முற்றிலும் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளனர். கௌதம் கம்பீரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஊடகங்களில் பரவி வரும் ஊகங்களில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் கூறினார். சுக்லாவின் கூற்றுப்படி, வாரியம் கம்பீருக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது என்றும், இந்த நேரத்தில் பயிற்சி அமைப்பில்…