Author: Editor web3
நான்காம் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று (டிச. 30) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்றிரவு மதுரை வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். இந்திய அரசு, கல்வித் துறை, கடந்த நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது… இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான ஒரு சிறந்த திட்டமாகும்…” என்று அவர் கூறினார். தமிழ் மொழியை நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். வட இந்தியாவிலிருந்து பல மாணவர்கள் தமிழ் கற்க இங்கு வந்துள்ளனர், மேலும் பல தமிழ் ஆசிரியர்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழ் கற்பிக்க வட இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இது தேசிய ஒருமைப்பாட்டின் சிறந்த சின்னமாகும்.…
சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் (டிச. 27) வரலாறு காணாத வகையில் ரூ.1,04,800க்கு விற்பனையானது. அதன்படி, நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 20-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து, ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் விற்பனையனது. இந்த நிலையில், சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு…
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வரது மரணத்தை வங்கதேச தேசியவாத கட்சி அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. கலிதா ஜியா மறைவால் அவரது கட்சித் தொண்டர்களும், மக்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். கலிதா ஜியா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. மேலும், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி கடந்த 28ம் தேதி திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 80 ரன்களிலும், ஷபாலி வர்மா 79 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் 40 ரன்களுடனும், கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…
தமிழக அரசின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்து, திமுக கூட்டணியிலும் தமிழக காங்கிரஸிற்குள்ளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அவர் பாஜகவின் குரலாக பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடுகள், சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகிய துறைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுகிறது.மனித வள மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட பல கூறுகளில் உத்தரப் பிரதேசம் பின்தங்கி உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சியை முன்னிறுத்தி சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதற்குப் பதிலாக “புல்டோசர் ஆட்சி”…
வெறுப்பு ஓரே இரவில் ஏற்படாது என்று திரிபுரா மாணவர் மரணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார். திரிபுராவைச் சேர்ந்த 2 சகோதரர்கள் மீது டேராடூனில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது: இந்த சம்பவம் ஒரு வெறுப்புக் குற்றம். பாஜகவின் வெறுப்புணர்வை வளர்க்கும் தலைமையால் இத்தகைய வன்முறை சாதாரணமாக்கப்பட்ட நீண்டகால சூழலின் விளைவு இது. டேராடூனில் ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேலுக்கு நடந்தது ஒரு கொடூரமான வெறுப்பு குற்றம். வெறுப்பு ஒரே இரவில் உருவாகாது. பல ஆண்டுகளாக, நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கம் மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மூலம் அது தினமும், குறிப்பாக நமது இளைஞர்களிடையே தூண்டப்பட்டு வருகிறது. ஆளும் பாஜகவின் வெறுப்புணர்வை பரப்பும் தலைமை அதை இயல்பாக்கியுள்ளது. மேலும், இந்தியா மரியாதை…
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போலி கடன் விளம்பரங்கள் மூலம் மக்களிடமிருந்து செயலாக்கக் கட்டணங்களும் தனிப்பட்ட தகவல்களும் பறிக்கப்படுகின்றன. மாநில காவல்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதுடன், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு, பணம் பறிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது? மேற்கு வங்க காவல்துறை தகவலின்படி, சில இணையக் குற்றவாளிகள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் போலியான விளம்பரங்களையும் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள், “உடனடிக் கடன்,” “சிபில் இல்லாமல் கடன்,” “அரசு அங்கீகாரம் பெற்ற கடன் திட்டங்கள்,” மற்றும் “சரிபார்ப்பு இல்லாமல் கடன்” போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கின்றன. மக்கள் நம்பும்படி ஏமாற்றப்பட்டு, போலியான செயலிகள், இணையதளங்கள் அல்லது…
சில்லறை பசங்களை வைத்து அன்புமணி தன்னை அவமானப்படுத்திவிட்டார் என கூறி ராமதாஸ் கண்ணீர் சிந்தியுள்ளார். சேலத்தில் பாமக சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ஒருநாள் கனவில் தனது தாயார் வந்ததாக கூறினார். அப்போது பிள்ளையை சரியாக வளர்க்காததால் நீ இப்படி கண்ணீர் சிந்துகிறார் என சொன்னதாக கூறினார். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் கூட ஏன் அன்புமணி…
அதிமுக களத்தில் இல்லை என பேசிய விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஏளனமாக பார்த்த அவர், “தவெகவுக்கு கடையை விரித்து வைத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் போகப் போகிறது. பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும். நடிகருக்கு கூடுதலாக ரசிகர்கள் இருக்கலாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறி ரசிகர் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் வெற்றி பெற முடியாது என்று சுட்டிக்காட்டினார்.“அதிமுக களத்திலேயே இல்லை எனச் சொல்ல எவ்வளவு தைரியம்? நாவடக்கம் தேவை” என்று விஜய்யின் கருத்துக்கு கடும் பதிலடி கொடுத்த செல்லூர் ராஜூ, “நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார். விஜய்யின் ரசிகர் பலத்தை…
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, முந்தைய அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுக்கப்பட்டது. அப்போது 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. இருப்பினும், இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுக்காக மக்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அத்துடன் ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்று ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இந்தநிலையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…