Author: Editor web3
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் இல்லம் இன்று திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து தவெக பல இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் அவரது வீட்டின் முன்பு பெருமளவில் திரண்டனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 111 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். தொண்டர்களின் ஆரவாரத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “தளபதி… தளபதி…” என விண்ணை பிளக்கும் தொண்டர்களின் முழக்கங்களுக்கு மத்தியில், புன்னகையோடு நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது ஒரு வரலாற்றுச் சாதனை என இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் விஜய்யின் இந்த அபார வளர்ச்சியை ஒரு தந்தையாக மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். ஆரம்பத்திலிருந்தே “நான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன்” என்ற ஆழமான தன்னம்பிக்கை விஜய்யிடம் இருந்ததாக அவர் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார். https://x.com/i/status/2051209343043838299 மேலும், ஒரு அரசியல் தலைவனாக விஜய்யின் தனித்துவமான துணிச்சலைப் பாராட்டிய SAC, “எந்தவொரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று, தனது சொந்தக் காலில் நிற்பேன்” என்ற அவரது முடிவு பாராட்டுக்குரியது என்றார். மற்றவர்களின் துணையின்றி மக்களுக்காகத் துணிச்சலாகக் களம் கண்ட விஜய்யின் இந்த வைராக்கியமே இன்று அவரை ஒரு மாபெரும் வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் நிகழ்த்தி வரும் அதிரடி மாற்றங்களை முன்னிட்டு, நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு விரல் புரட்சி.. விசிலைப் போடு..!” எனத் தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர், நடிகர் விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்; பல தசாப்தங்களாகப் பலரும் முயற்சி செய்ததை இன்று நீங்கள் சாதித்துக் காட்டியுள்ளீர்கள்” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். https://x.com/i/status/2051209183018832214 மேலும், “மக்கள் நினைத்தால் அதிகாரம் அவர்கள் கைக்கே வரும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காண ஆவலோடு காத்திருக்கிறேன்” என வரலட்சுமி பதிவிட்டுள்ளார். #TVK என்ற ஹேஷ்டேக்குடன் அவர் பகிர்ந்துள்ள இந்த வாழ்த்துப் பதிவு, சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர். விஜய் சரவணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 18,252 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். டெல்டா மண்டலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான தஞ்சாவூரில், ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே தவெக முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விஜய் சரவணன் திமுக வேட்பாளர் சண்முக ராமநாதனை வீழ்த்தி தஞ்சை மண்ணில் தவெக-வின் கொடியை நாட்டியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், பாரம்பரியக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட தஞ்சாவூரில் தவெக வென்றுள்ளது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு தவெக-வின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், தமிழக வெற்றி இகழகம் டெல்டா மாவட்டங்களில் தனது வலுவான அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலமான 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், தமிழக அரசியல் களம் ஒரு ‘தொங்கு சட்டமன்ற நிலையை நோக்கிச் செல்லும். இந்நேரத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், தமிழக வெற்றி இகழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. ஜனநாயக மரபுப்படி, ஒரு நிலையான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் பட்சத்தில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உரிமை கோரலாம். ஆளுநரின் அழைப்பை ஏற்று விஜய் பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்குக் குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்படும். இந்தச் சூழலில், அவர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டும். 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், வாக்கெடுப்பின் போது போதிய உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 118 என்ற எண்ணிக்கையைத் தொட்டால் மட்டுமே அவரது அரசாங்கம் நிலைபெறும். இதுவே ஒரு புதிய கட்சியின்…
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வந்த விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. இறுதிச் சுற்று முடிவுகளின் அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் மொத்தம் 2,730 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மதுரை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மேலூரில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பெரியபுள்ளானை எதிர்த்து களம் கண்ட விஸ்வநாதன், தபால் வாக்குகள் மற்றும் கிராமப்புற வாக்குப்பதிவு இயந்திரங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று இந்த வெற்றியை உறுதி செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மேலூர் பகுதியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மதியம் 12 மணி நிலவரப்படி, அரசியல் வரலாற்றில் முன்சொல்லப்படாத ஒரு பிரம்மாண்ட மாற்றத்தை தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக 49,09,558 வாக்குகளைப் பெற்று, ஒட்டுமொத்தமாக 10.06% வாக்கு சதவீதத்தை எட்டியுள்ளது. இது தமிழகத்தின் இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் என்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எண்ணப்பட்டதில் திமுக 32,06,554 வாக்குகளுடன் (6.57%) மற்றும் அதிமுக 30,98,310 வாக்குகளுடன் (6.35%) பெற்றுள்ள நிலையில், தவெக முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொகுதி வாரியான முன்னிலை நிலவரங்களிலும் தவெக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 106 இடங்களில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணிக் கட்சிகள் 71…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம்105 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி அக்கட்சித் தலைவர் விஜய்யின் குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இன்று காலையில் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது மகனின் கட்சி முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றியை நோக்கிச் செல்வதைக் கண்டு அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார். வீட்டின் லிப்டில் இருந்து எஸ்.ஏ.சி வெளியே வந்தவுடன், அங்கு காத்திருந்த உறவினர்கள் ஆரவாரம் செய்து, துள்ளி குதித்து அவரை வரவேற்றனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “தளபதி” விஜய்யின் அரசியல் வருகைக்கும் வெற்றிக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆதரவாக இருந்த அவரது தந்தை, இன்று கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட முன்னிலையைக் கொண்டாடும்…
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் இன்று நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் அதிரடி அலையில் நிலைகுலைந்துள்ளது. மொத்தமுள்ள தொகுதிகளில் பாஜக கூட்டணி தற்போது 180-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சியைப் பிடிப்பதற்கான பெரும்பான்மையை (148 இடங்கள்) கடந்து அரியணையை உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க வரலாற்றில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அல்லாத ஒரு கட்சி, ஆட்சியைக் கைப்பற்றப்போவது இதுவே முதல் முறை என்பதால் தேசிய அரசியலில் இது உற்றுநோக்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மம்தா பானர்ஜியின் தீவிரப் பிரச்சாரங்கள் மற்றும் ‘வங்காளத்தின் மகள்’ என்ற முழக்கங்கள் இந்த முறை பாஜகவின் வியூகத்திற்கு முன்னால் எடுபடவில்லை என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.…
கேரள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்த சிபிஎம் தலைமையிலான கூட்டணி, இந்த முறை தபால் வாக்கு எண்ணிக்கையிலிருந்தே சறுக்கலைச் சந்தித்தது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 71 என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களை நோக்கித் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இடதுசாரித் தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பமாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வருவது இடதுசாரி முன்னணிக்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது. முதல்வர் மட்டுமல்லாது, அமைச்சரவையில் உள்ள 16-க்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்கள் தங்களது…