Author: Editor web3
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கட்ந்த 50 ஆண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்த இரண்டு பிரதான திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இமாலய வெற்றியை பதிவு செய்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்புள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும் சென்னை வர உத்தரவிட்ட விஜய், அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வெற்றி வேட்பாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு, பெரும்பான்மை நிரூபிப்பபது குறித்து முடிவெடுக்க முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக, தனது கட்சி தலைமை அலுவலமான பனையூரில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததாலும், தனது தொகுதியிலேயே மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாலும், தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை தனது ராஜினாமா கடிதத்தைப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அவர் அனுப்பி வைத்தார். எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து அவர் தனது பதவியைத் துறந்துள்ளார். ஆளுநர் தற்போது கேரளாவில் இருப்பதால், ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து முதலமைச்சராகத் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அரசியல் ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது மற்றும் கூட்டணி ஒற்றுமையைத் தக்கவைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து ஸ்டாலின்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை தழுவினார். இந்தநிலையில் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் இருந்த ‘தமிழக முதலமைச்சர்’ என்ற அடையாளத்தை அதிரடியாக நீக்கியுள்ளார். தற்போது ‘திமுக தலைவர்’ என்று மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்யத் தயாராகிவிட்டார். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு புதிய அரசியல் சூழல் நிலவுகிறது. தற்போது காபந்து முதலமைச்சராகத் தொடர்ந்து வரும் மு.க.ஸ்டாலின், கேரளாவிலிருந்து சென்னை திரும்பும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் அலுவலகம் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக திமுக வட்டாரங்கள் காத்திருக்கின்றன. கேரளாவில்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மாநிலத்தில் ஒரு இழுபறி நிலை நீடிக்கிறது. இத்தகைய சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதற்காகத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருந்த இந்த முக்கியக் கூட்டம், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில், அண்டை மாநிலமான கேரளாவிலும் ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை நேற்று ஆளுநரிடம் சமர்ப்பித்தார். கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வரும் அர்லேகர், இரு மாநிலங்களிலும் புதிய அரசுகளை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்ற…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் தவெக-வுக்குச் சாதகமாக வந்துள்ளதாலும், அவர் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாலும், அவருக்கு தற்போது ‘முதலமைச்சர்’ அந்தஸ்திலான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரை முதல் பனையூர் வரையிலான சாலைகளில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. விஜய் தனது இல்லத்திலிருந்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகி வருகிறார். இதற்காக அவருக்கென பிரத்யேக ‘கான்வாய்’ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது தொண்டர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. தவெக தலைமை அலுவலகத்திலும் கூடுதல் போலீஸ்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், தவெக விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மை இல்லாமல் முன்னிலை இடங்களை வகிப்பது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், “தேர்தல் முடிவுகள்: சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்! மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மைக்கான அறப்போர் மாபெரும் வெற்றி! சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு காட்டுமன்னார்குடி மற்றும் திண்டிவனம் ஆகிய இரண்டு இடங்களில் வெற்றியையும் எஞ்சிய ஆறு…
சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியாக தவெக 108 தொகுதிகளில் வென்று சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் தவெகவுக்கு கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க அழைக்கக்கோரியும், பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கேட்டும் தவெக சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெக தலைவர் தளபதி மீது மக்கள் வைத்துள்ள அன்பும், ஆதரவும் தான் வெற்றிக்கு காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால் தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தின் அடிப்படையில் தான் ஒரு நிறுவனம் இருக்கும். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மா ஆகியோர் தியாகத்தால் வளர்ந்த அதிமுக, தற்போது தடுமாறிக்கொண்டிருக்கிறது என்றார். எங்களை பொறுத்தவரை தான் என்று ஒருவர் நினைத்தால் தெய்வம் தான் என்று காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. தெய்வத்தால் இன்று தளபதி ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெற்றி பெற்ற தனது கட்சி வேட்பாளர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வெற்றிச் சான்றிதழுடன் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று மதியத்திற்குள் சென்னை வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, குதிரை பேரம் மற்றும் தேவையற்ற அரசியல் நகர்வுகளைத் தவிர்க்கும் வகையில், தவெக எம்.எல்.ஏ-க்களை மாமல்லபுரத்தில் உள்ள ‘Four Points by Sheraton’ ரிசார்ட்டில் பாதுகாப்பாகத் தங்க வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் முகாமுக்கு இடையே, அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் விஜய் நேரில் சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாகப் பேச உள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள்,…
திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோரிடையே வெடித்துள்ள இந்த மோதல், தற்போதையை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சேகர்பாபுவின் தன்னிச்சையான முடிவுகளும், நிர்வாகிகளையும், கட்சித் தொண்டர்களை மதிக்காமல் எப்போதுமே சென்னையின் மன்னர் என்று தன்னை நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டதுமே மு.க.ஸ்டாலின் தோல்வியடைய முக்கிய காரணம் என்றும் அதே நேரத்தில் எதிர்தரப்பில் நிற்பவரின் பலத்தை பற்றி எந்த கவலையும்படாமலும் கள நிலவரத்தை புரிந்துகொள்ளாமலும் சேகர்பாபு தான்தோன்றித்தனமாக செயல்பட்ட காரணத்தாலும் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள் திமுகவினர். இந்த முறை தொகுதி மாறி, சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் என குடும்ப உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோதுகூட, சேகர்பாபு மீது இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால், கொளத்தூர் தொகுதியிலேயே ஸ்டாலின் போட்டியிட்டதாகவும், களம் திமுக ஆதரவில் இருந்து மாறி வருவது குறித்த தகவல்களை பெரிதாக கண்டுகொள்ளாமலும் அது குறித்த விவரங்களை…