Author: Editor web3
தமிழக அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிள்ளியூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ராஜேஷ் குமார், தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த தலைவரான ராஜேஷ் குமார், தற்போதுள்ள அரசியல் சூழலில் தவெக-வுடன் இணைந்து செயல்படுவது மற்றும் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அறிவிப்பு, தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசுக்கான அடுத்தகட்ட நகர்வாகவே…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் ஆட்சி அமைப்பதில் தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான விவாதங்கள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகக் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்த நிலையில், கட்சியின் மற்றுமொரு முக்கியத் தூணான எஸ்.பி. வேலுமணியுடன் அவர் நடத்தியுள்ள இந்தத் தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எம்.எல்.ஏ-க்கள் யாரும் வராத சூழலில், இந்த இரு மூத்த தலைவர்களின் ஆலோசனை அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு…
ஹரியானாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததை “ஊடுருவல்காரர்களின் ஆட்சி” என்று விமர்சித்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுவதன் மூலமே பாஜக வெற்றி பெறுவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தனது சமூக வலைதளப் பதிவில் ராகுல் காந்தி கூறுகையில், “மக்களவையில் உள்ள 240 பாஜக எம்.பி-க்களில், ஆறில் ஒரு பங்கு எம்.பி-க்கள் வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்கள். அவர்களை பாஜகவின் பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘ஊடுருவல்காரர்கள்’ என்றுதான் அழைக்க வேண்டும். ஹரியானாவைப் பொறுத்தவரை அங்குள்ள முழு அரசாங்கமுமே ஒரு ஊடுருவல் ஆட்சிதான். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் பாஜகவால் 140 இடங்களைக் கூடத் தாண்ட முடியாது” என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்கம் மற்றும் அசாம் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றி கழகம் 108 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதிமுகவில் இதுவரை இல்லாத அளவிற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. தவெக-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக கட்சியில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதால், இன்று சென்னையில் நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த ரத்து நடவடிக்கை அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, பாஜகவுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டு, தற்போதுள்ள சூழலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் தரப்பு வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், இந்த முடிவில்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்தபடியே கட்சித் தலைமை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு ஆஜராக வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள அந்தத் தனியார் விடுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட அறைகள் தவெக எம்.எல்.ஏ-க்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் வீடுகளுக்கோ அல்லது பிற இடங்களுக்கோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரைச் சந்திக்கச் செல்வது அல்லது ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போன்ற அவசரப் பணிகளுக்காக எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என்பதால், அனைவரும்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதரவை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியும் என்பதில் உறுதியாக இருப்பதால், தற்போது 108 இடங்களை வைத்துள்ள தவெக, மீதமுள்ள இடங்களுக்காக இடதுசாரி கட்சிகளான சிபிஐ , சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரிக் கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஆதரவு கோரி காங்கிரஸிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு தவெக தலைவெ விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, ஆளுநர் அர்லேகர் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய், தன்னைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து ஒரு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ஆதரவு கடிதத்துடன் நேரில் வருமாறு விஜய்க்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் ஊடகத்திற்கு ஆளுநர் அளித்த பேட்டியில், தவெக தரப்பில் உரிமை கோரப்பட்டாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்சியமைக்க இதுவரை தான் அழைப்பு விடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ள தவெக, ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநரின் இந்த கண்டிப்பான நிலைப்பாடு விஜய்க்குச் சற்று பின்னடைவாகவும் அதேசமயம் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த நிபந்தனையை…
இந்தியர்கள் உலக அளவில் மீண்டும் ஒருமுறை தங்களின் பொருளாதார பலத்தை நிரூபித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சர்வதேச புலம்பெயர்ந்தோர் முகமை வெளியிட்டுள்ள ‘உலக இடப்பெயர்வு அறிக்கை 2026’-ன் படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் சுமார் 137 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11.45 லட்சம் கோடி) பணத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இது உலக நாடுகளிலேயே மிக அதிகப்படியான தொகையாகும். இந்த அறிக்கையின்படி, உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து வரும் பண வரவில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8.35 லட்சம் கோடி) என்ற மைல்கல்லைத் தாண்டிய முதல் மற்றும் ஒரே நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருவது…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் மே 7-ம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 10 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், மதச்சார்பற்ற அரசை அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முக்கிய அரசியல் நகர்வின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளதாகவும், கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் வெற்றியைப் பாராட்டி ராகுல் காந்தி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு…
மேற்கு வங்கத்தில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது தோல்வியை ஏற்க மறுத்துள்ள மம்தா பானர்ஜி, பாதுகாப்புப் படையினர் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பவானிபூர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் சென்றபோது சிஆர்பிஎப் வீரர்கள் தன்னை ஒரு பெண் என்றும் பாராமல் அநாகரீகமாக நடத்தியதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த மத்தியப் படை வீரர்கள் ரவுடிகளைப் போல நடந்துகொண்டனர். அவர்கள் எனது வயிற்றிலும், முதுகுப் பகுதியிலும் காலால் எட்டி உதைத்தனர். நான் அங்கிருந்தபோது திட்டமிட்டே சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டன. என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளி அங்கிருந்து வெளியேற்றினர். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட அவர்களிடம் இல்லை,” என்று 71 வயதான மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார். தனது தோல்வி குறித்துப் பேசிய அவர், “நான் பதவி விலகும்…