Author: Editor web3
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க விஜய்க்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவும், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது ஆதரவை திரட்டவும் விஜய் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். மேலும் விசிக, இடதுசாரிகள் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், போதிய பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதாவது முதல்வராக பதவியேற்ற 2 நாட்களில் அதாவது மே 9ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என…
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடமும் ஆதரவு கோரும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பிரமுகர்களான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முதலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு,…
தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமைக் கோரி கடிதம் வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக ஆகியவற்றின் உள்ளிட்ட கட்சிகளோடு தவெக பேச்சுவார்த்தி நடத்தி வருகிறது. இதற்கிடையே தவெக தலைவர் விஜயை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக ஆதரவு கடிதத்தை வழங்கினர். காங்கிரஸிடம் ஐந்து இடங்கள் உள்ளன. இந்த நிலையில், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளார். கிண்டியில் உள்ள மக்கள் பவனில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் போது ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் ஆளுநரிடம் கடிதம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உட்பட தவெக…
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்வு முடிவுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதனால், திட்டமிட்டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவுகளை வெளியிட முடியாது. புதிய அரசு அமைந்ததும், உரிய ஒப்புதல் பெற்று தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’…
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை வந்தடைந்தார். தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதற்கான அறிகுறியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். இதற்காக, தமிழகப் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் இன்று மதியம் கேரளாவிலிருந்து சென்னை வந்தடைந்தார், கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு (ஆளுநர் மாளிகை) சென்றடைந்தார். இன்று மாலை சரியாக 3:30 மணி அளவில் ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தனது கட்சியின் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்க உள்ளார். சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையான 118 இடங்கள் தற்போது கைவசம் இல்லை என்றாலும், தேர்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கத் தங்களை அழைக்குமாறு விஜய் கோரிக்கை வைக்கவுள்ளார். இதற்கிடையே,…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கான போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிள்ளியூர் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமார் தலைமையில், அக்கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பின் போது, வருகை தந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் சால்வை அணிவித்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைய காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்து, அதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தைத் தவெக தலைவர் விஜய்யிடம் எஸ். ராஜேஷ் குமார் வழங்கினார். ஏற்கனவே 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக-வுக்கு, காங்கிரஸின் இந்த…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தவெகவுடன் இணைந்துவிட்டது. இதனையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், “நீங்கள் வெற்றி பெறும் நேரங்களில் மட்டுமல்ல, இது போன்ற இக்கட்டான காலங்களிலும் ஒரு நண்பனாக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்று உருக்கமாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கடந்து இருவருக்கும் இடையே உள்ள நீண்ட கால நட்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பு, திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக வங்காளத்தில் அரியணை ஏறியுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி, மக்களின் மாற்றத்திற்கான வேட்கையை உறுதிப்படுத்தின. கடந்த தேர்தலில் வெறும் 77 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இந்த முறை அசுர வளர்ச்சி கண்டு 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி 4-வது முறையாகப் பதவியேற்கும் கனவைத் தகர்த்து, பாஜகவின் இந்த வெற்றி இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்காளத்தில் தாமரை மலர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பாஜகவின் செல்வாக்கு மேலும்…
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் இன்று மிக முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அங்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக, காவல்துறையின் கோர்செல் (Core Cell) டிஐஜி தர்மராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நீலாங்கரை இல்லத்திற்கு வந்து விஜய்யைச் சந்தித்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு, பனையூர் தலைமை அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரையிலான போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள இடத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விஜய் பனையூர் அலுவலகம் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க இந்திய தேசிய காங்கிரஸ் முன்வந்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அரசியலமைப்பு விழுமியங்களில் நம்பிக்கையுள்ள ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கு அரசாங்கத்திற்காக தெளிவானத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்பை மதிப்பதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் காங்கிரஸின் அரசியலமைப்பு கடமையாகும்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் (Communal Forces) கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் விதித்துள்ளது. மேலும், இந்தத் தவெக – காங்கிரஸ் கூட்டணி வெறும் ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவைத்…