Author: Editor web3

விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், பதவியேற்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆட்சி அமைப்பதற்கான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். பேச்சுவார்த்தையின் முடிவில், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த விஜய்க்கு ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நான் நிச்சயம் நிரூபிப்பேன்” என ஆளுநரிடம் விஜய் உறுதியளித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடித் திருப்பத்திற்கு முக்கியக் காரணமாக,…

Read More

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு திக் திக் நிலையை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அதன் பலம் 113-ஆக அதிகரித்துள்ளது. இந்த பலத்துடன் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வராதது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியை அழைக்காத ஆளுநரின் முடிவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை திடீர் திருப்பமாக, ஆளுநர் மேற்கொள்ளவிருந்த கேரளப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் இந்தத் திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் அல்லது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று காலை…

Read More

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்க, தமிழக வெற்றிக் கழகம் தற்போது அதிரடியாக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை அழைக்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று தவெக தரப்பு கருதுகிறது. இதனால், “தனிப்பெரும் கட்சி” என்ற அடிப்படையில் தங்களுக்கு உடனடியாக அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்ய விஜய் தலைமையிலான தவெக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது. இந்த சட்டப் போராட்டத்தின் காரணமாக, தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கும் வரை, பதவியேற்பு விழாவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த விழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா மேலும்…

Read More

தமிழக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடி வரும் நிலையில், மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை மீண்டும் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்கியுள்ள நிலையில், தற்போது தவெக கூட்டணியின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்களே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அந்தப் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகை இதுவரை தவெக-விற்குப் பச்சைக்கொடி காட்டாத சூழலில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் விஜய், அடுத்தகட்டமாகத் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் ஆளுநருடனான சந்திப்பு உறுதியானால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நிலவும் இழுபறிக்கு ஒரு முடிவு…

Read More

தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், வெள்ளி விலையில் இன்று பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம்…

Read More

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் சில இடங்கள் குறைவாக இருப்பதால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்காத நிலையில், தவெக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஒருவித பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தவெகவினர் மற்றும் மாற்றுத் திறனாய்வு அரசியல் கட்சியினரிடையே மோதல் போக்கு ஏற்படலாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை…

Read More

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழா அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், நேற்று ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த போதிலும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கூடுதல் ஆவணங்கள் மற்றும் ஆதரவு கடிதங்களை ஆளுநர் மாளிகை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாத சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான அரசியல் சூழலைக் கையாள, தவெகவின் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று காலை 10 மணிக்குள் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என விஜய் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, தவெகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆளுநரின் தாமதத்திற்கு…

Read More

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்கள் நீக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய வடிவமைப்பு வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்களை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆதார் அட்டையை மறுவடிவமைப்பு செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்தொடருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டையைப் பெறுவதைத் தடுக்க ஒரு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த அந்த மனுவில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இனி புதிய…

Read More

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் தலைவர் விஜய் தனக்குக் கடிதம் அனுப்பியுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தரப்பிலிருந்து ஆதரவு கோரப்பட்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும், விசிக முன்வைத்து வரும் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கை முழக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தவெக-விற்கு ஆதரவளிப்பதில் உள்ள சாதக பாதகங்கள் மற்றும் இது எதிர்கால அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறிய திருமாவளவன், இது தனிநபர் முடிவல்ல, கட்சியின் கூட்டு முடிவு என்பதை வலியுறுத்தினார். இது குறித்து விவாதிக்க நாளை காலை…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க விஜய்க்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவும், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது ஆதரவை திரட்டவும் விஜய் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். மேலும் விசிக, இடதுசாரிகள் மற்றும் சில சுயேட்சை உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், போதிய பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதாவது முதல்வராக பதவியேற்ற 2 நாட்களில் அதாவது மே 9ம் தேதி  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என…

Read More