Close Menu
    What's Hot

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!
    Featured

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    Editor web2By Editor web2July 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 05 13h37m20s400
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கோபிசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அமைச்சர் நிர்மல்குமாருக்கு அடுத்தடுத்த அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், திட்டமிட்ட நேரத்திற்கு சுமார் 10 நிமிடங்கள் முன்னதாகவே காலை 9.50 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தார்.

    ஆனால், அப்போது மேடையில் விழா ஏற்பாட்டாளர்கள், சங்க நிர்வாகிகள், அழைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய பிரமுகர்கள் யாரும் வராத நிலையில், பின்னணியில் தவெக கட்சிப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

    மேடைக்கு விரைந்து சென்ற அமைச்சர், அங்கு யாரும் இல்லாததை பார்த்ததும் அப்செட் ஆனார். அவரிடம், “இன்னும் சில நிமிடங்களில் எம்.எல்.ஏ.க்களும், சங்க நிர்வாகிகளும் வந்து விடுவார்கள்” என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    vlcsnap 2026 07 05 13h38m13s424

    ஆனால், தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், காத்திருக்க முடியாது எனக் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு, மேடையில் அமராமலும், குத்துவிளக்கு ஏற்றாமலும், அரங்கில் இருந்தவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இதனால், அமைச்சர் பங்கேற்பார் என எதிர்பார்த்திருந்த விழாவில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அமைச்சர் நேரத்திற்கு முன்பாக வந்ததும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுமையாக தயாராக இல்லாததும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    Madurai Nirmalkumar TamilNaduPolitics TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!
    Next Article “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!
    Editor web2
    • Website

    Related Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    July 5, 2026

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    July 5, 2026

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!

    “சோஃபா வந்ததும் சிலர் சென்றுவிட்டார்கள்…” – உதயநிதி ஸ்டாலின்

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.